போர்த்தொழில் போக்கு
போர்த்தொழில் போக்கு
1. Peace is not an absence of war, it is a virtue, a state of mind, a disposition for benevolence, confidence, justice- Baruch Spinoza
அமைதி என்பது போர் இல்லாமை மட்டுமல்ல; அது ஒரு நற்பண்பு, ஒரு மனோநிலை, ஒரு நன்னெறி, நம்பிக்கை மற்றும் நீதிக்கான ஒரு மனப்பாங்கு.
2. There never was a good war or a bad peace- Benjamin Franklin
நல்ல போர் என்றோ, கெட்ட அமைதி என்றோ எதுவுமே இருந்ததில்லை.
3. How can you have a war on terrorism when war itself is terrorism? - Howard Zinn
பயங்கரவாதமே ஒரு போர் எனும் போது, பயங்கரவாதத்திற்கு எதிராக நீங்கள் எப்படி ஒரு போரை நடத்த முடியும்?
4. War is what happens when language fails- Margaret Atwood
மொழி தோற்றுப்போகும் புள்ளியில் தான் போர் தொடங்குகிறது.
5. War does not determine who is right- only who is left- Bertrand Russell
யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதைப் போர் தீர்மானிப்பதில்லை—யார் எஞ்சியிருக்கிறார்கள் என்பதை மட்டுமே அது தீர்மானிக்கிறது.
6. The more you sweat in peace, the less you bleed in war- George S Patton
அமைதிக்காக நீங்கள் எவ்வளவு அதிகமாக வியர்வை சிந்துகிறீர்களோ, போருக்காக அவ்வளவு குறைவாகவே இரத்தம் சிந்துவீர்கள்.
7. The supreme art of war is to subdue the enemy without fighting- Sun Tzu
போரிடாமல் எதிரியைப் பணிய வைப்பதே போர்க்கலையின் ஆகச்சிறந்த உத்தியாகும்.
8. There are perhaps many causes worth dying for, but to me, certainly, there are none worth killing for- Albert Einstein
ஒன்றின் பொருட்டு உயிரையே கொடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் கொல்வதற்குத் தகுதியான ஒரு காரணம் கூட நிச்சயமாக என்னிடம் இல்லை.
9. I know not with what weapons World war III will be fought but World war IV will be fought with sticks and stones- Albert Einstein
மூன்றாம் உலகப் போர் எந்த ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான்காம் உலகப் போர் கட்டைகளையும் கற்களையும் கொண்டுதான் நடத்தப்படும்.
10. In a war, everyone loses, including the winner- Neville Chamberlain
ஒரு போரில் வென்றவர் உட்பட அனைவரும் தோல்வியடைகிறார்கள்.
Comments
Post a Comment