Posts

பங்கு கேள்வி பதில் - 1

பங்கு கேள்வி பதில் - 1 கேள்வி : ITC க்கும் VST Industries க்கும் ROCE ல் ஏன் இத்தனை மாறுபாடு ? பதில் : ITC நிறுவனம் புகையிலையிலிருந்து கிடைக்கப்பெறும் இலாபத்தை FMCG , விருந்தோம்பல் , காகிதம் இன்னபிற துறைகளில் முதலீடு செய்கிறது ( ROCE - 30 % ) VST Industries புகையிலையிலிருந்து கிடைக்கப்பெறும் இலாபத்தை புகையிலையில் மட்டும் மறு சுழற்சி செய்கிறது ( ROCE - 40 % ) எனவே இந்த மாறுபாடு . ITC செய்வது சரியா தவறா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . கேள்வி : Wipro நிறுவனம் 2021 ஆம் ஆண்டுக்கான பங்காதாயமாக ஒரு பங்குக்கு ஒரு ரூபாய்  வழங்கியிருக்கிறது . 100 பங்குகள் வைத்திருந்தால் வெறும் 100 ரூபாய் மட்டும் தானே பங்காதாயமாகக் கிடைக்கப்பெறும் ? பதில் : 100 பங்குகள் வைத்திருந்தால் பங்காதாயமாக வெறும் 100 ரூபாய் மட்டும் தான் கிடைக்கும் . 50 பங்குகளை வைத்திருந்தால் 50 ரூபாய் . 10 க்கு 10 . 3 க்கு 3 . ஆனால் அதன் IPO ல் 3 பங்குகளை வாங்கி இன்றளவும் வைத்திருப்பவர்களுக்கு 1148120 ரூபாய் கிடைக்கப் பெறும் . 2022 ஆம் ஆண்டுக்கு Wipro ஒரு பங்குக்கு ஆறு ரூபாய் பங்காதாயம் வழங்கியிருக்கிறது . IPO முதலீட்டி...

மீமிகை பணவீக்கம்

மீமிகை பணவீக்கம் Hyper Inflation பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயர்ந்து செல்வது மீமிகை பணவீக்கம் என்பதாக அழைக்கப்படுகிறது . பொதுவாக நாடு ஒன்றின் விலைவாசி ஒரு மாதத்தில் 50 சதவீதம் கூடினால் அதன் பொருளாதாரம் மீமிகை பணவீக்கத்தை எதிர்கொள்வதாகக் கொள்ளலாம் . ஒரு நாடு போர் முதலிய காரணங்களாலோ அல்லது பொருளாதாரத்தைத் தவறாகக் கையாள்வதாலோ பொருளாதார நெருக்கடிக்கு  உள்ளாகிறது . விளைவாக மீமிகை பணவீக்கத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிறது .  1920 ல் முதலாம் உலகப் போரின் முடிவில் ஜெர்மன் மீமிகை பணவீக்கத்தில் சிக்குண்டு கிடந்தது . அந்நாட்களில் இருபது வருட காப்பீட்டுத் திட்டத்தின் முதிர்வுப் பணத்தின் மூலமாக ஒரேயொரு ரொட்டி அடுக்கை (Loaf of bread) மட்டுமே வாங்க முடிந்தது . சிகரெட் ஒன்றின் விலை ஒரு கடையில் அதிகம் என்று நினைத்து அடுத்த கடைக்குச் சென்றால் அங்கு இன்னும் அதிகம் , சரியென்று முந்தைய கடைக்குச் சென்றால் சிகரெட் விலை முதலில் சொன்ன விலையைப் போல் இரண்டு மடங்கு சமயங்களில் மூன்று மடங்கு என்ற அளவில் விலைவாசி விண்ணை முட்டிச் சென்றது . பண நோட்டுக்களை அச்சடிக்க அரசாங்க அச்சகங்கள் போதுமானதாக இல்லாததால் அரசாங...

