Earnest Hemingway - எழுதுவது குறித்த எண்ணங்கள்
Earnest Hemingway - எழுதுவது குறித்த எண்ணங்கள்
Earnest Hemingway Quotes on Writing
1. There is no friend as loyal as a book .
புத்தகங்களைப் போன்ற நம்பிக்கையான நண்பர்கள் எவருமிலர் .
2. There is nothing to writing. All you do is sit down at a typewriter cut your vein and bleed .
எழுதுவது என்பது ஒன்றும் கடினமான ஒரு காரியமில்லை . தட்டச்சுப் பொறியின் முன் அமருங்கள் . நரம்பை அறுத்துக் கொண்டு குருதியைக் கொட்டுங்கள் .
3. The first draft of anything is shit .
எதன் முதல் வரைவும் வெறும் குப்பை மட்டுமே .
4. In order to write about life first you must live it .
வாழ்க்கை குறித்து எழுதுவதற்கு முன்னர் வாழ்ந்து பார்க்க வேண்டும் .
5. I like to listen. I have learned a great deal from listening carefully . Most people never listen .
நான் கவனிப்பதை விரும்புகிறேன் . கவனிப்பதனால் நான் பெரும்பலன்களை அடைந்திருக்கிறேன் . பெரும்பாலோனோர் கவனிப்பதில்லை .
6. There is no rule on how to write .
Sometimes it comes easily and perfectly; sometimes it's like drilling rock and then blasting it out with charges.
எழுதுவதற்கு என்று விதிமுறைகள் ஏதுமில்லை . சில சமயம் அது எளிமையாக இருக்கும் . சில சமயம் பாறையைக் கடைவது மாதிரி அது கடினமாக இருக்கும் .
7. My aim is put down on paper what I see and what I feel in the best and simplest way .
நான் கண்டுணர்ந்தவைகளை சிறப்பாகவும் எளிமையாகவும் பதிவு செய்வதே என் குறிக்கோள் .
8. I never had to choose a subject - my subject rather chose me .
என்னுடைய பதிவுகளை நான் தேர்ந்தெடுப்பதில்லை . மாறாகப் பதிவுகள் என்னைத் தேர்ந்தெடுக்கின்றன .
9. As a writer you should not judge , you should understand .
எழுத்தாளர் என்பவர் எடை போடுபவராக இருக்கக்கூடாது . புரிந்து கொள்பவராக மட்டுமே இருக்கவேண்டும் .
10.The hard part about writing a novel is finishing it .
புதினம் ஒன்றை எழுதுவதன் கடினமான பாகம் அதனை எவ்விதம் நிறைவு செய்வது என்பது தான் .
Comments
Post a Comment