வாழ்க்கை மொழிகள் - 2

வாழ்க்கை மொழிகள் - 2


1. உங்கள் வசம் உள்ள திறமையை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பயன்படுத்தத் தயங்காதீர்கள் . இனிமையாகவும் உன்னதமாகவும் பாடக்கூடிய பறவைகள் மட்டும் தான் குரலெழுப்பலாம் என்று ஆகி விட்டால் காடு நிசப்தமாகி விடும் - ஹென்றி வேன் டைக்


2. ஒரு பொருளைப் பெறுவதைக் காட்டிலும் அந்தப் பொருளின் மீதுள்ள ஆவலே அதிக ஆனந்தம் தருவது - காளிதாசன்


3 . சிறந்த பளிங்குச்சிலை பளிங்குக் கல்லிற்குள் தான் இருக்கிறது - டி.எச் லாரன்ஸ்


4. ஒரு ஊசியின் காது இரண்டு நண்பர்களுக்கு அகலமானது . முழு உலகும் இரண்டு விரோதிகளுக்குக் குறுகலானது .


5 . பகிர்ந்த துன்பம் பாதியாகிறது . பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது .


6 . சொர்க்கத்துக்கு அனுப்புவதானால் கூட சாட்டையால் அடித்து விரட்டப்படுவதை நான் விரும்ப மாட்டேன் - லெனின்


7. கண் ஒரு சாதாரண உறுப்பு . ஆனால் பார்வையோ ஒரு மிகப்பெரிய கலை - கலீல் ஜிப்ரான்


8 . வெற்றிகளை விட சில தோல்விகள் வெகு வெற்றிகரமாக இருக்கின்றன .


9 . அடிக்கடி திரும்பத் திரும்ப ஒன்றைச் செய்வதால் அது திகட்டிப் போகும் . தாகமெடுப்பதற்கு ஓய்வு கொடுக்காதவன் தண்ணீர் குடிப்பதில் உள்ள உண்மையான இன்பத்தைக் காண முடியாது - மாண்டெயின்


10. யாருடன் சிரித்து மகிழ்ந்தாய் என்பதை மறந்து விடலாம் . யாருடன் கண்ணீர் சிந்தினாய் என்பதை மறக்க முடியாது .

Comments

Post a Comment

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14