Posts

வாரன் பஃபெட் பொன்மொழிகள்

வாரன் பஃபெட் பொன்மொழிகள் 1. I made my first investment at age eleven . I was wasting my life up until then . நான் என்னுடைய பதினோராம் வயதில் எனது முதல் முதலீட்டை மேற்கொண்டேன் . அது வரை எனது வாழ்க்கையை நான் வீணடித்து விட்டேன் .   2. It's not necessary to do extraordinary things to get extraordinary results . அசாதாரணமான பலன்களைப் பெறுவதற்கு அசாதாரணமான செயல்களைச் செய்ய வேண்டுமென்று அவசியமில்லை .  3. My idea of group discussion is to look at the mirror . குழு விவாதம் குறித்த என்னுடைய பார்வை கண்ணாடியைப் பார்ப்பது மட்டுமே . 4. There is a huge difference between the business that grows and requires lots of capital to do so and the business that grows and doesn't require capital . விரிவாக்கம் அடைவதற்கு முதல் தேவைப்படும் வியாபாரத்திற்கும் முதல் தேவைப்படாத வியாபாரத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது .  5. Can you really explain to a fish what it is like to walk on land ? One day on land is worth a thousand years talking about it . மீன் ஒன்றுக்கு நிலத்தில் நடப்பது எப்படி என்று உங்கள...

ஜென் கதைகள் - 1

ஜென் கதைகள் - 1 1. மனம் போல் வாழ்வு பங்குச்சந்தையில் தேர்ச்சி பெற்ற ஒரு ஜென் குருவிடம் இரண்டு NRI முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆலோசனை கேட்பதன் பொருட்டு வந்திருந்தனர். முதலாமவர் இந்த மாதிரி எங்கள் நாட்டு பங்குச்சந்தையில் எப்போது பார்த்தாலும் ஒரே கூச்சலும் குழப்பமும் தான். எல்லோரும் குறுகிய கால இலாபத்திற்காக ஒருவரையொருவர் தோற்கடிக்கத் துடிக்கின்றனர். IPO என்பது பட்டியல் இலாபத்திற்கு (listing gain) என்பதாக உருமாற்றம் பெற்று விட்டது. இல்லாத பங்குகளை விற்று விட்டு (short selling) இலாபம் பார்க்க நினைக்கிறார்கள். முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் கால அளவு மென்மேலும் குறைந்த வண்ணமாகவே இருக்கிறது. Buy & Hold என்பதே கிடையாது. எல்லாமே F & O தான். அது சூதாடிகளின் கூடாரமேயன்றி வேறில்லை. உங்கள் நாட்டுப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று யோசனை. உங்கள் சந்தை எப்படி ? குரு பின்வருமாறு பதில் சொன்னார். எங்கள் சந்தையும் உங்கள் நாட்டு சந்தை மாதிரி தான். இங்கும் எப்போதும் ஒரே கூச்சலும் குழப்பமும் தான். இரண்டாமவர் எங்கள் நாட்டு பங்குச்சந்தை ஒரு சிறந்த ...

பங்குச்சந்தை அகராதி

பங்குச்சந்தை அகராதி முக மதிப்பு (Face Value)  பங்குகளின் முக மதிப்பு பொதுவாக 10 ரூபாய் என்ற அளவில் இருக்கும். ஒரு நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதல் (Equity Capital) 100000 ரூபாய் என்று கொண்டால் 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட 10000 பங்குகள் என்பதாகப் பொருள் கொள்ளலாம். இந்த முக மதிப்பிற்குத் தான் நிறுவனம் பங்காதாயம் (dividend) உள்ளிட்ட அனைத்துப் பலன்களையும் வழங்கும். ஒரு பங்குச் சம்பாத்தியம் (Earnings Per Share - EPS) ஒரு இலட்சம் ரூபாய் பங்கு சார் முதல் கொண்ட நிறுவனம் ஒன்று 20000 ரூபாய் நிகர இலாபம் ஈட்டுவதாகக் கொள்ளலாம். ஒரு பங்குச் சம்பாத்தியம் என்பது இந்த நிகர இலாபத்தை மொத்தப் பங்குகளால் வகுத்தால் கிடைத்து விடும். EPS = Net profit ÷ Total No of shares =2 ரூபாய். பங்காதாயம் (Dividend) நிறுவனம் ஒரு பங்குச் சம்பாத்தியமாக 2 ரூபாய் ஈட்டுகிறது என்று பார்த்தோம். இந்த இரண்டு ரூபாய் முழுவதையும் நிறுவனம் பங்காதாயமாக வழங்கி விடாது. ஒரு ரூபாய் பங்காதாயத்தை வழங்கி விட்டு மீதி ஒரு ரூபாயை வளர்ச்சி மற்றும் தினசரி செலவுகளுக்குப் (CAPEX என்று சுருக்கமாக அழைக்கப்படும் capital expenditure மற்...

பங்குக்கதை - 2

பங்குக்கதை - 2 இ ந்தக் கதையைத் தனியாகப் படித்தாலும் புரியும். ஆனால் இது பங்குக் கதை - 1  ன் தொடர்ச்சி. பங்குக்கதை - 1 ஐ படித்து விட்டு இதைப் படித்தால் சுவை பெருகும். இந்தக் கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல) பங்குத் தரகர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஆடிட்டர் மகனுக்கு உலகமே பளிச்சென்று அலம்பி விட்டது போல் இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கோடி. ஒரு கோடிக்கு எத்தனை பூஜ்யம்?  அப்பா ரொம்பவும் அமுக்குளி என்று அம்மா சொல்வது உண்மை தான். அவருடைய மின்னணுக் கணக்கில் (Demat Account) மூன்று கோடி ரூபாயை வைத்துக் கொண்டு ஒன்றும் தெரியாத அப்பாவி போல் இருக்க எப்படி முடிந்தது? எள்ளுக்குள் எண்ணெய் மாதிரி இருக்கவேண்டும் என்று அடிக்கடி அவர் சொல்வதன் அர்த்தம் இது தானா? எண்ணெய் இருந்தால் பரவாயில்லை. ஒரு எண்ணெய்க் கிணறே அல்லவா வைத்திருந்திருக்கிறார்? ஆடிட்டர் மகன் இந்த விஷயத்தில் அப்பாவுக்கு நேரெதிர். கையில் பத்து காசு இருந்தால் பதறி விடுவார்.  தரகர் மிகவும் தெளிவாகச் சொல்லி விட்டார். ITC நிறுவனமே தனது வியாபாரத்தைப் பன்மயமாக்கம் (Diversificatio...

