Posts

Showing posts from March, 2024

பொறுமை மொழிகள் - 2

பொறுமை மொழிகள் Patience Quotes  1. Adapt the pace of nature . Her secret is patience - Ralph Waldo Emerson இயற்கையின் போக்கைக் கைக்கொள்ளுங்கள் . அதன் இரகசியம் பொறுமை . 2. Everybody wants to be somebody ; nobody wants to grow - Goethe எல்லோரும் யாராவது மாதிரி ஆகவேண்டும் என்று விரும்புகிறார்கள் . யாரும் தன்னளவில் தனித்துவமாக வளர வேண்டும் என்று விரும்புவதில்லை .  3. Never mistake motion for action - Ernest Hemingway அசைவை இயக்கம் என்பதாகத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் . 4. Real action is in silent moments - Ralph Waldo Emerson உண்மையான இயக்கம் அமைதியான தருணங்களில் இருக்கிறது . 5. The two most powerful warriors are patience and time - Leo Tolstoy வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி கொள்ள பொறுமை மற்றும் நேரம் என்ற வீராதி வீரர்களை உங்கள் பக்கம் கொள்ளுங்கள் . 6. One-half of troubles of this life can be traced to saying YES too quickly and not saying NO soon enough . வாழ்க்கையின் ஒரு பாதி பிரச்னைகளுக்கான காரணம் வேண்டும் என்பதை விரைவில் சொல்லி விடுவதும் வேண்டாம் என்பதைத் தாமதமாகச் சொல்வத...

பங்கு கேள்வி பதில் - 5

பங்கு கேள்வி பதில் -5 கேள்வி : டாடா சன்ஸ் IPO வருமா ? பதில் : வரும்ம்ம் ... ஆனா வராது ! நகைச்சுவை ஒரு பக்கம் இருக்கட்டும் . டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீதம் பங்குகள் டாடா அறக்கட்டளைகள் வசம் உள்ளன . 18.4 சதவீதம் Pallonji Mistry குழுமம் வசம் உள்ளது . மீதி 15.6 சதவீதப் பங்குகள் டாடா கெமிக்கல்ஸ் , டாடா மோட்டார்ஸ் , டாடா பவர் , இந்தியன் ஹோட்டல்ஸ் , டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் போன்ற பட்டியலிடப்பட்ட டாடா நிறுவனங்களிடமும் மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்ட சில தனி நபர்களிடமும் உள்ளன . டாடா சன்ஸ் நிறுவன வருமானம் பட்டியலிடப்பட்ட டாடா நிறுவனங்கள் வழங்கும் பங்காதாயம் மூலமாகக் கிடைக்கப் பெறுகிறது . பங்காதாயம் என்றால் அதனைச் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள் . சென்ற நிதியாண்டில் இது 33250 கோடி ரூபாய் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள் . டாடா சன்ஸ் நிறுவனத்தைச் சந்தையில் பட்டியலிட்டால் இலட்சம் கோடிகளின் கணக்கில் மதிப்பு விடுவிப்பு (value unlocking) எட்டப்படும் என்பது உண்மை தான் . ஆனால் அதனை விட நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படுவதை டாடா சன்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது . நிறுவனத்தைப் பட்டியலிட்...

