பணத்தோட்டம்
பணத்தோட்டம் பங்குச்சந்தை முதலீடுகளை ஒரு தோட்டமாகக் கற்பனை செய்து பார்க்கலாம் . முதன்முதலாக ஒரு கன்றை (நிறுவனப் பங்கை) ஊன்றி வைக்கிறீர்கள் . அது தான் வரும் வசந்த காலங்களில் பூத்துக் குலுங்கப் போகும் உங்கள் முதலீட்டுத் தோட்டத்திற்கான ஆணி வேராகும் . மா , பலா , கொய்யா போன்றவற்றை மட்டுமின்றி நீண்ட கால அளவில் பலன்களைத் தரும் தேக்கு (Asian Paints, HDFC , L & T ) முதலான மரங்களையும் வளர்த்து வருகிறீர்கள் . ரப்பர் மரம் (Balkrishna Industries) காபி (CCL Products) பருத்தி (Ambika Cotton Mill) மசகு எண்ணெய் (Castrol) நெற்பயிர் (Chamanlal Setia Exports) புகையிலைச் செடிகள் (ITC) திராட்சைக் கொடிகள் (GM Breweries) மட்டுமின்றி வித்தியாசமான சில விதை வகைகளையும் தூவி வைக்கிறீர்கள் (Nesco , Tata Elxsi) சமவெளியில் மலரவே மலராது என்று சொல்லப்படும் மலர் வகைகள் கூட உங்கள் தோட்டத்தில் மலர்கின்றன . தோட்டத்திற்குள் ஒரு தோட்டமாக Bajaj Holdings , Tata Investment Corporation முதலிய பங்குகளையும் மற்றும் பரஸ்பர நிதிகளையும் வைத்துப் பராமரிக்கலாம் . 30 வகையான மரங்களைக் கொண்ட தோ...