பேசும் மெளனம்

பேசும் மெளனம்

1. I have often regretted my speech, but never my silence- Xenocrates


என் பேச்சுக்காக நான் பலமுறை வருந்தியிருக்கிறேன், ஆனால் என் மௌனத்திற்காக நான் ஒருபோதும் வருந்தியதில்லை.


2. Silence is a fence around wisdom.


மெளனம் என்பது ஞானத்தைக் காக்கும் வேலி.


3. Listen to the music of silence.


வார்த்தைகள் அடங்கிய பின், மௌனம் பாடும் இசையைக் கேளுங்கள்.


4. Time and silence are the most luxurious things today- Tom Ford


இன்று நேரமும் மெளனமும் தான் மிகப்பெரிய ஆடம்பரங்கள்.


5. In music, silence is more important than sound- Miles Davis


இசையில், ஒலியை விட மௌனமே மிக முக்கியமானது.


6. When you can bear your own silence, you are free- Mooji


எப்போது உங்களால் உங்களுடைய சொந்த மெளனத்தைத் தாங்கிக் கொள்ள முடிகிறதோ, அப்போது நீங்கள் சுதந்திரமாகிறீர்கள்.


7. Don't look for meaning in the words. Listen to the silences- Samuel Beckett 


வார்த்தைகளில் அர்த்தத்தைத் தேடாதீர்கள். மெளனங்களைக் கவனித்துக் கேளுங்கள்.


8. He who does not understand your silence will probably not understand your words-

Elbert Hubbard


உங்களுடைய மெளனத்தைப் புரிந்து கொள்ள முடியாதவரால், உங்களுடைய வார்த்தைகளையும் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.


9. The quieter you become, the more you can hear.


நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களால் கேட்க முடியும்.


10. Those who know do not speak. Those who speak do not know- Lao Tzu


அறிந்தவர்கள் பேசுவதில்லை. பேசுபவர்கள் அறிந்திருப்பதில்லை.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14