வாழ்க்கை மொழிகள் - 4
வாழ்க்கை மொழிகள் - 4
1. After the game , the king and the pawn go into the same box - Italian Proverb
ஆட்டம் முடிந்த பின்பு ராஜாவும் சிப்பாயும் ஒரே பெட்டியில் அடைக்கலமாகிறார்கள் .
2. Be tolerance with others and strict with yourself - Marcus Aurelius
மற்றவர்களிடம் சகிப்புத் தன்மையுடன் இருங்கள் . உங்களிடம் கண்டிப்புடன் இருங்கள் .
3. We all have just as much opportunity to be happy as we have to be miserable - Munger
நம் முன்னே மனமகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன . மனவலியுடன் இருப்பதற்கும் அதே அளவு வாய்ப்புகள் உள்ளன .
4. As long as you live , keep learning how to live - Seneca
எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ அவ்வளவு காலம் எப்படி வாழ்வது என்று கற்ற வண்ணமே இருங்கள் .
5. Happiness will never come to those who fail to appreciate what they already have - Buddha
மகிழ்ச்சி என்பது ஏற்கெனவே கைக்கொண்டவைகளை ஆராதிக்காதவர்களுக்கு ஒருபோதும் கிடைக்கப்பெறாது .
6. Don't count the days . Make the days count - Muhammad Ali
நாட்களை வெறுமனே கணக்கிடாதீர்கள் . ஒவ்வொரு நாளையும் கணக்கில் கொண்டு வாருங்கள் .
7. By the time a man realizes that may be his father was right , he usually has a son who thinks he's wrong - Charles Wadsworth
தந்தை செய்தது சரி என்று ஒருவர் உணரும் போது அவர் செய்தது தவறு என்று எண்ணும் ஒரு மகன் உருவாகியிருப்பார் .
8. It is possible to store the mind with a million facts and still be entirely uneducated - Alec Bourne
இலட்சக்கணக்கான தகவல்களை மனதில் ஏற்றி அதே சமயம் படிப்பறிவு இல்லாதவராக ஒருவர் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது .
9. Tension is who you think you are and relaxation is who you are - Buddhist saying
நீங்கள் உங்களைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பது பதட்டம் . நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பது இளக்கம் .
10. Life is a series of natural and spantaneous changes . Don't resist them , that only create sorrow . Let reality be reality . Let things flow naturally forward in whatever way they like - Lao Tzu
வாழ்க்கை என்பது இயற்கையான மற்றும் தன்னிச்சையான மாற்றங்களின் ஒரு தொடர்ச்சியாகும் . அதனைத் தடுத்து நிறுத்தாதீர்கள் . அது வருத்தத்தை விளைவிப்பதாக இருக்கும் . வாழ்க்கையின் இந்த மெய்யியல்பு மெய்யியல்பாகவே இருக்கட்டும் . வாழ்க்கை அதன் இயற்கையான போக்கில் மலர்ந்து மணம் பரப்பட்டும் .
Comments
Post a Comment