Posts

கதைகளின் கதை

கதைகளின் கதை Narrative fallacy ' Jeff bezos , அமேசான் என்கிற இணையவழி , பொருட்கள் விற்கும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் . புத்தகம் விற்பதாகத் தொடங்கப்பட்ட அமேசான் இன்று பொங்கல் பொருட்கள் வரை அனைத்துப் பொருட்களையும் விற்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது . அதன் சந்தை மதிப்பு 1.75 டிரில்லியன் அமெரிக்க டாலர் . அது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது . Bezos , அதன் பங்குகள் மூலமாக உலகப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார் ' அமேசான் நிறுவனத்தைக் குறித்து இவ்வாறு விளக்குவது narrative fallacy ன் பாற்பட்டது . எந்த ஒரு நிறுவனமும் இவ்வாறு நேர்கோட்டில் பயணித்திருக்காது . நாம் அமேசான் நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்து அதன் இன்று வரையிலான கதையை ஒரு பருந்துப் பார்வையாகப் பார்க்கலாம் . Bezos , அமேசான் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னர் D E Shaw என்கிற நிதி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் . அப்போது இணையத்தளங்கள் மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாவதைக் குறித்த வரைபடம் ஒன்று அவருக்குப் பார்க்கக் கிடைக்கிறது . இப்போது Bezos முன்னர் இரண்டு வாய்ப்புகள் ... ஒன்று தான் ஏற்கெனவே...

பழமொழி பதில்கள் - 2

பழமொழி பதில்கள் - 2 கேள்வி : குறியீட்டு நிதிகள் சராசரி வருமானத்தை மட்டுமே தருவதாக இருக்கையில் ஏன் அவற்றில் முதலீடு செய்ய வேண்டும் ? பதில் : மணிக்கு ஓர் அங்குலமே ஆனாலும் ஒரு நாளைக்கு ஓர் அடியாகும் . கேள்வி : Futures and Options நிலைப்பாடுகள் ஏன் தொடர்ந்தவாக்கில் பலன் தருவதாக இல்லை ? பதில் : நெருப்புப் பந்தலிலே மெழுகு பொம்மை ஆடுமா ? கேள்வி : முதலீடுகளுக்கான வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து கொண்டே வருகிறது . தனிப்பட்ட முறையில் வட்டிக்கு விடலாமா ? பதில் : கையால் கொடுத்ததைக் காலால் வாங்க வேண்டும் . கேள்வி : பங்குத் தொகுப்பைப் பழுது பார்ப்பது குறித்து ? பதில் : மனிதனால் பராமரிக்கப்பட்ட தோட்டத்தை விட இயற்கையால் பராமரிக்கப்பட்ட காடு செழிப்பாகக் காணப்படுகிறது . கேள்வி : IPO ல் வாங்கப்பட்ட ஒரு ITC பங்கு 413 பங்குகளாக வளர்ந்திருக்கிறது என்பதாகப் படித்தேன் . இது உண்மை தானா ? பங்குகள் இத்தனை வளர்ச்சிக்கு உள்ளாகுமா ? பதில் : ஒரு மரத்திலுள்ள கனிகளை எண்ண முடியும் . ஒரு கனியினுள் இருக்கும் மரங்களை எண்ண முடியாது . கேள்வி : குறுகிய காலத்தில் கூடக் கூடிய பங்குகளை இனங்கண்டு முதலீடு செய்து அவற்றைக் கை ...

கணிப்பு மொழிகள்

கணிப்பு மொழிகள்  Forecasting Quotes 1. There are two classes of forecasters : Those who don't know - and those who don't know they don't know - John Kenneth Galbraith முன் கணிப்பாளர்கள் இரண்டு விதம் : முன் கணிக்கத் தெரியாதவர்கள் , தங்களுக்கு முன் கணிக்கத் தெரியாது என்று தெரியாதவர்கள் . 2. Wall Street indices predicted nine out of the last five recessions - Paul Samuelson பங்குச்சந்தை , கடைசி ஐந்து பொருளாதார மந்த நிலைகளை (recession) ஒன்பது முறை கணித்திருக்கிறது . 3. If you have to forecast , forecast often - Edgar R Fiddler முன் கணிப்பு செய்தே ஆகவேண்டும் என்றால் அடிக்கடி முன் கணியுங்கள் . 4. It is often said there are two types of forecasters ... Lucky or Wrong . இரண்டு விதமான முன் கணிப்பாளர்கள் இருக்கிறார்கள் . ஒருவர் அதிர்ஷ்டக்காரர் . இன்னொருவர் தவறாகக் கணிப்பவர் . 5. Forecasting is the art of saying what will happen , and then explaining why it didn't (or) what won't happen and then explaining why it did happen . முன் கணிப்பு என்பது நாளை என்ன நடக்கும் என்று கணிப்ப...

100 மடங்காளர்கள்

100 மடங்காளர்கள் 100 Baggers ஒரு நிறுவனப் பங்கு நீங்கள் வாங்கிய விலையிலிருந்து 100 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடைவது 100 bagger (சுருக்கமாக 100 x) தமிழில் 100 மடங்காளர் என்று அழைக்கப்படுகிறது . இந்த இலக்கு விலை (Target Price) யுகத்தில் ஒரு பங்கு 100 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடையும் வரை காத்திருப்பது முடியாது என்பதற்கு அடுத்ததாகத் தோன்றினாலும் அந்தப் பொறுமையான காத்திருத்தலுக்குப் பெரும் பலன் இருக்கிறது . இந்த மாதிரி ஒரு பங்கின் விலை நீங்கள் வாங்கிய விலையிலிருந்து 100 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடையும் போது அந்த நிறுவனம் வருடாவருடம் அளிக்கும் பங்காதாயப் பலன்கள் மூலமாகவே உங்களுக்கான ஒரு பணப்பாய்ச்சல் (cash flow) கிடைக்கப்பெற்று விடும் . முதலீட்டுப் பெருக்கம் (capital appreciation) தனி . பங்குச்சந்தையில் இந்தப் பன்மடங்காளர்களை அடைவதற்கு சில எளிய வழிகள் இருக்கின்றன . முதலாவது மற்றும் முக்கியமானது மீமிகை கரடிச்சந்தையில் நிறுவனப் பங்குகளை இனங்கண்டு வாங்கி வைக்க வேண்டும் . அது நன்றாக வளர்ச்சி வாய்ப்புகளை அடையக்கூடிய சிறு நிறுவனப்பங்காக இருந்தால் இன்னும் நல்லது . இவ்வாறு வாங்குவது...

