Posts

Showing posts from September, 2023

John Bogle - மணி மொழிகள்

John Bogle - மணி மொழிகள் 1. A stock market is a giant distraction to the business of investing . முதலீட்டிற்கான ஒரு பெரும் கவனச்சிதறல் பங்குச்சந்தை .  2. When there are multiple solutions to a problem , choose the simplest one . பிரச்னை ஒன்றுக்கு நிறையத் தீர்வுகள் இருக்கிறதென்றால் இருப்பதிலேயே எளிமையான ஒரு தீர்வைத் தேர்ந்தெடுங்கள் .  3. Fund performance comes and goes . Costs go on forever . நிதி செயல்பாடுகள் வரும் , போகும் . நிதி செலவுகள் வந்தால் போகாது .  4. Don't look for the needle in the haystack . Just buy the haystack . வைக்கோற்போரில் ஊசியைத் தேடாதீர்கள் . வைக்கோற்போரையே வாங்கி விடுங்கள் .  5. If you live by the sword , you die by the sword . வாளில் வாழ்பவன் வாளில் இறப்பான் . 6. The greatest enemy of a good plan is the dream of a perfect plan.  நல்ல திட்டங்களின் எதிரி பூரணமான திட்டம் குறித்த கனவு .  7. The two greatest enemies of the equity fund investor are expenses and emotions . பங்கு நிதிகளின் இரு பெரும் எதிரிகள் பங்கு நிதி மேலாண்மைச் செலவு மற்று...

நிதானமாக செல்வம் சேருங்கள்

நிதானமாக செல்வம் சேருங்கள் Get Rich Slowly நான் அவசரப்பட மாட்டேன் .  தாமதம் செய்வேன் . இந்தப் பரபரப்பினால் என்ன பயன் ? வானத்திற்கு ஒவ்வொரு இரவும் விண்மீன்கள் வந்து விடுகின்றன .பேரலைகளும் கடலுக்கு வந்து பாய்கின்றன . காலமோ இடமோ பள்ளமோ மேடோ எனக்குச் சேர வேண்டியதைச் சேராமல் செய்து விட முடியாது - ஜான் பர்ரோஸ்            •                     *                    * செல்வம் சேர்ப்பதற்கான கணித சமன்பாடு , மூன்று முக்கியக் காரணிகளால் ஆகப்பெற்றது . முதலாவது , நீங்கள் இடும் முதலீடு . அது ஒரு முறை முதலீடாக இல்லாமல் தொடர்ந்த வாக்கிலான முதலீடாக இருக்க வேண்டியது முக்கியம் . இரண்டாவது , முதலீட்டின் காலம் . மூன்றாவது , இந்த முதலீட்டுக்கு நீங்கள் ஈட்டும் வட்டி விகிதம் .  இந்த மூன்று அளவுருக்களில் எவ்வளவு முதலீடு இடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு காலத்திற்கு இடுகிறீர்கள் என்பது உங்கள் கையில் உள்ளது . ஆனால் இந்த முதலீடு ஈட்டும் வட்டி விகிதம் உங்கள் கையில் இல்லை . அது நி...

குறுக்கு வழி சறுக்கு வழி

குறுக்கு வழி சறுக்கு வழி Short cut Quotes 1. A shortcut is the longest distance between two points - Charles Issawi குறுக்கு வழி என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான அதிகபட்ச தூரமாகும் .  2.  If you take shortcuts , you get cut short - Gary Busey குறுக்கு வழி சறுக்கு வழி . 3. What comes easy won't last , What lasts won't come easy எளிதாகக் கிடைப்பது நீடித்திருக்காது . நீடித்திருப்பது எளிதாகக் கிடைக்காது . 4. There are no shortcuts in evolution - Louis D Brandels பரிணாமத்தில் பாதைச் சுருக்கங்கள் ஏதுமில்லை . 5. Write . Rewrite . When not writing or rewriting , read . I know of no shortcuts - Larry L King எழுதுங்கள் . எழுதியதை அடித்துத் திருத்தி மீண்டும் எழுதுங்கள் . இவை இரண்டையும் செய்யாத போது படியுங்கள் . வேறு வழிமுறைகள் ஏதுமில்லை . 6. You have got to put your head down and do the work . There are no shortcuts - Russell Simmons தலை குனிந்து வேலை செய்தாக வேண்டும் . வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாது . 7. There is not shortcuts to compounding . கூட்டுப் பெருக்கத்திற்குக் குறுக்க...

