ஆப்ரகாம் லிங்கன் - மணி மொழிகள்

ஆப்ரகாம் லிங்கன் - மணி மொழிகள்

Abraham Lincoln Quotes


1. The best thing about the future is that it comes one day at a time .


எதிர்காலத்தைக் குறித்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளாக மட்டுமே வருகிறது .


2. You can fool all of the people some of the time and some of the people all the time but you can't fool all the people all the time .


பலரை சில நாள் ஏமாற்றலாம் . சிலரை பல நாள் ஏமாற்றலாம் . எல்லோரையும் எல்லா நாட்களிலும் ஏமாற்ற முடியாது .


3. You can't help men permanently by doing for them what they could and should do for themselves .


மனிதர்கள் அவர்களாகவே செய்யக்கூடிய வேலைகளையும் , செய்ய வேண்டிய வேலைகளையும் நீங்கள் செய்வதன் மூலமாக நிரந்தரமாக அவர்களுக்கு நீங்கள் உதவிக் கொண்டிருக்க முடியாது .


4. Be sure you put your feet in the right place then stand firm .


உங்கள் கால்களை சரியான இடத்தில் வைத்திருக்கிறோமோ என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் . பின்னர் உறுதியாக நில்லுங்கள் .


5. All I have learned , I learned from books .


நான் கற்றது அனைத்தையும் புத்தகங்கள் மூலமாகவே கற்றிருக்கிறேன் . 


6. Prepare for the chance that can come someday .


என்றாவது ஒருநாள் வரப்பெறும் சந்தர்ப்பத்திற்காக உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் .


7. We can complain because rose bushes have thorns or rejoice because thorn bushes have roses .


ரோஜாச் செடியில் முட்கள் இருப்பதாக நாம் குற்றம் கூறலாம் . அல்லது முட்கள் நிறைந்த செடியில் ரோஜா இருப்பதாக நாம் மகிழ்வுறலாம் .


8. If you want to test a man's character give him power .


ஒரு மனிதனின் குணாதிசயத்தை நீங்கள் சோதிக்க விரும்பினால் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள் .


9. Courage is not the absence of fear . It is going forward with the face of fear .


தைரியம் என்பது அச்சம் இல்லாததால் வருவதல்ல . அது அச்சத்துடன் அடியெடுத்து முன்னேறிச் செல்வதாகும் .


10. When I do good , I feel good . When I do bad , I feel bad . That's my religion .


நான் நல்லது செய்தால் நன்றாக உணர்கிறேன் . கெட்டது செய்தால் தீங்காக உணர்கிறேன் . இதுவே எனது அறமாகும் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14