Posts

பங்கு கேள்வி பதில் - 8

பங்கு கேள்வி பதில் - 8 கேள்வி : பங்கு முதலீடுகளில் Consistency க்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்? பதில் : நிறுவனப்பங்கு ஒன்றின் ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS) 100 ரூபாய் என்று கொள்ளலாம். நிறுவனம் ஆண்டாண்டு ஒரே சீராக 15 சதவீதக் கூட்டுப்பெருக்கம் என்ற அளவில் நிகர இலாபம் ஈட்டுவதாகக் கொள்ளலாம். அதன் EPS ஆண்டுக் கணக்கில் ரூ.115, 132, 151, 173, 198 ... என்றவாக்கில் வளர்ந்து வரும். இன்னொரு நிறுவனம் முதல் நான்கு ஆண்டுகளில் 20 சதவீதம் கூட்டுப் பெருக்கம் மற்றும் ஐந்தாவது ஆண்டு 20 சதவீத எதிர்மப் பெருக்கத்திற்கு உள்ளாவதாகவும் கொள்ளலாம். அதன் EPS ரூ.120, 144, 165, 198, 159 ... என்றவாக்கில் வளர்ந்து வரும். முதல் நிறுவனம் குறைவான சதவீதத்தில் வளர்ந்து வந்தாலும் அதன் சீர்மை நிறை (consistency) காரணமாகக் கூடுதல் வருமானத்தை ஈட்டுவதாக இருக்கும். சந்தை இந்த ஒரே சீரான வருமானத்திற்கு அதிக விலை வருவாய் விகிதத்தை வழங்கும். Pidilite Industries பங்கு உயர் PE விகிதங்களில் வர்த்தகமாவதற்கு அதன் consistency முக்கியமான காரணம். கேள்வி : Infosys நிறுவனம் இன்றைய தேதியில் 19856 bagger. ஆனால் TCS வெறும் இத்தனை 32 bagger மட...

கல்லிலே கலை வண்ணம் கண்டான் ...

கல்லிலே கலை வண்ணம் கண்டான் ... (Michelangelo- மணி மொழிகள்) 1. It is well with me only I have a chicel in my hand. கையில் உளி ஒன்று இருந்தால் அது மட்டும் எனக்குப் போதும். 2. Every block of stone has a statue inside it and it is the task of the sculptor to discover it. கல்லிலே கலை வண்ணம் காண்பதே சிற்பியின் வேலை. 3. The marble not yet carved can hold the form of every thought the greatest artist has. செதுக்கப்படாத பளிங்குக்கல் கலைஞனின் ஒவ்வொரு எண்ணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.  4. The more the marble wastes, the more the statue grows. எவ்வளவுக்கு எவ்வளவு பளிங்கு கரைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சிலை வளர்கிறது. 5. I saw the angel in the marble and carved until I set her free. பளிங்குக்கல்லில் அந்த தேவதை கட்டுண்டு கிடப்பதை நான் கண்டேன், பின்னர் அந்தக் கல்லைச் செதுக்கி அவளை விடுவித்தேன். 6. A man paints with his brains and not with his hands. ஒரு மனிதன் மூளையைக் கொண்டு வண்ணம் தீட்டுகிறான், கைகளைக் கொண்டு அல்ல. 7. It is necessary to keep one's compass in one's eyes and not in the hand, ...

பங்குச்சந்தை பதில்கள்- 16

பங்குச்சந்தை பதில்கள்- 16 கேள்வி: உலகப் பங்குச்சந்தைகளின் எதிர்காலப் போக்கு என்னவாக இருக்கும் என்று கணிக்க முடியுமா? பதில்: இன்றைய சூழ்நிலையில் மட்டுமல்ல, எந்த சூழ்நிலையிலும் பொருந்துவதான ஒரே கணிப்பு: எதிர்பாராததை எதிர்பாருங்கள்! கேள்வி: ஒரு காளைச்சந்தையில் முதலீட்டு வெளிச்சத்தில் இருக்கும் சில துறைகள் அடுத்த காளைச்சந்தையில் பங்கேற்காது என்பது உண்மையா? எனில் அத்தகைய துறை சார்ந்த நிறுவனப்பங்குகளை விற்று விட வேண்டுமா? பதில்: பங்குச்சந்தை முதலீடுகளில் வெற்றி பெற உடைமை மனப்பான்மை (ownership mentality) கொள்வது அடிப்படையான ஒன்று. வாகன உதிரி பாகங்கள் (Auto ancillary) துறை முதலீட்டு வெளிச்சத்தில் இருக்காது என்று Samvardhana Motherson International நிறுவனர் அதன் பங்குகளை விற்று விடுவாரா? Samvardhana Motherson International (Formerly Motherson Sumi Systems) நிறுவனப்பங்குகள் அதன் IPO விலிருந்து நாளது தேதி வரை 30 சதவீத CAGR கொடுத்திருப்பது இங்கே கவனம் பெறுகிறது.  கேள்வி : ஒருவர் தனது வருமானத்தில் எத்தனை சதவீதம் சேமிக்க வேண்டும்? பதில் : (பங்கு) முதலீடுகள் மூலமாக நமக்குக் கிடைக்கப்பெறும் வர...

