தீராக் காதல் மொழிகள்



தீராக் காதல் மொழிகள்

Passion Quotes

Passion - தீராக் காதல்/ வேட்கை/ பேரார்வம்


1. The only way to do great work is to love what you do - Steve Jobs

மிகப்பெரும் வேலைகளைச் செய்து முடிக்க வேண்டுமென்றால் அந்த வேலைகளில் காதல் கொள்ளுங்கள் .


2. Skills are cheap .

Passion is priceless .

திறமைகள் மலிவானவை. வேட்கை விலை மதிப்பற்றது .


3. Allow your passion to become your purpose and it will one day become your profession .

உங்கள் தீரா வேட்கையை உங்கள் வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்ளுங்கள். ஒருநாள் அது உங்கள் வாழ்க்கைக்கான தொழிலாகி விடும் .


4. People are prettiest when they talk about something they really love with passion in their eyes .

ஒருவர் எப்போது அழகாக இருக்கிறாரென்றால் அவர் எதனைக் காதலிக்கிறாரோ அதனைக் குறித்து கண்களில் பேரவாவுடன் பேசும் போது ...


5. Develop a passion for learning. If you do, you will never cease to grow

- Anthony J.D. Angelo

படிப்பதில் தீராக் காதல் கொள்ளுங்கள் . பின்னர் உங்கள் வளர்ச்சிக்கு எல்லை என்பதே இருக்காது .


6. I have no special talents . I am only passionately curious - Albert Einstein

தனிப்பட்ட திறமைகள் என்று எனக்கு ஏதுமில்லை. நான் ஆர்வத்தில் பேரவா கொண்டவன். அவ்வளவு மட்டுமே .


7. I would rather die of passion than of boredom

- Vincent van Gogh

அலுப்புடனும் சலிப்புடனும் வாழ்வதை விட தீராக்காதலில் இறப்பதையே நான் விரும்புகிறேன் .


8. Live what you love .

நீங்கள் எதைக் காதலிக்கிறீர்களோ அதையே வாழ்வாகக் கொள்ளுங்கள் .


9. Make your passion your paycheck .

உங்கள் தீராக் காதலை உங்களுக்கான காசோலை ஆக மாற்றுங்கள் .


10. No alarm clock needed. My passion wakes me

- Eric Thomas

எனக்கு அலாரம் தேவையில்லை. எனது பேரவாவே என்னை எழுப்பி விடும் .


11. The two most important days in your life are the day you born and the day you find out your why - Mark twain

உங்கள் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான நாட்கள் எதுவென்றால் ஒன்று உங்கள் பிறந்த நாள் . மற்றொன்று உங்களுக்கானதைக் கண்டடைந்த நாள் .


12. The best job in the world is getting paid to do what you love .

நீங்கள் விரும்பியதைச் செய்யப் பணம் பெறுவது தான் உலகத்திலேயே சிறந்த வேலை .


13. A goal has limits . But a passion has none .

இலக்கு ஒரு எல்லையைக் கொண்டது . தீராக் காதலுக்கு எல்லையே இல்லை .


14. Passion and money are not mutually exclusive . Finding your passion , will fuel your ability to make even more money . Even if you are not yet , making a living from that which you love .

தீராக் காதலும் பணமும் வேறு வேறானவை அல்ல . உங்களுக்கான தீராக் காதலைக் கண்டு கொண்டால் பெரும் செல்வம் சம்பாதிக்க ஒரு ஊற்றுக் கண்ணாக அது உதவும் . அவ்விதம் பெரும் செல்வம் பெறாவிட்டாலும் விரும்பியதைச் செய்த திருப்தியாவது கிடைக்கும் .


15. It's a beautiful thing when a carrier and a passion come together .

உங்களுக்கான வேலையும் உங்களுக்கான காதலும் ஒன்றிணைவது ஒரு அற்புதம் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14