வாழ்க்கை மொழிகள் - 2

வாழ்க்கை மொழிகள் - 2 1. உங்கள் வசம் உள்ள திறமையை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பயன்படுத்தத் தயங்காதீர்கள் . இனிமையாகவும் உன்னதமாகவும் பாடக்கூடிய பறவைகள் மட்டும் தான் குரலெழுப்பலாம் என்று ஆகி விட்டால் காடு நிசப்தமாகி விடும் - ஹென்றி வேன் டைக் 2. ஒரு பொருளைப் பெறுவதைக் காட்டிலும் அந்தப் பொருளின் மீதுள்ள ஆவலே அதிக ஆனந்தம் தருவது - காளிதாசன் 3 . சிறந்த பளிங்குச்சிலை பளிங்குக் கல்லிற்குள் தான் இருக்கிறது - டி.எச் லாரன்ஸ் 4. ஒரு ஊசியின் காது இரண்டு நண்பர்களுக்கு அகலமானது . முழு உலகும் இரண்டு விரோதிகளுக்குக் குறுகலானது . 5 . பகிர்ந்த துன்பம் பாதியாகிறது . பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது . 6 . சொர்க்கத்துக்கு அனுப்புவதானால் கூட சாட்டையால் அடித்து விரட்டப்படுவதை நான் விரும்ப மாட்டேன் - லெனின் 7. கண் ஒரு சாதாரண உறுப்பு . ஆனால் பார்வையோ ஒரு மிகப்பெரிய கலை - கலீல் ஜிப்ரான் 8 . வெற்றிகளை விட சில தோல்விகள் வெகு வெற்றிகரமாக இருக்கின்றன . 9 . அடிக்கடி திரும்பத் திரும்ப ஒன்றைச் செய்வதால் அது திகட்டிப் போகும் . தாகமெடுப்பதற்கு ஓய்வு கொடுக்காதவன் தண்ணீர் குடிப்பதில் உள்ள உண்மையான இன்பத்தைக் காண முடியா...

பங்குச்சந்தை குறியீடுகளை வெற்றி கொள்வது எப்படி ?

பங்குச்சந்தை குறியீடுகளை வெற்றி கொள்வது எப்படி ? ஆசிரியர் மாணவர்களுக்குக் கட்டுரைப்பாடம் ஒன்றைப் பரிந்துரைத்தார் . இந்த வகுப்பில் எந்த சக மாணவனை உங்களுக்குப் போட்டியாக நினைக்கிறீர்கள் ? அவனைத் தோற்கடிக்க என்ன உபாயத்தைக் கைக்கொள்ள நினைக்கிறீர்கள் ? ஒவ்வொரு மாணவனும் சக மாணவன் ஒருவனைத் தங்களுக்குப் போட்டியாக நினைப்பதாகவும் அவனைத் தேர்வில் வெல்வதற்கான உபாயங்கள் குறித்தும் பக்கம் பக்கமாக எழுதியிருந்தனர் . ஒரு மாணவனின் பதில் ஆசிரியரின் கருத்தைக் கவர்ந்தது . நான் யாருடனும் போட்டியிடப் போவதில்லை . எனக்கு நானே தான் போட்டி . நடப்புத் தேர்வில் நான் 80 மதிப்பெண் பெற்றால் அடுத்த தேர்வில் குறைந்த பட்சம் 81 மதிப்பெண் பெற வேண்டும் . பாடப் புத்தகங்களைப் படிப்பதற்கு மேலாக தினமும் 50 பக்கங்கள் படிக்கிறேன் . அதனை 100 பக்கங்கள் ஆக்க வேண்டும் மற்றும் தூங்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும் ... Mindset புத்தகத்தில் Carol S Dweck  பின்வருமாறு குறிப்பிடுகிறார் . வழக்கறிஞர் ஒருவர் வங்கி ஒன்று தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றியது சம்பந்தமான வழக்கு ஒன்றில் தோற்றுப் போய்விட்டார் . ஒரு ஆண்டு இரண்டு ஆண்டு அல்ல , அத...

புத்த மொழிகள்

புத்த மொழிகள் Buddha Quotes 1. Your purpose in life is to find your purpose and give your whole heart and soul to it . நமக்கான ஒன்றைக் கண்டடைவது ... பின்னர் நமது இதயத்தையும் ஆன்மாவையும் அதற்காக அர்ப்பணிப்பது ... இதுவே வாழ்க்கையின் நோக்கமாகும் . 2. Contentment is the greatest wealth . மனநிறைவுடன் இருப்பது பெறுவதற்கரிய பேறு . 3. Life's greatest lessons are usually learned from the worst mistakes . வாழ்க்கையின் உயரிய படிப்பினைகள் மோசமான தவறுகளின் மூலமாகப் பெறப்படுகின்றன . 4. The trouble is you think you have time . நேரம் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது தான் பிரச்னை . 5. Be patient . Everything comes to you in the right moment . பொறுமை காக்கவும் . அனைத்தும் சரியான தருணத்தில் உங்களை வந்தடையும் . 6. Hope is a waking dream . நம்பிக்கை என்பது விழித்துக் கொண்டே காண்பதான ஒரு கனவு . 7. Slow down . Calm down . Don't worry . Don't hurry . Trust the process . அமைதி மற்றும் நிதானத்தைக் கைக்கொள்ளுங்கள் . வழிமுறைகளில் நம்பிக்கை கொள்ளுங்கள் . 8. All know the way , but very...

