ஜென் கதைகள் - 4
ஜென் கதைகள் - 4 1 . செய்முறை வர்த்தகம் . Algo trading என்பதான செய்முறை வர்த்தகம் குறித்து விளக்கமாகக் கூறுமாறு பங்குக் குருவிடம் சிஷ்யர்கள் கேட்டுக் கொண்டனர் . செய்முறை வர்த்தகம் என்பது கணிணி நிரல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வர்த்தக முறையாகும் . எந்த ஒரு வர்த்தக முறையும் மனித சிந்தனைக்கு மாற்றாக இருக்குமானால் அது அறவே ஒதுக்கப்பட வேண்டியதும் களையப்பட வேண்டியதுமாகும் . ஒரு முறை பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண்மணி ஒருவர் ஒரு கிலோ ரவை வாங்கினார் . அங்கிருந்த விற்பனையாளர் எலிப் பாஷாணம் ஒன்றை வாங்குமாறு வலியுறுத்தினார் . பிரச்னை , மேலாளர் வரை சென்றது . மேலாளர் , 100 கிலோ ரவை விற்றால் ஒரு எலிப் பாஷாணம் விற்கும் என்பது நிறுவன கணிணி நிரலின் கணக்கு . எங்கள் பதிவேட்டின் படி நீங்கள் வாங்கிய ஒரு கிலோவுடன் ரவை நூறு கிலோ என்ற கணக்கை எட்டி விட்டது . நீங்கள் எலிப் பாஷாணத்தை வாங்கியே தீர வேண்டும் என்று கூறினார் . மேலும் எங்கள் கணிணி நிரல் பொய் சொல்லாது என்றும் கூறிக் கொண்டார் . சிறு வயதில் நகர்ந்து செல்லும் மேகக் கூட்டங்களில் விதம் விதமான உருவங்களைப் பார்த்து விளையாடும் விளையாட்டை பெரியவர்கள் ஆன பின்ன...