ஆப்ரகாம் லிங்கன் - மணி மொழிகள்

ஆப்ரகாம் லிங்கன் - மணி மொழிகள் Abraham Lincoln Quotes 1. The best thing about the future is that it comes one day at a time . எதிர்காலத்தைக் குறித்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளாக மட்டுமே வருகிறது . 2. You can fool all of the people some of the time and some of the people all the time but you can't fool all the people all the time . பலரை சில நாள் ஏமாற்றலாம் . சிலரை பல நாள் ஏமாற்றலாம் . எல்லோரையும் எல்லா நாட்களிலும் ஏமாற்ற முடியாது . 3. You can't help men permanently by doing for them what they could and should do for themselves . மனிதர்கள் அவர்களாகவே செய்யக்கூடிய வேலைகளையும் , செய்ய வேண்டிய வேலைகளையும் நீங்கள் செய்வதன் மூலமாக நிரந்தரமாக அவர்களுக்கு நீங்கள் உதவிக் கொண்டிருக்க முடியாது . 4. Be sure you put your feet in the right place then stand firm . உங்கள் கால்களை சரியான இடத்தில் வைத்திருக்கிறோமோ என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் . பின்னர் உறுதியாக நில்லுங்கள் . 5. All I have learned , I learned from books . நான் கற்றது அனைத்தையும் புத்தகங்கள் மூ...

சராசரியை நோக்கிய முன்னடைவு

சராசரியை நோக்கிய முன்னடைவு இந்தக் கதை 1986 ல் தொடங்குகிறது .  ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர் . ஒருவர் லாட்டரிப் பைத்தியம் . மாதம் 250 ரூபாய் லாட்டரிக்கென்று ஒதுக்கி விடுவார் . அவ்வப்போது ஐநூறு ஆயிரம் என்று பரிசுகள் விழுந்திருக்கிறது . ஒரேயொரு முறை ஐயாயிரம் ரூபாய் கிடைக்கப் பெற்றிருக்கிறது . இவ்வாறு கிடைத்த பணத்தையெல்லாம் லாட்டரியிலேயே மறு முதலீடு (?) செய்து விடுவார் . இன்னொரு நண்பருக்கு லாட்டரியில் அவ்வளவு ஆர்வம் கிடையாது . முதலீட்டிலும் அவருக்கு ஆர்வம் இருந்ததாகச் சொல்ல முடியாது . இன்னும் சொல்லப்போனால் அவருக்கு எதிலுமே மிகை ஆர்வம் கிடையாது . ஒரு சராசரியான மனிதர் என்பதாக அவரைக் குறிப்பிடலாம் . அவர் குறியீட்டு நிதிகளில் முதலீட்டை மேற்கொள்ள இந்த சராசரித் தன்மை ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது .  அதற்காக சராசரியைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள் . படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் , போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிற இந்த உலகில் சராசரிக்கு மதிப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை .  ஆனால் முதலீட்டில் சராசரிக்கு ஒர...

பழைய புத்தகச்சந்தை பாடங்கள்

பழைய புத்தகச்சந்தை பாடங்கள் The Perfect Store என்று ஒரு புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் பார்க்கிறீர்கள் . அந்தப் புத்தகம் எதைக் குறித்தது என்பதான ஒரு புரிதல் உங்களுக்குக் கட்டாயம் இருக்க வேண்டும் . The perfect store புத்தகம் eBay நிறுவன வரலாறு . இணையவழி வியாபாரத்தின் முதல் வெற்றிக்கதை eBay நிறுவனம் . வலிமையான நேர் பின்னூட்ட அகழியின் சிகர உதாரணம் . The perfect store புத்தகம் eBay நிறுவன வரலாறு என்ற தகவல் உங்கள் மன தரவுத்தளத்தில் (mental database) சேமிக்கப்பட்டிருக்க வேண்டும் . இது மிகவும் அடிப்படையானது . இந்த மாதிரி நிறுவன(ர்) வரலாறுகள் , முதலீட்டு உத்திகள் , பொருளாதாரக் குமிழிகள் இத்யாதி இத்யாதி குறித்த புத்தகங்களின் அன்றாடம் புதுப்பிக்கப்படுவதான ஒரு தரவுத்தளம் உங்களிடம் இருக்க வேண்டும் . மேலும் இந்த மாதிரி புத்தகங்களை எழுதும் ஆசிரியர்கள் குறித்த ஒரு பட்டியலும் உங்கள் மன வரைபடத்தில் இருக்க வேண்டும் . அப்போது தான் நீங்கள் அப்புத்தகத்தை இனங்கண்டு வாங்க ஏதுவாகும் . 20 டாலர் மதிப்புள்ள புத்தகங்களை கிட்டத்தட்ட ஒன்றரை டாலர் என்ற விலையில் மதிப்பு முதலீடாக வாங்கலாம் . Charles Brandes எழுதிய...