Max Gunther- மணி மொழிகள்

Max Gunther- மணி மொழிகள்

Max Gunther Quotes


1. Adventure is what makes life worth living and the way to have an adventure is to expose yourself to risk.


சாகசமே வாழ்க்கையை வாழத் தகுந்ததாக ஆக்குகிறது. இடர்களை எதிர்கொள்ள உங்களை நீங்கள் உட்படுத்திக்கொள்வதே சாகசத்தை மேற்கொள்வதற்கான வழியாகும்.


2. The trick is to disregard what everybody tells you until you have thought it through for yourself.


நீங்களே அதைப்பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பார்க்கும் வரை, மற்றவர்கள் சொல்வதைப் புறக்கணிப்பதே சூட்சுமம்.


3. Worry is not a sickness but a sign of health. If you are not worried, you are not risking enough.


கவலை என்பது ஒரு நோய் அல்ல, அது ஆரோக்கியத்தின் அறிகுறி. நீங்கள் கவலைப்படவில்லை என்றால், போதுமான அளவு இடர்ப்பாட்டை எடுக்கவில்லை என்பதாகப் பொருள்.


4. Everybody wants to win but not everybody wants to bet and therein lies a difference of the greatest magnitude. 


எல்லோரும் வெற்றி பெற விரும்புகிறார்கள், ஆனால் எல்லோரும் பந்தயம் கட்ட விரும்புவதில்லை; அதில் தான் மிகப்பெரிய வேறுபாடு அடங்கியுள்ளது.


5. Nobody ever got rich on a salary.


வெறும் சம்பளத்தில் யாரும் பணக்காரர் ஆவதில்லை.


6. If an amount is so small that its loss won't make any significant difference then it isn't likely to bring you any significant gains either.


ஒரு தொகையின் இழப்பு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தாத அளவுக்கு மிகச் சிறியதாக இருந்தால், அது உங்களுக்குக் குறிப்பிடத்தக்க ஆதாயங்களையும் வழங்க வாய்ப்பில்லை.


7. Never follow speculative fads. Often the best time to buy something is when nobody else wants it.


ஊக வணிகப் போக்குகளை ஒருபோதும் பின்பற்றாதீர்கள். ஒரு பொருளை வாங்குவதற்கான சிறந்த நேரம் வேறு யாரும் அதனை விரும்பாத போதே ஆகும்.


8. I believe good luck comes to people who are ready for it and will use it unselfishly, to help others. I don’t believe it often comes to the greedy. As a general rule, the greediest people I know are also the unluckiest.


நல்ல அதிர்ஷ்டத்திற்குத் தயாராக இருந்து, அதை சுயநலமின்றி மற்றவர்களுக்கு உதவப் பயன்படுத்துபவர்களுக்கே அது கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அது பெரும்பாலும் பேராசைக்காரர்களுக்குக் கிடைப்பதில்லை என்றும் நான் நம்புகிறேன். பொதுவாக, எனக்குத் தெரிந்த பேராசைக்காரர்களே மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருக்கிறார்கள்.


9. Chaos is not dangerous until it begins to look orderly. 


குழப்பம் ஒழுங்காகத் தோன்றத் தொடங்கும் வரை அது ஆபத்தானது அல்ல. 


10. The fact is that fairness is a human concept. The rest of the universe knows nothing of it.


உண்மை என்னவென்றால், நியாயம் என்பது ஒரு மனிதக் கருத்து. இந்தப் பிரபஞ்சத்திற்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது.


Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14