அது நகர்கிறது . அது நகர்வதில்லை .
அது நகர்கிறது . அது நகர்வதில்லை . அது நகர்கிறது . அது நகர்வதில்லை . அது தூரத்தில் இருக்கிறது . அது அருகில் இருக்கிறது . அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது . அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது - உபநிஷதம் பங்குகளை முதலீடு செய்வதற்கான ஒரு வழிமுறையாக 6 அளவுருக்களைக் கொண்ட பங்குச் சலிப்பான் ( stock screen ) குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம் . அவை 1 . முதல் நீர்க்காமை Nil equity dilution / Minimum equity dilution 2. கடன் இல்லாமை Nil debt / Low debt 3. தரமான வளர்ச்சி Quality growth 4. அகழி Moat 5. நிறுவனர் பங்கு Skin in the game 6. அறம் Corporate governance ஆனால் இந்த 6 அளவுருக்களையும் ஒரு மதம் மாதிரி பின்பற்ற வேண்டும் என்கிற மாதிரி எதுவும் கிடையாது . இன்னும் சொல்லப்போனால் முதலீட்டு உத்திகளில் நெகிழ்வான தன்மையுடன் (flexibility) இருப்பது இன்னும் உறுதித் தன்மைக்கு இட்டுச் செல்வதாக இருக்கும் . எந்தெந்த சந்தர்ப்பங்களில் இந்த அளவுருக்களை விட்டு விலகலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் . 1. முதல் நீர்க்காமை . முதல் நீர்க்காமை என்பது ஒரு முக்கியமான அளவுரு . அத...