Lao Tzu- மணி மொழிகள்
Lao Tzu- மணி மொழிகள்
Lao Tzu Quotes
1. Knowledge is a treasure, but practice is the key to it.
அறிவு ஒரு பொக்கிஷம், பயிற்சியே அதற்கான திறவுகோல்.
2. New Beginnings are often disguised as painful endings.
புதிய தொடக்கங்கள் பெரும்பாலும் வேதனையான முடிவுகளின் வடிவத்திலேயே வருகின்றன.
3. The flame that burns twice as bright burns half as long.
இரண்டு மடங்கு பிரகாசமாக எரியும் சுடர், பாதி காலமே ஒளி தரும்.
4. Perfection is the willingness to be imperfect.
முழுமையற்றதை ஏற்றுக்கொள்வதே முழுமைக்கான வழி.
5. A good traveler has no fixed plans, and is not intent on arriving.
ஒரு சிறந்த பயணிக்கு நிலையான திட்டங்கள் இருப்பதில்லை, ஓரிடத்தைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமும் இருப்பதில்லை.
6. He who knows that enough is enough will always have enough.
எது போதும் என்பதை அறிந்தவனுக்கு, எப்போதுமே எல்லாமே போதுமானதாக இருக்கும்.
7. If you are depressed, you are living in the past. If you are anxious, you are in the future. If you are at peace, you are living in the present.
நீங்கள் மனச்சோர்வில் இருந்தால், கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள். நீங்கள் பதற்றமாக இருந்தால், எதிர்காலத்தில் வாழ்கிறீர்கள். நீங்கள் அமைதியாக இருந்தால், நிகழ்காலத்தில் வாழ்கிறீர்கள்.
8. To see the things in the seed that is genius.
விதைக்குள் இருக்கும் விருட்சத்தைக் காண்பதே பேரறிவு.
9. When I let go of what I am, I become what I might be.
நான் என்னவாக இருக்கிறேனோ அதை விட்டுவிடும்போது, நான் என்னவாக முடியுமோ அதுவாக மாறுகிறேன்.
10. When you realize there is nothing lacking, the whole world belongs to you.
எப்பொழுது உங்களுக்குக் குறையேதுமில்லை என்று தோன்றுகிறதோ, அப்பொழுது இந்த உலகம் முழுமையும் உங்களுக்குச் சொந்தமாகிறது.
Comments
Post a Comment