Posts

சூது கவ்வும்

சூது கவ்வும் Speculation Quotes 1. The best way to throw the dice is to throw them away . பகடைக் காய்களைச் சிறந்த முறையில் வீசி எறிவது என்பது அவற்றை வெளியே வீசி எறிவதாகும் .  2. The most difficult task in speculation is not prediction but self-control . Successful trading is difficult and frustrating . You are the most important element in the equation for success - Linda Raschke ஊக வணிகத்தில் கடினமான காரியம் முன் கணிப்பல்ல அது சுய கட்டுப்பாடு . வெற்றிகரமான வியாபாரம் என்பது கடினமானது மற்றும் விரக்தி விளைவிப்பது . வெற்றிக்கான இந்த சமன்பாட்டில் உங்கள் பங்கு மிக முக்கியமானதாகும் . 3. Speculation is only a word covering the making of money out of the manipulation of prices instead of supplying goods and services - Henry Ford ஊக வணிகம் என்பது பொருட்களையோ அல்லது சேவைகளையோ உருவாக்காது பணத்தை மட்டும் உருவாக்குவதாகும் . 4. Intuitive powers played a central role in my scientific work , not wild speculation - Einstein என்னுடைய விஞ்ஞான வேலைகளில் உள்ளுணர்வு ஒரு பிரதான இடத்தை வகிப்பதாக இருக்கிறத...

நம்பிக்கை , பொறுமை

 நம்பிக்கை , பொறுமை [ முன் குறிப்பு : பங்குச்சந்தை குறித்த பதிவில் கவிதைக்கு என்ன இடம் இருக்கப்போகிறது என்று தான் நேற்று வரை நினைத்திருந்தேன். பங்குச்சந்தையில் வெற்றி பெற உளப்பாங்கு (temperament) என்பது ஒரு மிக முக்கியமான மென் சொத்து (soft asset) என்று வாரன் பஃபெட் கூறுகிறார். அந்த வகையில் ஜான் பர்ரோஸ் எழுதிய கீழ்க்காணும் கவிதை பங்குச்சந்தையில் வெற்றி பெற உதவும் மிக முக்கியமான மனப்பாங்கு பற்றிக் கூறுகிறது ] காத்திருக்கிறேன் " நிதானத்துடன் கைகட்டிக் காத்திருக்கிறேன் காற்றுக்கோ , அலைக்கோ , கடலுக்கோ கவலைப்படாமல் . காலத்தையோ கர்ம வினையையோ குறை கூறுவதில்லை . ஏனெனில் எனக்குண்டானது எனக்குக் கிடைத்தே தீரும் . நான் அவசரப்படமாட்டேன் ,  தாமதம் செய்வேன் . இந்த பரபரப்பினால் என்ன பயன் ? நான் பரந்த வெளியினூடே நிற்கிறேன் . என்னுடையது என்னை அடையாளம் கண்டு கொள்ளும் . நித்திரையில் , விழிப்பில் , இரவு அல்லது பகலில் நான் தேடும் நண்பர்கள் என்னைத் தேடி வருகிறார்கள் . என் உடைமையை எந்தக் காற்றும் அடித்துக்கொண்டு போக முடியாது . விதியின் போக்கையும் மாற்றிவிட முடியாது .  நான் தனியனாக நிற்பதால் என்ன ...

பங்குச்சந்தை விதிகள்

பங்குச்சந்தை விதிகள் 1. பங்கு முதலீட்டுத் திட்டங்களைச் சிறிய வயதிலேயே தொடங்கி விட வேண்டும் . வாரன் பஃபெட் பதினோரு வயதிலேயே அவரது முதலீட்டுப் பயணத்தைத் தொடங்கி விட்டார் . முதலீட்டுச் சமன்பாட்டில் வட்டி விகிதம் கூடக்கூட வருமானம் கூடுவது மாதிரி ஆண்டுகள் கூடக்கூட வருமானமும் மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகும் . வாரன் பஃபெட் உலகின் முதலாம் நிலை முதலீட்டாளராக இருப்பதற்கான முழு முதற்காரணம் அவருடைய 80 ஆண்டு முதலீட்டுக் காலம் மட்டுமே . 2. கூட்டு வட்டியை விரைவு படுத்த முயலக்கூடாது . நிறைய முதலீட்டுத் தவறுகளுக்கான அடிப்படையான காரணம் முதலீட்டின் மூலமான வருமானத்தை விரைவு படுத்த முயல்வது தான் . வருமானத்தை விரைவு படுத்த முயல்வதன் காரணமாக 50 சதவீதத்தை இழந்தால் அந்த இழப்பை சமன் செய்ய 100 சதவீதம் சம்பாதிக்க வேண்டும் . மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கான முக்கியமான விதி என்னவென்றால் ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட உயரம் மட்டுமே ஏறவேண்டும் . வானிலை சாதகமாக இருந்தாலும் சரி அல்லது பாதகமாக இருந்தாலும் சரி இந்த உயரத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கூடாது . வானிலை சாதகமாக இருக்கிறது என்பதற்காகக் குறிப்பிட்ட உயரத்த...