அரிய வளம்

அரிய வளம் (Scarce Resource) நான் ... அதைப்பற்றி அப்புறம் ...  நீங்கள் பிறந்த நாளிலிருந்து உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கு துவங்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா ? அது மட்டுமல்ல , இந்தக் கணக்கில்  தினந்தோறும் 86400 ரூபாய் மதிப்புள்ள பணம் வரவு வைக்கப்படுகிறது.  நீங்கள் ஏழை பணக்காரன் என்பது முக்கியமில்லை. உங்கள் நிறம் கருப்பு சிவப்பு என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மதம் மொழி இனம் என்ற எந்தப் பாகுபாடும் காட்டப் படுவதில்லை. விடிந்து எழுந்தால் உங்கள் வங்கிக்கணக்கில் இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். ஆனால் ஒரேயொரு சின்னப் பிரச்னை. இந்தப் பணத்தை அன்றன்றைய தினம் நீங்கள் செலவழித்து விட வேண்டும். நீங்கள் இந்தப் பணத்தைச் செலவழித்தாலும் சரி செலவழிக்காவிட்டாலும் சரி அன்றைய இரவில் இது பூஜ்யமாகி விடும்.  இந்தப் பணத்தைச் செலவழிக்காமல் வைத்திருந்து வட்டி வருமானங்களை எதிர்பார்க்க முடியாது. Overdraft வசதியெல்லாம் கிடையாது. இந்தப் பணம் கொஞ்சம் மர்மமானது. இந்தப் பணத்தைப் புரிந்து தெளிந்து பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் அடையப் பெறும் உயரங்கள் அளவிட முடியாத அளவுகளில் இருக்கும். இ...

நான் ஏன் பங்குத் தொகுப்பைப் பகிர்வதில்லை ?

நான் ஏன் பங்குத் தொகுப்பைப் பகிர்வதில்லை ? உங்கள் விருப்பப் பங்குகள் (Favourite Stocks) குறித்து இந்தப் பதிவுகளில் ஊடும் பாவுமாக எழுதுகிறீர்கள் . உங்கள் பங்குத் தொகுப்பை (Stock Portfolio) அவ்வப்போது முழுமையாகப் பகிரலாமே ; அது பலருக்கும் பயன்படுவதாக இருக்குமே என்பதாக நண்பர் ஒருவரின் கேள்வி . இந்தப் பங்குத் தொகுப்பு பகிர்வு குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம் . பல்லாண்டுகளின் காலப் பன்மயமாக்கத்தில் ( Time Diversification ) இந்தப் பங்குத் தொகுப்பு உருவாக்கம் பெற்றிருக்கிறது . ஒரு நூறு மடங்காளர் (100 bagger ) சிற்சில ஐம்பது மடங்காளர்கள் , சில பத்து மடங்காளர்கள் , பல ஐந்து மடங்காளர்கள் , பற்பல இரண்டு மடங்காளர்கள் என்பதாக இந்தத் தொகுப்பு இருக்கிறது . சில பங்குகள் வாங்கிய விலைக்கே ஊசலாடிய வண்ணமாக இருக்கின்றன . இன்னும் சில வாங்கிய விலைக்கும் கீழே வர்த்தமாகிக் கொண்டிருக்கின்றன . நூறு மடங்காளர் பங்குகளிலிருந்து  கிடைக்கப்பெறும் பங்காதாயம் குறைந்த பட்சம் 20 % என்ற அளவில் இருக்கிறது . ஐம்பது மடங்காளர் என்றால் 10 % பத்து மடங்காளர் என்றால் 5 % என்ற வாக்கில் இது குறைந்த வண்ணமாக இருக்கிறது . பங்குத்...