பங்குச்சந்தை பதில்கள் - 11
பங்குச்சந்தை பதில்கள் - 11
கேள்வி : பங்குச்சந்தை ஆட்டம் கண்டது பார்த்தீரா ?
பதில் : அது ஆட்டம் இல்லை , அசைவு .
கேள்வி : எந்தப் பங்கு அடுத்த ஓராண்டில் 100 சதவீதம் கூடும் ?
பதில் : ஓர் ஆண்டு கழித்துச் சொல்கிறேன் .
கேள்வி : இலவசப்பங்குகள் இலவசம் தானே ? அவற்றை விற்று வைத்தால் என்ன ?
பதில் : இலவசம் என்றால் இலவசம் என்று அர்த்தமில்லை , விலை மதிப்பற்றது என்று அர்த்தம் .
கேள்வி : பங்குகள் இரட்டிப்பானதும் விற்பதில் என்ன தவறு ?
பதில் : இரட்டிப்பான பங்குகளை விற்றால் பன்மடங்காளர்களை எவ்விதம் கைப்பற்றுவது ?
கேள்வி : Assured interest தானே சிறந்தது ?
பதில் : உத்தரவாதமான வட்டிக்கான விலை அதிகம் .
கேள்வி : எந்தக் கடன் அட்டை வாங்குவது நல்லது ?
பதில் : எந்தக் கடன் அட்டையும் வாங்காமலிருப்பதே நல்லது !
கேள்வி : PE Multiple ஐ ஒரே வரியில் விளக்க முடியுமா ?
பதில் : நிறுவனத்தின் வருமானம் குறித்த சந்தையின் சராசரி எதிர்பார்ப்பு .
கேள்வி : Peter Lynch எழுதிய புத்தகங்களில் Oneup on Wall Street மற்றும் Beating the Street இவற்றில் எது சிறந்தது ?
பதில் : இரண்டையும் விட அவருடைய Learn to Earn இன்னும் சிறந்தது .
கேள்வி : முதலீட்டாளரின் முக்கிய வேலை என்ன ?
பதில் : Capital allocation என்று சொல்லப்படும் முதல் ஒதுக்கீடு .
கேள்வி : இந்தக் காளைச்சந்தையில் நான் தொட்டதெல்லாம் துலங்குகிறது ?
பதில் : உங்கள் கேள்வியிலேயே அதற்கான பதிலும் இருக்கிறது .
Comments
Post a Comment