கடன் மொழிகள்
கடன் மொழிகள்
1. பணத்தின் அருமை தெரிய வேண்டுமென்றால் அதை யாரிடமாவது கடனாகக் கேட்டுப் பாருங்கள்.
2. கடன் என்பது தலைகீழான சேமிப்பு.
3. நீங்கள் இன்னமும் சம்பாதிக்காத பணத்தை செலவழிக்காதீர்கள்.
4. கடன் அட்டையை அடிக்கடி தேய்த்தால் உங்கள் எதிர்காலத்தையே தேய்ப்பதாக அர்த்தம்.
5. மாத வருமானம் 40000 ரூபாய். மாத செலவு 39000 ரூபாய். சந்தோஷம். மாத வருமானம் 40000 ரூபாய். மாத செலவு 41000 ரூபாய். துக்கம்.
6. தேவையில்லாத பொருட்களை வாங்குவது முட்டாள்தனம். அதைக் கடனில் வாங்குவது இன்னும் முட்டாள்தனம்.
7. சில கடன்கள் வாங்கும் போது வேடிக்கையாக இருக்கும். திருப்பிச் செலுத்தும் போது எந்தக் கடனும் வேடிக்கையாக இருக்காது.
8. கடன் பெறுபவருக்குப் பொறுப்பு. கொடுப்பவருக்கு சொத்து.
9. சில கடன்களைப் பணத்தால் அடைக்க முடியாது.
10. இறப்பு எல்லாக் கடனையும் அடைத்து விடுகிறது.
Comments
Post a Comment