மனிதத்தின் கூர்மதி

மனிதத்தின் கூர்மதி Human Ingenuity  The stock market is the only place where anyone can invest in human ingenuity- Ben Carlson  மனிதத்தின் கூர்மதியில் யாவரும் முதலீடு செய்யக் கூடியதான ஒரே இடம் பங்குச்சந்தை.     *               *                   *   பங்குச்சந்தை என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணம் இருக்கலாம். அடிப்படையான ஒரு சிந்தனை என்ற அளவில் பங்குச்சந்தை என்பது பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கான இடம் என்று ஒரு சிலர் நினைக்கலாம். இன்னொரு பக்கம் அது செல்வ உருவாக்கத்திற்கான ஒரு தளம் என்பதாக சிலர் நினைக்கலாம். அது சூதாட்டத்திற்கான இடம் என்று சிலர் நினைக்கலாம். ஒரு சிலர் அம்பானியின் சொத்து மதிப்பே தின அளவில் இலட்சம் கோடி நஷ்டத்திற்கு உள்ளாகிறது என்று அஞ்சியவர்களாக முதலீட்டை மேற்கொள்ளாமல் இருக்கலாம். அதற்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. எனில், பங்குச்சந்தை என்பது உண்மையில் என்ன? பங்குச்சந்தை என்பதை மனிதத்தின் கூர்மதியில் யாவரும...

உலகப் பணமொழிகள் - 2

உலகப் பண மொழிகள்- 2 1. நாட்பட்ட கடன் தீர்ந்து போன கடன். 2. ஒரு மேட்டை வெட்டினால் தான் ஒரு பள்ளம் நிரம்பும். 3. பெற்றோர் விட்டுச் செல்லும் செல்வத்தை விட ஒரு கலை மேலானது. 4. ஓடினால் மட்டும் போதாது, உரிய காலத்தில் புறப்படவும் வேண்டும். 5. கம்பளம் விற்றுக் கடனை அடைக்க வேண்டும் என்றால் கம்பளி ஆட்டை விற்கக்கூடாது. 6. துரதிர்ஷ்டத்தை விட நல்அதிர்ஷ்டத்தைத் தாங்கப் பெருங்குணங்கள் தேவை. 7. கடவுள் உனக்கு நிறைய ஆடுகளைக் கொடுப்பார். ஆனால், நீ தான் மந்தையைக் காத்துக் கொள்ள வேண்டும். 8. கடலில் ஒரு துளி விழுந்தாலும் அந்த அளவுக்குக் கடல் பெரிதாகும். 9. பெரும் செல்வம் சேர்க்க அதிகக் கஷ்டம் தேவையில்லை. முதலில் சிறிதளவு சேர்க்கவே சிரமப்பட வேண்டும். 10.  கரண்டியால் சேகரித்ததை மண்வெட்டியால் இறைக்காதீர்கள்.

பைசா நகரத்தின் சாயாத கோபுரம்

பைசா நகரத்தின் சாயாத கோபுரம் ஒரு பைசா 30 நாட்களுக்குத் தொடர்ந்து இரட்டிப்பானால் என்னவாகும்? 1 - 0.01 2 - 0.02 3 - 0.04 4 - 0.08 5 - 0.16 6 - 0.32 7 - 0.64 8 - 1.28 9 - 2.56 10 - 5.12 11  - 10.24 12 - 20.48 13 - 40.96 14 - 81.92 15 - 163.84 16 - 327.68 17 - 655.36 18 - 1310.72 19 - 2621.44 20 - 5242.88 21 - 10485.76 22 - 20971.52 23 - 41943.04 24 - 83386.08 25 - 167772.16 26 - 335544.32 27 - 671088.64 28 - 1342177.28 29 - 2684354.56 30 - 5368709.12 ஆயிரம் வார்த்தைகளால் தெரிவிக்க முடியாத செய்தியை ஒரு அட்டவணை தெரிவித்து விடுகிறது.  மேலே உள்ள அட்டவணையை எப்படிப் பார்த்தீர்கள்? ஒன்று இரண்டு என்று சற்று நிதானித்துப் பார்த்து விட்டு சட்டென்று முப்பதுக்கு வந்து விட்டீர்கள், இல்லையா? மறுபடி ஒருமுறை தொடக்கத்திலிருந்து பாருங்கள். தினசரி இரட்டிப்பாகும் ஒரு பைசா ஒற்றை இலக்கத்தைத் தாண்டவே பத்து நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இருபது நாட்களில் கூட ஆகப்பெரிய அளவுகளில் அது கூடவில்லை. கடைசி பத்து நாட்களில் அது கொஞ்சம் வேகமெடுக்கத் தொடங்குகிறது. அதுவும் கடைசி நாள் மட்டும் 2684354.56 என்ற அளவில் அதி ...

கூட்டு விளைவு

கூட்டு விளைவு The Compound Effect  1. The first rule of compound interest is to never interrupt it unnecessarily - Charlie Munger கூட்டு வட்டியின் முதல் விதி அதனைத் தேவையின்றி இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக்கூடாது என்பதாகும். 2. My life has been the product of compound interest - Buffett எனது வாழ்க்கை கூட்டு வட்டியால் ஆனது. 3. When it comes to compounding, percentage losses and gains are not equal . Avoid large losses - Frank Martin கூட்டுப்பெருக்கத்தில் ஒவ்வொரு சதவீத இலாபமும் நஷ்டமும் சமம் அல்ல. எனவே பெரும் நஷ்டத்தைத் தவிருங்கள். 4. Relatively small divergences in annual compounded returns over many years result in dramatic differences in terminal wealth - Nick Train கூட்டுப்பெருக்கத்தின் சிறிய மாறுபாடுகள் கூட  நாளடைவில் உங்கள் செல்வத்தின் இறுதி மதிப்பில் மாபெரும் மாற்றங்களை நிகழ்த்துவதாக இருக்கும். 5. The compound effect is the principle of reaping huge rewards from a series of small, smart choices - Darren Hardy கூட்டு விளைவு என்பது தொடர்ச்சியான சிறிய சிறந்த தேர்வுகளால் ஆகப்பெ...