Posts

ஆப்ரகாம் லிங்கன் - மணி மொழிகள்

ஆப்ரகாம் லிங்கன் - மணி மொழிகள் Abraham Lincoln Quotes 1. The best thing about the future is that it comes one day at a time . எதிர்காலத்தைக் குறித்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளாக மட்டுமே வருகிறது . 2. You can fool all of the people some of the time and some of the people all the time but you can't fool all the people all the time . பலரை சில நாள் ஏமாற்றலாம் . சிலரை பல நாள் ஏமாற்றலாம் . எல்லோரையும் எல்லா நாட்களிலும் ஏமாற்ற முடியாது . 3. You can't help men permanently by doing for them what they could and should do for themselves . மனிதர்கள் அவர்களாகவே செய்யக்கூடிய வேலைகளையும் , செய்ய வேண்டிய வேலைகளையும் நீங்கள் செய்வதன் மூலமாக நிரந்தரமாக அவர்களுக்கு நீங்கள் உதவிக் கொண்டிருக்க முடியாது . 4. Be sure you put your feet in the right place then stand firm . உங்கள் கால்களை சரியான இடத்தில் வைத்திருக்கிறோமோ என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் . பின்னர் உறுதியாக நில்லுங்கள் . 5. All I have learned , I learned from books . நான் கற்றது அனைத்தையும் புத்தகங்கள் மூ...

சராசரியை நோக்கிய முன்னடைவு

சராசரியை நோக்கிய முன்னடைவு இந்தக் கதை 1986 ல் தொடங்குகிறது .  ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர் . ஒருவர் லாட்டரிப் பைத்தியம் . மாதம் 250 ரூபாய் லாட்டரிக்கென்று ஒதுக்கி விடுவார் . அவ்வப்போது ஐநூறு ஆயிரம் என்று பரிசுகள் விழுந்திருக்கிறது . ஒரேயொரு முறை ஐயாயிரம் ரூபாய் கிடைக்கப் பெற்றிருக்கிறது . இவ்வாறு கிடைத்த பணத்தையெல்லாம் லாட்டரியிலேயே மறு முதலீடு (?) செய்து விடுவார் . இன்னொரு நண்பருக்கு லாட்டரியில் அவ்வளவு ஆர்வம் கிடையாது . முதலீட்டிலும் அவருக்கு ஆர்வம் இருந்ததாகச் சொல்ல முடியாது . இன்னும் சொல்லப்போனால் அவருக்கு எதிலுமே மிகை ஆர்வம் கிடையாது . ஒரு சராசரியான மனிதர் என்பதாக அவரைக் குறிப்பிடலாம் . அவர் குறியீட்டு நிதிகளில் முதலீட்டை மேற்கொள்ள இந்த சராசரித் தன்மை ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது .  அதற்காக சராசரியைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள் . படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் , போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிற இந்த உலகில் சராசரிக்கு மதிப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை .  ஆனால் முதலீட்டில் சராசரிக்கு ஒர...

பழைய புத்தகச்சந்தை பாடங்கள்

பழைய புத்தகச்சந்தை பாடங்கள் The Perfect Store என்று ஒரு புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் பார்க்கிறீர்கள் . அந்தப் புத்தகம் எதைக் குறித்தது என்பதான ஒரு புரிதல் உங்களுக்குக் கட்டாயம் இருக்க வேண்டும் . The perfect store புத்தகம் eBay நிறுவன வரலாறு . இணையவழி வியாபாரத்தின் முதல் வெற்றிக்கதை eBay நிறுவனம் . வலிமையான நேர் பின்னூட்ட அகழியின் சிகர உதாரணம் . The perfect store புத்தகம் eBay நிறுவன வரலாறு என்ற தகவல் உங்கள் மன தரவுத்தளத்தில் (mental database) சேமிக்கப்பட்டிருக்க வேண்டும் . இது மிகவும் அடிப்படையானது . இந்த மாதிரி நிறுவன(ர்) வரலாறுகள் , முதலீட்டு உத்திகள் , பொருளாதாரக் குமிழிகள் இத்யாதி இத்யாதி குறித்த புத்தகங்களின் அன்றாடம் புதுப்பிக்கப்படுவதான ஒரு தரவுத்தளம் உங்களிடம் இருக்க வேண்டும் . மேலும் இந்த மாதிரி புத்தகங்களை எழுதும் ஆசிரியர்கள் குறித்த ஒரு பட்டியலும் உங்கள் மன வரைபடத்தில் இருக்க வேண்டும் . அப்போது தான் நீங்கள் அப்புத்தகத்தை இனங்கண்டு வாங்க ஏதுவாகும் . 20 டாலர் மதிப்புள்ள புத்தகங்களை கிட்டத்தட்ட ஒன்றரை டாலர் என்ற விலையில் மதிப்பு முதலீடாக வாங்கலாம் . Charles Brandes எழுதிய...

Earnest Hemingway - மணி மொழிகள்

Earnest Hemingway - மணி மொழிகள் Earnest Hemingway Quotes 1. Happiness in intelligent people is the rarest thing I know .  நான் அறிந்த அளவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கும் அறிவார்ந்தவர்கள் அரிதினும் அரிதாகவே இருக்கிறார்கள் .   2. There is nothing noble in being superior to your fellow man; true nobility is being superior to your former self. மற்றவர்களை விட சிறந்தவர்களாக இருப்பதில் உன்னதம் ஏதுமில்லை . உண்மையான உன்னதம் நாளும் நம்மை நாமே சிறந்தவர்களாக ஆக்குவதில் உள்ளது .  3. Courage is grace under pressure .  துணிவு என்பது நெருக்கடி நிலையின் போது கிடைப்பதான அருட்கொடை 4. You can't getaway from yourself by moving from one place to another .  ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதன் மூலமாக உங்களிலிருந்து நீங்கள் விலக முடியாது . 5. Never confuse movement with action . அசைவை , இயக்கம் என்பதாகப் புரிந்து கொள்ளாதீர்கள் . 6. A cat has absolute emotional honesty : human beings, for one reason or another, may hide their feelings, but a cat does not. பூனையிடம் உணர்வு...

