வாயை மூடி பேசவும்
வாயை மூடி பேசவும் எப்படிப்பட்ட வார்த்தைப் பின்னல்களும் தோற்றுவிக்க முடியாத உணர்ச்சியை மிகச் சரியாகக் கையாளப்பட்ட சிறிய மௌனம் உணர்த்தி விடும் - மார்க் ட்வெய்ன் மனிதன் தோன்றிய புதிதில் தன் உணர்ச்சிகளை ஸ்பரிசத்தினால் தான் வெளியிட்டிருப்பான் என்று தோன்றுகிறது . இன்னமும் கூடத்தான் . மனிதன் பேச்சிலே இவ்வளவு வல்லாளன் ஆன பிறகும் கூடத்தான் - காண்டேகர் சொல்லாத சொல்லுக்கு விலை ஏதுமில்லை . * * * அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் ஒரு வழிமுறையாக Max Gunther இந்த Closed Mouth என்ற கருத்தாக்கத்தைச் சொல்கிறார் . அமெரிக்க ஜனாதிபதி Calvin Coolidge ன் கதையைக் கொண்டு அதனைச் சுருக்கமாகப் பார்க்கலாம் . Coolidge அவசியத்திற்குப் பேசுவாரேயன்றி அனாவசியமாக ஒரு வார்த்தை பேச மாட்டார் . அவரைப் பற்றிய ஒரு பிரபலமான நகைச்சுவை : வாஷிங்டனைச...