Earnest Hemingway - எழுதுவது குறித்த எண்ணங்கள்

Earnest Hemingway - எழுதுவது குறித்த எண்ணங்கள் Earnest Hemingway Quotes on Writing 1. There is no friend as loyal as a book . புத்தகங்களைப் போன்ற நம்பிக்கையான நண்பர்கள் எவருமிலர் . 2. There is nothing to writing. All you do is sit down at a typewriter cut your vein and bleed . எழுதுவது என்பது ஒன்றும் கடினமான ஒரு காரியமில்லை . தட்டச்சுப் பொறியின் முன் அமருங்கள் . நரம்பை அறுத்துக் கொண்டு குருதியைக் கொட்டுங்கள் .  3. The first draft of anything is shit . எதன் முதல் வரைவும் வெறும் குப்பை மட்டுமே .  4. In order to write about life first you must live it .  வாழ்க்கை குறித்து எழுதுவதற்கு முன்னர் வாழ்ந்து பார்க்க வேண்டும் . 5. I like to listen. I have learned a great deal from listening carefully . Most people never listen .  நான் கவனிப்பதை விரும்புகிறேன் . கவனிப்பதனால் நான் பெரும்பலன்களை அடைந்திருக்கிறேன் . பெரும்பாலோனோர் கவனிப்பதில்லை .  6. There is no rule on how to write .  Sometimes it comes easily and perfectly; sometimes it's like drilling rock and...

பங்குச்சந்தை பதில்கள் - 9

பங்குச்சந்தை பதில்கள் - 9 கேள்வி : சந்தை சரியும் போது , காலடியில் பூமி நழுவுவது போல் இருக்கிறது ? பதில் : உண்மை தான் . ஆனால் இந்த பூமி உயர்ந்து வரும் பூமி என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் . முன்பொரு காலத்தில் அது 7000 அடி உயரத்தில் இருந்தது . தற்போது 70000 என்று இருக்கிறது . கேள்வி : பணவீக்கம் ஆளாளுக்கு மாறுமா ? பதில் : கண்டிப்பாக மாறும் . கல்விப் பணவீக்கம் , உணவுப் பணவீக்கம் , மருத்துவப் பணவீக்கம் ... என்று பணவீக்கத்தில் பலவகை உண்டு . இவற்றில் எதில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கான பணவீக்கம் மாறும் . கேள்வி : புத்தக மதிப்பும் உள்ளார்ந்த மதிப்பும் ஒன்றா ? வேறு வேறா ? பதில் : புத்தக மதிப்பு (Book Value) நிறுவனத்தின் சொத்துகளிலிருந்து கடனைக் கழித்தால் கிடைக்கப்பெறுவது . உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic Value) என்பது நிறுவனத்தின் எண்சார் (Quantitative) காரணிகளையும் பண்புசார் (Qualitative) காரணிகளையும் கொண்டு கணக்கிடப்படுவது . உள்ளார்ந்த மதிப்புக் கணக்கீடுகள் ஆளாளுக்கு மாறுபடும் . மேலும் அது தனிப்பட்ட எண்ணாக இருக்காது . Range of values என்ற வகையில் அது ஒரு விலைப்பட்டையி...

பங்குத்தோட்டம்

பங்குத்தோட்டம் 1. If you tickle the earth with a hoe she laughs with a harvest - Douglas Jerrold மண்வெட்டியால் பூமிக்குக் கூச்சம் காட்டினால் அவள் அறுவடை என்கிற புன்னகை பூக்கிறாள் . 2. Farming is a profession of hope - Brett Brian விவசாயம் என்பது நம்பிக்கை சார்ந்த தொழில் . 3. One of the most delightful things about a garden is the anticipation it provides - W E Johns ஒரு தோட்டத்தைப் பற்றிய மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயங்களில் ஒன்று அது வழங்கும் எதிர்பார்ப்பு . 4. We live our lives by the seeds of our plants . நாம் விதைக்கும் விதைகளால் நாம் வாழ்கிறோம் . 5. This farm is more than land and crops . It's our family's heritage and future . இந்தப் பண்ணை , நிலம் மற்றும் பயிர்களால் மட்டும் ஆனதல்ல . இது எங்கள் குடும்பத்தின் பாரம்பரியம் மற்றும் எதிர்காலம் . 6. Farming isn't a battle against nature , but a partnership with it . It is respecting the basics of nature in action and ensuring that they continue - Jeff Koehler விவசாயம் என்பது இயற்கைக்கு எதிரான போராட்டம் அல்ல , அதனுடன் கூட்டாக ச...