வாரன் பஃபெட் பொன்மொழிகள்

வாரன் பஃபெட் பொன்மொழிகள்


1. I made my first investment at age eleven . I was wasting my life up until then .

நான் என்னுடைய பதினோராம் வயதில் எனது முதல் முதலீட்டை மேற்கொண்டேன் . அது வரை எனது வாழ்க்கையை நான் வீணடித்து விட்டேன் .  


2. It's not necessary to do extraordinary things to get extraordinary results .

அசாதாரணமான பலன்களைப் பெறுவதற்கு அசாதாரணமான செயல்களைச் செய்ய வேண்டுமென்று அவசியமில்லை . 


3. My idea of group discussion is to look at the mirror .

குழு விவாதம் குறித்த என்னுடைய பார்வை கண்ணாடியைப் பார்ப்பது மட்டுமே .


4. There is a huge difference between the business that grows and requires lots of capital to do so and the business that grows and doesn't require capital .

விரிவாக்கம் அடைவதற்கு முதல் தேவைப்படும் வியாபாரத்திற்கும் முதல் தேவைப்படாத வியாபாரத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது . 


5. Can you really explain to a fish what it is like to walk on land ? One day on land is worth a thousand years talking about it .

மீன் ஒன்றுக்கு நிலத்தில் நடப்பது எப்படி என்று உங்களால் உண்மையாக விளக்க முடியுமா ? ஒரு நாள் நிலத்தில் இருப்பது ஓராயிரம் ஆண்டுகள் அதனைப் பற்றிப் பேசுவதற்கு ஒப்பானதாகும் . 


6. There is nothing like writing to force you to think and get your thoughts straight .

ஒரு விஷயம் குறித்த சிந்தனையை ஒருமுகப்படுத்த உதவுவதில் அதைக் குறித்து எழுதுவதற்கு ஈடு இணையான செயல் ஏதுமில்லை . 


7. The fact that people are full of greed , fear or folly is predictable . The sequence is not predictable .

மக்கள் பேராசையிலும் , பயத்திலும் , மாயையிலும் இருப்பதை யூகிக்க முடியும் . ஆனால் அதன் வரிசைக் கிரமத்தை யூகிக்க முடியாது . 


8. The most important thing to do if you find yourself in a hole is to stop digging . 

குழிக்குள் கிடப்பதை உணர்ந்தால் நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது தோண்டுவதை நிறுத்துவது . 


9. At the beginning prices are driven by fundamentals and at some point speculation drives them . It's that old story : what the wise man does in the beginning , the fool does in the end .

முதலில் விலைகள் அடிப்படைகளை அடியொற்றிச் செல்லும் . ஒரு கட்டத்தில் ஊகத்தன்மை அதனைக் கைப்பற்றி விடும் . பின்னர் அது பழைய பல்லவி தான் : அறிவாளிகள் முதலில் செய்வதை முட்டாள்கள் கடைசியில் செய்கிறார்கள் . 


10. A pin lies in wait for every bubble , and when the two eventually meet , a new wave of investors learn some old lessons . 

ஒவ்வொரு குமிழியிலும் ஒரு ஊசி காத்திருத்தலில் இருக்கும் . இவையிரண்டும் இணையும் போது புதிய முதலீட்டாளர்கள் பழைய பாடங்களைக் கற்றுக் கொள்கின்றனர் . 


11.What we learn from history is that people don't learn from history .

வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால் வரலாற்றிலிருந்து மக்கள் எதனையும் கற்றுக் கொள்வதில்லை . 


12.To many on wall street , both companies and stocks are seen only as raw materials for trade . 

பங்குச்சந்தையில் பெரும்பாலோனோர் நிறுவனங்களையும் நிறுவனப் பங்குகளையும் வியாபாரம் செய்வதற்கான மூலப்பொருட்களாகவே பார்க்கின்றனர் . 


13.No matter how great the talent or effort , some things just take time . 

நீங்கள் எவ்வளவு திறமைசாலியாகவும் முயற்சியாளருமாகவும்  இருந்தாலும் சரி , சில விஷயங்களில் , காலம்    கனிவதற்காகக் காத்திருந்தே ஆக வேண்டும் . 


14.The investor of today does not profit from yesterday's growth . 

இன்றைய முதலீட்டாளர் நேற்றைய வளர்ச்சியினால் இலாபம் ஈட்ட இயலாது . 


15.As for as I am concerned , the stock market doesn't exist . It is only there as a reference to see if anybody is offering to do anything foolish . 

என்னைப் பொறுத்தவரை பங்குச்சந்தை என்பதே கிடையாது . பங்குச்சந்தை என்பது யாராவது எதையாவது தள்ளுபடியில் முட்டாள்தனமாக விற்கிறார்களா என்பதற்கான தகவல் தளம் மட்டுமே . 

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14