சராசரியை நோக்கிய பின்னடைவு

சராசரியை நோக்கிய பின்னடைவு

Reversion to the Mean

குடும்ப மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் முன்பு மாதிரி செயலூக்கமாக இல்லை என்பதாக ஒரு பேச்சு எழுந்தது. சராசரியை நோக்கிய பின்னடைவு என்ற கோட்பாடு ஞாபகத்திற்கு வந்தது. 

சராசரியை நோக்கிய பின்னடைவு என்பது புவியீர்ப்பு விசை மாதிரி. பங்குச்சந்தையில் ஒரு சில பங்குகள் அபரிமிதமான மதிப்பீட்டில் வர்த்தமாகிக் கொண்டிருக்கும். ஒரு வருடத்திற்கான இலாபம் 70 சதவீதம் என்றெல்லாம் இருக்கும். நாட்கள் செல்லச்செல்ல சராசரியை நோக்கிய பின்னடைவு என்ற அடிப்படையில் பங்குகளின் சராசரி இலாபமான 25 என்ற அளவிற்கு இறங்கி விடும்.            பரஸ்பர நிதிகளும் இதே மாதிரி தான். நீண்ட கால அடிப்படையில் 20 சதவீதம் இலாபம் வந்தாலே அதிகம்.

பங்குகளாக இருந்தாலும் சரி அல்லது கடன் பத்திரம், தங்கம், நிலம் எதுவாக இருந்தாலும் சரி நீண்ட காலத்தில் என்ன இலாபம் கொடுத்திருக்கிறது என்று கணக்கிடுவது தான் சரியான அளவீடாக இருக்க முடியும். 

எங்கள் தாத்தா 1960களில் இவ்வளவு நிலம் வாங்கினார், அதன் மதிப்பு இவ்வளவு கோடி என்று யாராவது சொன்னால் compounded annualised growth rate போட்டுப் பாருங்கள்.

பங்குச்சந்தையில் மட்டுமல்ல மனித உறவுகளிலும் சராசரியை நோக்கிய பின்னடைவு உண்டு. மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாட்கள் செல்லச்செல்ல மனைவியுடன் (அல்லது கணவனுடன்) அடிக்கடி சண்டை சச்சரவு வருகிறதா? சராசரியை நோக்கிய பின்னடைவு செயல்படத் தொடங்கி விட்டதாக அர்த்தம்.

சராசரியை நோக்கிய முன்னடைவும் உண்டு. உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட போது உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தைகள் தலைகுப்புற விழுந்தன. பங்கு விலைகள் அடிமாட்டு விலைக்குச் சரிந்தன. இயல்புநிலை திரும்பியவுடன் பங்குச்சந்தைகள் மீண்டு எழத்தொடங்குவது சராசரியை நோக்கிய முன்னடைவு.

குடும்ப உறவுகளிலும் சராசரியை நோக்கிய முன்னடைவு வேண்டுமென்றால் உங்கள் மனைவியை ஒரு மாதம் பிரிந்திருந்து பாருங்கள்.

இவ்விதமாக சராசரியை நோக்கிய பின்னடைவு/ முன்னடைவு சொத்துக்களின்/ உறவுகளின் மதிப்பீட்டில் ஒரு முக்கியப்பங்கை வகிக்கிறது.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14