Osho- மணி மொழிகள்
Osho- மணி மொழிகள்
Osho Quotes
1. Be- don't try to become.
இருத்தலில் இருங்கள். ஏதொன்றாகவும் மாற முயற்சிக்காதீர்கள்.
2. Life is not a problem to be solved but a mystery to be lived.
வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையல்ல; மாறாக, வாழ்ந்து உணரப்பட வேண்டிய ஒரு மர்மம்.
3. The moment a child is born, the mother is also born.
ஒரு குழந்தை பிறக்கும் அதே கணத்தில், ஒரு தாயும் பிறக்கிறாள்.
4. I love this world because it is imperfect. It is imperfect and that's why it is growing; if it was perfect it would have been dead.
இந்த உலகம் முழுமையற்றதாக இருப்பதால் நான் அதை நேசிக்கிறேன். இது முழுமையற்றது, அதனால்தான் இது வளர்ந்து கொண்டிருக்கிறது; ஒருவேளை இது முழுமையானதாக இருந்திருந்தால், அது உயிரற்றதாக இருந்திருக்கும்.
5. No, I don't want to give my people sticks. I want to give them eyes.
இல்லை, என் மக்களுக்கு நான் ஊன்றுகோல்களைக் கொடுக்க விரும்பவில்லை. அவர்களுக்குக் கண்களைத்தான் நான் கொடுக்க விரும்புகிறேன்.
6. If you work without love, you are working like a slave. When you work with love, you work like an emperor. Your work is your joy; your work is your dance.
அன்பின்றிப் பணிபுரிந்தால், நீங்கள் ஒரு அடிமையைப் போலப் பணியாற்றுகிறீர்கள். அன்புடன் பணிபுரியும்போது, நீங்கள் ஒரு அரசரைப் போலப் பணியாற்றுகிறீர்கள். உங்கள் பணியே உங்கள் மகிழ்ச்சியாக மாறுகிறது; உங்கள் பணியே நீங்கள் ஆடவேண்டிய ஆடுகளமாகிறது.
7. The world is nothing but your own magnified mind.
உலகம் என்பது உங்கள் சொந்த மனதின் பெரிதாக்கப்பட்ட வடிவமே அன்றி வேறல்ல.
8. It is a strange thing that every child is born with a closed hand and everybody dies with an open hand.
ஒவ்வொரு குழந்தையும் கைகளை மூடிய நிலையிலேயே பிறக்கிறது, ஆனால் அனைவரும் கைகளைத் திறந்த நிலையிலேயே இறக்கிறார்கள் என்பது ஒரு விசித்திரமான விஷயம்.
9. The real question is not whether life exists after death. The real question is whether you are alive before death.
உண்மையான கேள்வி, இறப்பிற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறதா என்பதல்ல; இறப்பிற்கு முன்பாக நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா என்பது தான் உண்மையான கேள்வி.
10. You will find meaning in life only if you create it. It is a poetry to be composed ... It is a song to be sung ... It is a dance to be danced ...
வாழ்க்கைக்கான அர்த்தத்தை நீங்களே உருவாக்கிக்கொண்டால் மட்டுமே அதைக் கண்டடைய முடியும். அது இயற்றப்பட வேண்டிய ஒரு கவிதை ... பாடப்பட வேண்டிய ஒரு பாடல் ... ஆடப்பட வேண்டிய ஒரு நடனம் ...
Comments
Post a Comment