பழமொழி பதில்கள் - 1

பழமொழி பதில்கள் - 1 கேள்வி : பங்குச்சந்தை வியாபாரம் ஏன் அவ்வளவு பலன் தருவதாக இல்லை ? பதில் : அடிக்கடி பறித்து நட்ட செடி ஒருபோதும் வளர்வதில்லை . கேள்வி : திடீர் பணக்காரர்கள் நாளடைவில் தத்தம் பழைய நிலைமைக்குத் திரும்புவது ஏன் ? பதில் : சட்டென்று வருவது பொட்டென்று போகும் . கேள்வி : இந்தக் காளைச் சந்தையில் முதலீட்டுப் பெருக்கம் மூலமாக இலாபம் கிடைக்கும் போது பங்காதாயம் தரும் பங்குகளில் ஏன் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் ? பதில் : காற்று வீசும் போது கை விசிறியின் பயன் தெரியாது . கேள்வி : Futures and Options குறித்து நன்கு படித்து புரிந்து கொண்டு நிலைப்பாடு எடுப்பது குறித்து ? பதில் : நெருப்பைத் தெரியாமல் மிதித்தாலும் சுடும் . தெரிந்து மிதித்தாலும் சுடும் . கேள்வி : தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து ? பதில் : தங்கத் திறவுகோல் எல்லாப் பூட்டுக்களையும் திறக்கும் . கேள்வி : கடன் அட்டைகளை முறையாகப் பயன்படுத்துவது குறித்து ? பதில் : கடன் அட்டை சொர்க்கத்தின் சாவியாகும் . நரகத்தின் சாவியும் அதுவே ஆகும் .  கேள்வி : பங்குச்சந்தையின் எதிர்காலப் போக்கை எவ்விதம் கணிப்பது ? பதில் : எதிர்காலத்தை வரையறுக...

சூதாட்டக்காரர்களின் மாயை

சூதாட்டக்காரர்களின் மாயை Gamblers Fallacy நாணயம் ஒன்றைச் சுண்டுகையில் தொடர்ந்து ஐந்து முறை தலை விழுகிறது . அடுத்த சுண்டுதலில் எது விழும் ? தலையா அல்லது பூவா ? தலை என்று விடை சொன்னாலும் அல்லது பூ என்று சொன்னாலும் நீங்கள் சூதாட்ட மாயைக்கு ஆட்பட்டிருப்பதாக அர்த்தம் . அடுத்த சுண்டுகையில் தலை அல்லது பூ விழுவதற்கு 50 சதவீத வாய்ப்பு இருக்கிறது . தொடர்ந்து வரும் சுண்டுதலிலும் இதே வாய்ப்பு மட்டுமே உள்ளது . மற்றபடி இந்த வாய்ப்பு இதற்கு முன்னர் விழுந்த தலை அல்லது பூவிலிருந்து தனிப்பட்டது . ஐந்து தடவை தொடர்ந்து தலை விழுந்தால் அடுத்தும் தலை விழும் என்று நினைப்பது அல்லது ஐந்து முறை தலை விழுந்து விட்டது இது பூவின் முறை என்று நினைப்பது தவறான எண்ணப்போக்கு . ஒவ்வொரு சுண்டுதலும் தனிப்பட்டதான ஒரு நிகழ்வு . முன்னர் நடந்த நிகழ்வு அதனைப் பாதிக்காது . சூதாட்ட வட்டு (roulette wheel) ஒரு முறை தொடர்ந்தவாக்கில் கருப்பு நிறத்தில் நின்றது . அடுத்து சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று ஊகித்து சூதாட்டக்காரர்கள் சிவப்பு நிறத்தில் பந்தயம் கட்டினர் . ஆனால் தொடர்ந்து கருப்பு நிறமே வரப்பெற்று சிவப்பு நிறம் 27 வது தடவை ...