பூஜ்யத்திலிருந்து ராஜ்யத்திற்கு

பூஜ்யத்திலிருந்து ராஜ்யத்திற்கு ... Making money on Zero Investment ( முன் குறிப்பு : இந்தப் பதிவு இதில் குறிப்பிடப்பட்டுள்ள பங்குகளை வாங்குவதற்கான பரிந்துரை அல்ல . இந்த வழிமுறைகளில் மட்டும் கவனம் கொள்ளுங்கள்) கோத்ரெஜ் குழுமம் 1897 ஆம் ஆண்டு பூட்டு தயாரிக்கும் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது . காலப்போக்கில் வேதிப்பொருட்கள் , மருந்துப் பொருட்கள் , ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்பொருள் என்று பல்வேறுபட்ட துறைகளில் கால் பதிக்கிறது . பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அப்போதைய அதன் பெயர் Godrej Soaps . 2001 ஆம் ஆண்டு நுகர்பொருள் துறையை மட்டும் தனியே பிரித்து பட்டியலிடுகிறது . பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு Godrej Soaps பங்குக்கு ஆறு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு Godrej Industries பங்கு மற்றும் நான்கு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு Godrej Consumer Products பங்கு . Godrej Soaps நிறுவனத்தின் அன்றைய விலை 55 ரூபாய் . நாம் 5500 ரூபாய்க்கு 100 பங்குகளை வாங்குவதாகக் கற்பிதம் செய்து கொண்டு கணக்கைத் தொடங்கலாம் . இவ்விதம் பிரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு  அப்போது எதிர்பார்க்கப்பட்ட  PE விகிதம் Go...

அபாய மொழிகள்

அபாய மொழிகள் Risk Quotes 1. If you risk nothing then you risk everything - Geena Davis நீங்கள் எதனையும் அபாயங்களுக்கு உட்படுத்தவில்லையென்றால் அனைத்தையும் அபாயங்களுக்கு உட்படுத்தியிருப்பதாக அர்த்தம் . 2. Risk and Opportunity are two sides of the same coin - Yuan Byeajee அபாயமும் வாய்ப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் . 3. You'll always miss 100 % of the shots you don't take - Wayne Gretzky எடுக்காத வாய்ப்புகளின் 100 சதவீதத்தையும் நாம் இழக்கிறோம் . 4. Take risks in your life . If you win , you can lead . If you lose , you can guide - Swamy Vivekananda வாழ்க்கையில் அபாயங்களை எதிர் கொள்ளுங்கள் . அதில் வெற்றியடைந்தால் நீங்கள் தலைமையேற்கலாம் . அதில் தோல்வியடைந்தால் நீங்கள் வழி காட்டலாம் . 5. Great things never came from comfort zones . சௌகரியமான நிலையிலிருந்து பெரும் செயல்களைச் செய்ய முடியாது . 6. If you're not scared a lot you're not doing very much . ஒரு செயலைச் செய்ய நீங்கள் பயம் கொள்ளாவிட்டால் நீங்கள் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பதாக அர்த்தம் . 7.A per...

வாழ்க்கை மொழிகள் - 1

வாழ்க்கை மொழிகள் - 1 1. This too shall pass . இதுவும் கடந்து போகும் . 2. The only thing we have to fear is fear itself . - Franklin Roosevelt நாம் பயத்தைப் பற்றி மட்டுமே பயம் கொள்ள வேண்டும் . 3. Keep calm and carry on . அமைதி காக்கவும் மற்றும் தொடர்ந்து செல்லவும் . 4. A life lived in fear is a life half lived - Baz Cuhrmann பயத்தில் வாழ்வது பாதி வாழ்க்கை மட்டுமே . 5. Worry is like a rocking chair; It gives you something to do but never gets you anywhere - Erma Bombeck கவலை என்பது ஆடும் நாற்காலி போன்றது. அது உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது . 6. Nothing in life is to be feared, it is only to be understood - Marie Curie வாழ்க்கையில் எதற்கும் பயம் கொள்ள வேண்டியதில்லை, புரிந்து கொள்ள மட்டுமே வேண்டும் . 7. Often when you think you are at the end of something, you are at the beginning of something else - Fred Rogers ஒன்றின் முடிவில் நீங்கள் இருப்பதாகக் கொண்டாலும், அது மற்றொன்றின் தொடக்கமே . 8. If you are going through hell, keep going - Winston Churchill நீங்கள் நரகத்தின் வழியாகச் சென்றா...

பிட் காயின் கேள்வி பதில்

பிட் காயின் கேள்வி பதில் 1 . பிட் காயின் என்றால் என்ன ? பிட் காயின் என்பது மென் நாணயம் . ரூபாய் என்பது வன் நாணயம் . 2 . பிட் காயின் என்பதன் அடிப்படை என்ன ? தெரியாத ஒன்றைத் தெரிந்த ஒன்றைக் கொண்டு புரிந்து கொள்ளலாம் . அந்த வகையில் நாணயத்தின் அடிப்படையைக் கொஞ்சம் பார்க்கலாம் . ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு நாணயம் இருக்கிறது . அமெரிக்க டாலர் , ஜப்பானிய யென் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் . இந்திய நாணயம் ரூபாய் . இந்த மாதிரி நாணயங்கள் பரிமாற்ற இடைப்பொருள் (medium of exchange) என்ற அளவீட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இத்தகைய நாணயங்களை அச்சடித்துத் தள்ளிய வண்ணம் இருக்கின்றன . அதனால் இந்த நாணயங்களின் மதிப்பு நாளும் குறைந்த வண்ணம் இருக்கிறது . விளைவாகப் பணவீக்கம் அதிகரிக்கிறது . மென் நாணயங்களை சுட்டியின் ஒரு சொடுக்கில் உருவாக்க முடியாது . கணிதப் புதிர்களை விடுவித்தால் மட்டுமே இந்த மென் நாணயங்களை உருவாக்க முடியும் . முதலில் எளிமையாக இருக்கும் இந்தப் புதிர்கள் புதிய மென் நாணயங்களை உருவாக்க உருவாக்க மென்மேலும் கடினமாகும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் . எளிமையாக மென...