பங்குச்சந்தை நகை அகராதி
பங்குச்சந்தை நகை அகராதி
(நகைச்சுவைக்காக மட்டும் , யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை)
Long Term Investment
ஒரு மாத முதலீடு
Short Term Investment
ஒரு வார முதலீடு
Demat Account
காளைச்சந்தையில் தொடங்கும் மற்றும் கரடிச்சந்தையில் உறங்கும் கணக்கு
Buyback
பங்கு விலையை செயற்கையாக உயர்த்தும் பொருட்டு நிறுவனங்கள் அறிவிப்பது
Delivery
தினசரி வணிகத்தில் வாங்கிய பங்கு மிகவும் குறைந்து விட்டால் எடுப்பது
Dividend
டெலிவரி எடுத்த பங்குகள் சில சமயம் கொடுப்பது
Target Price
நம் காலில் நாமே சுட்டுக் கொள்வது
Stop Loss
நம்மை நாமே சுட்டுக் கொள்வது
Bull Market
பங்குகளின் விலை உயர உயர வாங்கிக் குவிக்கும் சந்தை
Bear Market
பங்குகளின் விலை குறையக் குறைய விற்று விட்டு ஓடும் சந்தை
Trader
முன்னாள் முதலீட்டாளர்
Investor
பின்னாள் வணிகர்
Sector Funds
ஒரு துறை உச்சத்தில் இருக்கும் போது பரஸ்பர நிதி நிறுவனங்கள் வெளியிடுவது
Rupee Stocks
காளைச்சந்தையின் கடைசிக் கட்டத்தில் விலை உயரும் பங்குகள்
Multibagger
இரண்டு மடங்காகும் பங்குகள்
F & O
பங்குத் தொகுப்பிற்கு (Portfolio) இழப்புக் காப்பீடு. ஆனால் பங்குத் தொகுப்பே இல்லாமல் வாங்கப்படுவது .
Face Value
பங்காதாயம் மிகக் குறைவாகக் கிடைக்கும் போது தெரிய வருவது
IPO
காளைச்சந்தையில், உயர் மதிப்பில் நிறுவனங்கள் வெளியிடுவது / பட்டியலிடப்பட்டவுடன் முதலீட்டாளர்கள் விற்பது
NFO
காளைச்சந்தையில் , புதுப்புது பெயர்களில் , பத்து ரூபாய் யூனிட் பத்து ரூபாய்க்கே என்று பரஸ்பர நிதி நிறுவனங்கள் வெளியிடுவது
Board of Directors
நிறுவனத்திற்கு ஏதாவது பிரச்னை என்றால் சொந்தக் காரணங்களுக்காக இராஜினாமா செய்பவர்கள்
Tax Savings Scheme
மார்ச் மாதம் செய்யப்படும் முதலீடு
Annual Report
பழைய பேப்பர்காரர்களிடம் மொத்தமாகப் போடுவது
Buy & Hold
குறுகிய கால வர்த்தகத்தில் நஷ்டமாகி விட்டால் முதலீட்டாளர்கள் (?) செய்வது
Profit Booking
திடுதிப்பென்று பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்தால் அதற்காகச் சொல்லப்படும் காரணம்
Short Squeeze
திடுதிப்பென்று பங்கு விலைகள் கூடினால் அதற்காகச் சொல்லப்படும் காரணம்
Hold
Sell என்பதற்குப் பதிலாக பகுப்பாய்வாளர்கள் சொல்வது
Stock Split
காளைச்சந்தையில் பங்குகள் உயர்ந்த விலையில் வர்த்தகமாகும் போது நிறுவனங்கள் மேற்கொள்வது
Reverse Split
கரடிச் சந்தையில் பங்குகள் தரை தட்டும் போது நிறுவனங்கள் மேற்கொள்வது
Term Insurance
மோட்டார் வாகனங்களுக்கு மட்டும் எடுக்கப்படும் காப்பீடு
SIP
காளைச்சந்தையில் தொடங்கப்படும் மற்றும் கரடிச்சந்தையில் நிறுத்தப்படும் திட்டம்
Insurance
முதலீட்டின் பொருட்டு எடுத்துக் கொள்ளப்படுவது
ULIP
Lock in period முடிந்தவுடன் விற்பது
Index
ஒரு நிறுவனம் நன்கு வளர்ந்து அதன் மதிப்பு விண்ணை முட்டும் போது (overvalued) சேர்க்கப்படும் மற்றும் அதே நிறுவனம் தரை தட்டும் போது (undervalued) விலக்கப்படும் குறியீடு
EBITDA - Earnings Before Interest Taxes Depreciation and Amortization
நஷ்டம் என்பதை நாகரிகமாகச் சொல்வது
PROPRIETORY
உண்மையை மறைக்கும் பொருட்டு சொல்லப்படுவது
Bankruptcy Company
சிறு முதலீட்டாளர்கள் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் நிறுவனம்
VIX - Volatility Index
எப்போதும் செயலாக இருக்கும் குறியீடு
Budget Day
ITC பங்கு விலை குறையும் நாள்
Comments
Post a Comment