முதல் வரலாறு - 2

முதல் வரலாறு - 2 ஒரு தட்டச்சு நிறுவனம் 10000 ரூபாய் முதலீட்டில்  தொடங்கப் பெறுகிறது. 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட 1000 பங்குகள். இது தான் நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதல் (Equity Capital) நிறுவனம் தனிப்பட்ட ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நிறுவனம் நல்ல கேந்திரமான ஒரு இடத்தில் அமையப் பெற்றிருக்கிறது. முதலாளி திரு.KKV அவர்கள் இன்முகத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறார். ஒரேயொரு தட்டச்சு இயந்திரத்துடன் தொடங்கப்பட்ட KKV நிறுவனத்தில் இப்போது பத்து தட்டச்சு இயந்திரங்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாது இயங்குகின்றன. பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள். நிறுவனத்திற்குக் கடன் சார்ந்த முதல் (Debt Capital) எதுவும் இல்லை. திருவாளர் KKV அவர்களுக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை கடன். தட்டச்சு நிறுவனம் அவருக்குச் சொந்தமான இடத்தில் இயங்குவதால் வாடகை எதுவும் கிடையாது. மேலும் நிறுவன இயந்திரங்கள் உட்பட அனைத்துத் தளவாடங்களும் நிறுவன இலாபத்தில் (Internal accruals) வாங்கப்பட்டவை. நிறுவனத்தின் தற்போதைய நிகர இலாபம் 100000 ரூபாய். ஒரு பங்கிற்கான நிகர வருவாய் 100 ரூபாய். அதாவது 10 ரூபாய் முக ம...

முதல் வரலாறு - 1

முதல் வரலாறு - 1 இருப்பு நிலைக் கணக்கில் (Balance Sheet) முதலாவது மற்றும் முக்கியமானது முதல் என்று அழைக்கப்படும் Capital.  'முதல்'களில் இரண்டு வகை உண்டு. பங்கு சார் முதல் (Equity Capital) மற்றும் கடன் சார் முதல் (Debt Capital) இந்த இரண்டு விதமான ' முதல்' களையும் சமன் செய்து நிறுவனத்தை நடத்துவது வெறும் கணக்கு மட்டுமல்ல. அது ஒரு கலை.  ஒரு கேள்வி. பங்கு சார் முதல் மலிவானதா அல்லது கடன் சார் முதல் மலிவானதா? பங்கு சார் முதலுக்கு நிறுவனம் வட்டி கட்ட வேண்டியதில்லை. இலாபம் ஈட்டினால் மட்டும் பங்காதாயம் (Dividend) வழங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பங்காதாயம் வழங்குவது நிறுவனத்தின் விருப்பத்தைப் பொறுத்தது. பங்காதாயம் வழங்காமல் வேறு முதலீட்டு வாய்ப்புகளை நிறுவனம் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், நிறுவனம் இலாபம் ஈட்டுகிறதோ இல்லையோ கடன் சார் முதலுக்கு கட்டாயம் வட்டி கட்டியாக வேண்டும். அதனால் பங்கு சார் முதல் கிட்டத்தட்ட இலவசம் என்றே சொல்லலாம். சரியா? தவறு.  பங்கு சார் முதல் என்பது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று. நிறுவனம் ஒன்றின் 10 ரூபாய் முக மதிப்பு உள்ள ஒரு பங்கு எப்படி மதிப...

ஒரு அதிர்ஷ்டக் கதை

ஒரு அதிர்ஷ்டக் கதை Charles Darrow ஜெர்மனியின் பென்சில்வேனியா நகரில் வசித்து வந்த 42 வயது heating engineer . 1930 களின் ஆகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் (Great Depression) போது நிலையான வேலையில்லாமல் அவருடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது . Charles Darrow அவ்வப்போது பங்குச்சந்தையில் ஊக வணிகம் செய்து பணம் சம்பாதிக்க முயல்வது வழக்கம் . அந்தப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வறுமையின் கோரப்பிடியில் இருந்த Darrow விற்கு பங்குச்சந்தை ஊக வணிகங்களில் இதை இவ்விதம் செய்திருந்தால் எவ்விதம் இருந்திருக்கும் அதை அவ்விதம் செய்திருந்தால் எவ்விதம் இருந்திருக்கும் என்ற கற்பனைகளில் திளைப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்காக இருந்தது . உதாரணமாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனப்பங்குகள் 40 டாலர் என்ற அளவுக்குத் தரையைத் தட்டும் வரை காத்திராமல் 1000 டாலர் என்ற அளவில் விற்று விட்டு வெளியேறியிருந்தால் எப்படி இருந்திருக்கும் ? அந்தப் பணத்தை  நிலத்தில் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கப் பெற்றிருக்கும் என்பதான ஒருபோதும் முடிவு பெறாத ஆகாயக் கோட்டைகள் ... அந்தப் பொருளாதார நெருக்கடி நிலையிலும் ரி...