James Clear- மணி மொழிகள்- 2
James Clear- மணி மொழிகள்- 2
James Clear Quotes- 2
1. You have to fall in love with boredom.
சலிப்புடன் காதல் கொள்ளுங்கள்.
2. When the world seems uncontrollable, focus on what you can control.
உலகம் கட்டுப்பாடற்றதாகத் தோன்றும்போது, உங்களால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் கவனம் செலுத்துங்கள்.
3. Life is a series of tradeoffs and greater results usually require greater tradeoffs .
வாழ்க்கை என்பது பரிமாற்றங்களின் தொடர் மட்டுமே. மேலும், பெரிய முடிவுகளுக்கு பொதுவாகப் பெரிய பரிமாற்றங்கள் தேவைப்படுகின்றன.
4. The willingness to do the unsexy work is a competitive advantage.
கவர்ச்சியற்ற வேலையைச் செய்வதில் விருப்பம் கொள்வது போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனுகூலத்தை அளிக்கிறது.
5. The people who stick with things for years and never stop almost always win the race.
பல்லாண்டுகளாக ஒரு சில செயல்களைக் கடைப்பிடிப்பவர்கள் மற்றும் அதனை ஒருபோதும் நிறுத்தாதவர்கள் எப்போதும் பந்தயத்தில் வெற்றி பெறுகிறார்கள்.
6. The secret of creative work is to make a lot and publish a little.
படைப்பாற்றல் மிக்க எழுத்தின் இரகசியம் என்பது நிறைய எழுதுவதிலும் குறைவாகப் பதிவிடுதலிலும் இருக்கிறது.
7. Goals are good for setting a direction but Systems are best for making progress.
இலக்குகள் திசையை மட்டுமே தீர்மானிக்கும். அமைப்புகளே முன்னேற்றத்திற்கு அடிகோலும்.
8. Motion does not equal action. Busyness does not equal effectiveness.
அசைவு என்பது செயல் ஆகாது. சுறுசுறுப்பு எப்போதும் செயல்திறன் ஆகாது.
9. The Quality of your thoughts is determined by the quality of your reading.
உங்கள் எண்ணங்களின் தரத்தை நீங்கள் படிப்பவற்றின் தரம் தீர்மானிக்கிறது.
10. The costs of your good habits are on the present. The cost of bad habits are in the future.
உங்கள் நற்பழக்கங்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை நிகழ் காலத்தில் இருக்கிறது. உங்கள் தீய பழக்கங்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை எதிர் காலத்தில் இருக்கிறது.
Comments
Post a Comment