லியோனார்டோ டாவின்சி - மணி மொழிகள்
லியோனார்டோ டாவின்சி - மணி மொழிகள்
Leonardo da Vinci Quotes
1. Learning never exhausts the mind .
கற்றல் உங்கள் மனதை ஒருபோதும் சோர்வடையச் செய்யாது .
2. The noblest pleasure is the joy of understanding .
புரிந்து கொள்ளலின் அக மலர்ச்சியே உன்னதமான மகிழ்ச்சி .
3. Art is never finished , only abandoned .
கலை ஒருபோதும் முற்றுப் பெறுவதில்லை . அது கை விட மட்டுமே படுகிறது .
4. There are three classes of people : those who see , those who see when they are shown , those who do not see .
மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் . முதல் வகையினர் பார்ப்பவர்கள் . இரண்டாவது காண்பித்தால் பார்ப்பவர்கள் . மூன்றாவது பார்க்காதவர்கள் .
5. Tears come from the heart and not from the brain .
கண்ணீர்த்துளிகள் மூளையிலிருந்து வருவதில்லை . அவை இதயத்திலிருந்து வருகின்றன .
6. Iron rusts from disuse , water loses its purity from stagnation ... ever so does inaction sap the vigor of the mind .
உபயோகம் இல்லாவிட்டால் இரும்பு துருப்பிடிக்கிறது . தேங்கியே கிடக்கும் தண்ணீர் தன் தூய்மையை இழக்கிறது . செயல்படாமை மனதின் வீரியத்தை வெட்டி வீழ்த்துகிறது .
7. Where there is shouting , there is no true knowledge .
எங்கு கூச்சல் எழுகிறதோ அங்கு உண்மையான அறிவு விடைபெறுகிறது .
8. Time stays long enough for anyone who will use it .
நேரம் அதனை உபயோகப் படுத்துபவர்களிடம் நீண்ட நேரம் தங்கியிருக்கும் .
9. He who wishes to be rich in a day will be hanged in a year .
ஒருநாளில் பணக்காரனாக வேண்டுமென்று விரும்புபவன் ஒரு வருடத்தில் தூக்கிலிடப்படுவான் .
10.As a well-spent day brings happy sleep , so a life well spent brings happy death .
மனநிறைவுடன் கழித்த ஒருநாள் மகிழ்ச்சியான தூக்கத்திற்கு வித்திடுவது மாதிரி மன நிறைவுடன் கழித்த ஒரு வாழ்க்கை மகிழ்ச்சியான மரணத்தைத் தழுவ வித்திடுகிறது .
Comments
Post a Comment