பங்குச்சந்தை பதில்கள் - 8
பங்குச்சந்தை பதில்கள் - 8
கேள்வி : கிரெடிட் கார்டு மூலமாகப் பணம் பெற்று குறுகிய காலப் பங்கு முதலீடுகள் செய்து இலாபம் பெறுவது குறித்து ?
பதில் : ∆°¢$€°
கேள்வி : காளைச்சந்தை அல்லது கரடிச்சந்தை - எது அதிக நாட்கள் நீடிப்பதாக இருக்கும் ?
பதில் : இரண்டுமில்லை . அது பக்கவாட்டுச் சந்தை என்று அழைக்கப்படும் range bound market .
கேள்வி : மும்பையிலிருந்து முதலீட்டுக்கு உதவுமா ?
பதில் : வாரன் பஃபெட் நியூயார்க்கில் இல்லை . ஒமாகா எனப்படும் ஒரு தூங்கும் நகரத்தில் மட்டுமே இருக்கிறார் .
கேள்வி : பங்குச்சந்தை வர்த்தகத்தைக் கால நீட்டிப்பு செய்வது சாதகமா அல்லது பாதகமா ?
பதில் : போதாத காலம் .
கேள்வி : என் நண்பர் F & O ல் கொழிக்கிறார் ? இதைப்பற்றி உங்கள் கருத்து ?
பதில் : மேலேயிருந்து விழும் போது முதலில் பறப்பது மாதிரி தான் இருக்கும் .
கேள்வி : நீண்ட கால அளவில் நாம் எல்லோரும் இறந்து விடுவோம் என்று முதலீட்டாளர் Keynes கூறியிருக்கிறாரே ?
பதில் : ஆனால் நீண்ட கால அளவில் தரமான நிறுவனங்கள் உயிர் வாழும் . நம் வாரிசுகளும் வாழையடி வாழையாக வாழ்ந்து வருவார்கள் .
கேள்வி : நிதிகளின் நிதியில் (Fund of Funds) முதலீடு செய்யலாமா ? இரண்டு நிதி மேலாளர்கள் இருப்பது நல்லது தானே ? Two heads are better than one ?
பதில் : தாராளமாக முதலீடு செய்யலாம் . நிதி செலவுகளும் இரட்டிப்பாகும் . பரவாயில்லையா ?
கேள்வி : வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனப் பங்கு கோடிகளில் வர்த்தகமாகிறது . சிறு முதலீட்டாளர்கள் அதில் எப்படி முதலீட்டை மேற்கொள்வது ?
பதில் : Class B பங்குகளில் முதலீடு செய்யலாம் . Class B பங்கு Class A பங்கில் 1500 ல் 1. அதாவது 1500 Class B பங்குகள் ஒரு Class A பங்குக்குச் சமம் . ஒரு Class B பங்கின் விலை இந்திய மதிப்பில் 26704 ரூபாய் .
கேள்வி : பங்குகளை இனங்கண்டு அவைகளைக் குறை மதிப்பீட்டில் வாங்கி காலா காலத்துக்கும் வைத்திருத்தல் என்பதைத் தானே நீட்டி முழக்கி உங்கள் பதிவுகள் வழி சொல்ல வருகிறீர்கள் ?
பதில் : ஆம் . உங்களுக்கு மட்டுமல்ல , எனக்கும் அதனைச் சொல்லிக்கொள்ள விழைகிறேன் . நானும் திசை மாறிச் சென்று விடக்கூடாது அல்லவா ?
கேள்வி : தனிப்பட்ட பங்குகள் அல்லது சென்செக்ஸ் முதலான குறியீடுகள் - இவைகளில் எதனை short செய்வது சிறந்தது ?
பதில் : தனிப்பட்ட பங்குகளை short செய்வதை விட சந்தைக் குறியீடுகளை short செய்வது சிறப்பு . இவையிரண்டையும் short செய்யாமல் இருப்பது அதை விட சிறப்பு .
Comments
Post a Comment