குறுக்கு வழி சறுக்கு வழி

குறுக்கு வழி சறுக்கு வழி

Short cut Quotes


1. A shortcut is the longest distance between two points - Charles Issawi

குறுக்கு வழி என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான அதிகபட்ச தூரமாகும் . 


2.  If you take shortcuts , you get cut short - Gary Busey

குறுக்கு வழி சறுக்கு வழி .


3. What comes easy won't last , What lasts won't come easy

எளிதாகக் கிடைப்பது நீடித்திருக்காது . நீடித்திருப்பது எளிதாகக் கிடைக்காது .


4. There are no shortcuts in evolution - Louis D Brandels

பரிணாமத்தில் பாதைச் சுருக்கங்கள் ஏதுமில்லை .


5. Write . Rewrite . When not writing or rewriting , read . I know of no shortcuts - Larry L King

எழுதுங்கள் . எழுதியதை அடித்துத் திருத்தி மீண்டும் எழுதுங்கள் . இவை இரண்டையும் செய்யாத போது படியுங்கள் . வேறு வழிமுறைகள் ஏதுமில்லை .


6. You have got to put your head down and do the work . There are no shortcuts - Russell Simmons

தலை குனிந்து வேலை செய்தாக வேண்டும் . வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாது .


7. There is not shortcuts to compounding .

கூட்டுப் பெருக்கத்திற்குக் குறுக்கு வழிகள் ஏதுமில்லை .


8. Every shortcut has a price usually greater than the reward - Bryant H McGill

ஒவ்வொரு குறுக்கு வழிக்கும் ஒரு விலை உள்ளது . அதன் விலை உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் பரிசை விட அதிகமானது .


9. Getting a mentor is the shortcut to success - Bo Sanchez

குரு ஒருவரைக் கொண்டிருப்பது வெற்றிக்கான ஒரு குறுக்கு வழியாகும் .


10. Forget about shortcuts . Instead , enjoy the wonder of your path - Paulo Coelho

குறுக்கு வழிகளை மறந்து விடுங்கள் . மாறாக பாதையில் பரவசம் கொள்ளுங்கள் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14