பங்கு கேள்வி பதில் - 4

பங்கு கேள்வி பதில் - 4 கேள்வி : IPO என்று சொல்லப்படும் முதல் பொது வெளியீட்டை மேற்கொள்ளாமலேயே பங்குகளை வெளியிடலாமா ? பதில் : நிறுவனப் பிரிப்பு (Demerger) என்ற வகையில் வெளியிடலாம் . Motherson Sumi Wiring India நிறுவனம் இந்த வகையில் தான் வெளி வந்தது . அல்லது தலைகீழ் இணைப்பு (Reverse merger) என்ற அடிப்படையில் வெளியிடலாம் . ஏற்கெனவே சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்துடன் இணைப்பை மேற்கொள்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது . பதஞ்சலி நிறுவனம் இந்த வகையில் தான் வெளிவந்தது . ஏற்கெனவே சந்தையில் பட்டியல் இடப்பட்டிருந்த Ruchi Soya Industries நிறுவனத்துடன் அது இணைக்கப்பட்டது . கேள்வி : IRCTC பங்கு அவ்வளவு தானா ? 2021 அக்டோபரில் அது 1000 ரூபாயைக் கடந்தது . தற்போதைய விலை 883 ? பதில் : IRCTC நிறுவனப் பங்கின் PE வெகு தூரம் சென்று விட்டது . இனி EPS அதனை விரட்டிச் சென்று பிடிக்கும் வரை IRCTC பங்கு நின்று தான் செல்லும் . Avenue Supermart நிறுவனப் பங்கும் இதே நிலையில் தான் இருக்கிறது .  கேள்வி : Discounted cash flow கணக்குகளை எப்படிப் போடுவது ? பதில் : உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் இதுவரை எந்தப் பங்க...

பங்குச்சந்தை பனை ஓலைகள் - 1

பங்குச்சந்தை பனை ஓலைகள் - 1 1. Everything moves in cycles . Growth has its season . There are spring and summer , but there are also fall and winter . And then spring and summer again . As long as the roots are not severed , all is well , and all will be well . அனைத்துமே சுழற்சிக்கு உட்பட்டவை . வளர் பருவம் ஒன்று . வசந்த காலம் மற்றும் கோடைக்காலம் மற்றொன்று . இலையுதிர் மற்றும் குளிர்பனிக்காலம் பிறிதொன்று . பின்னர் மீண்டும் வசந்த காலம் ... வேர்கள் வெட்டப்படாமல் இருக்குமானால் அனைத்தும் நன்று . அனைத்தும் நன்றாகவே இருக்கும் . 2. Out of abundance he took abundance and still abundance remained . அவன் அபரிமிதத்திலிருந்து அபரிமிதத்தை எடுத்துக் கொண்டான் . அபரிமிதம் இன்னும் மீதமிருந்தது . 3. Make peace with patience . பொறுமையுடன் சமாதானமாயிருங்கள் . 4. Measure a thousand times and cut once . ஆயிரம் முறை அளந்து ஒரு முறை கத்திரி . 5. Begin to weave and God will give the thread . நெய்வதைத் தொடங்குங்கள் . ஆண்டவன் நூலை அனுப்புவான் . 6. The cheapest is always the most expensive . எது விலை குறைந்ததோ அதுவ...

பதிவு குறித்த ஒரு பதிவு

பதிவு குறித்த ஒரு பதிவு கேள்வி : எதற்காக எழுதுகிறீர்கள் ? யாருக்காக எழுதுகிறீர்கள் ? நீங்கள் எழுதுவதன் நோக்கம் நிறைவேறியதா ? பதில் : எழுதுவதன் நோக்கம் , குறிக்கோள் என்று ஆகப்பெரிய திட்டமிடல்கள் எதுவும் இல்லை . ஒரேயொரு நண்பரிடம் பங்குச்சந்தை குறித்த எனது எண்ணங்களை மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பதில் இது தொடங்கியது . பின்னர் அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் WhatsApp பதிவுகளாக இந்த எண்ணக் கருக்களை எழுதி அதனை பங்குச்சந்தையில் ஆர்வம் கொண்ட நண்பர்களுக்கு அனுப்புவதான பணி என்ற அளவில் இது தொடர்ந்தது . இந்தப் பதிவுகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அடைந்ததும் பழைய பதிவுகளைத் தேடி எடுத்துப் படிப்பது கடினமானதாக இருக்கிறதென்று நினைத்த நண்பர் ஒருவரின் முன்னெடுப்பில் வலைப்பூவாக இது மலர்ந்தது . WhatsApp பதிவுகளில் இல்லாத நிரந்தரம் (permanence) வலைப்பூவிற்கு உள்ளது . மேலும் வலைப்பூ , தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது குழு ஒன்றுக்கோ அல்லாமல் உலகம் முழுமைக்குமான ஒரு மேடையாகும் . ஏதாவது ஒரு கருத்தாக்கம் சரிவர புரிபடவில்லையென்றால் அதைக் குறித்து எழுதிப்பார்ப்பது சரியான ஒரு வழிமுறையாகும் . இன்னும் சொல்லப்போனால் அந்தக்...