Posts

இலவசம் இலவசமா ?

இலவசம் இலவசமா ? பங்குச்சந்தையில் இலவசம் இலவசம் அல்ல . ஆனால் இலவசம் இலவசம் . குறுகிய கால அளவில் இலவசம் இலவசம் அல்ல . நீண்ட கால அளவில் இலவசம் இலவசம் . நிறுவனங்கள் அவ்வப்போது  1:1 , 1:2 , 2:1 என்ற பல்வேறு விகிதங்களில் இலவசப் பங்குகளை ( Bonus Shares ) அளிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் . இந்தப் பங்குகள் உண்மையிலேயே இலவசம் தானா ? அவ்வாறு இல்லையென்றால் அடிப்படையில் இவை என்ன ? முதலில் இந்த இலவச விகிதங்களைப் பார்க்கலாம் . 1:1 என்றால் ஏற்கெனவே உள்ள ஒரு பழைய பங்குக்கு ஒரு புதிய பங்கு என்று பொருள் . 1:2 என்றால் ஏற்கெனவே உள்ள பழைய இரண்டு பங்குகளுக்கு ஒரு புதிய பங்கு . 2:1 என்றால் ஏற்கெனவே உள்ள பழைய ஒரு பங்குக்கு இரண்டு புதிய பங்குகள் . இந்த விகிதத்தில் முதலில் குறிப்பிடப்படும் எண் நிறுவனம் வழங்கவிருக்கும் புதிய பங்குகள் . இரண்டாவதாக குறிப்பிடப்படும் எண் ஏற்கெனவே உள்ள பங்குகள் . நிறுவனம் ஒன்றின் பங்கு முதல் (Equity capital) 10 கோடி என்று கொள்ளலாம் . அதன் இருப்பு மற்றும் உபரி ( Reserves & Surplus) 500 கோடி . நிறுவனம் அதன் பங்கு முதல் மாதிரி 50 மடங்கு பணத்தை உபரியாக வைத்திருக்கிறது ...

ஜென் கதைகள் - 3

ஜென் கதைகள் - 3 1. நிறைகுடம் ஒரு சமயம் ஜென் குரு நடத்தும் மதிப்பு முதலீட்டுத் தேர்வு எழுத மூன்று முதலீட்டாளர்கள் சென்றனர் . செல்லும் வழியில் அடுமனை (bakery) ஒன்று இருந்தது . மூவரும் கேக் உண்ணும் பொருட்டு அந்த அடுமனை வாசலில் நின்று கொண்டிருக்கும் போது இருவர் பாடங்களைக் குறித்துக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர் . ஒருவர் அமைதியின் வடிவாக இருந்தார் . அந்த அடுமனை ஆயா மூவரும் எங்கு செல்கிறீர்கள் என்பதாகக் கேட்டார் . நண்பர்கள் இந்த மாதிரி தேர்வு எழுதச் செல்வதாகக் கூறினர் . ஆயா , அமைதியாக அமர்ந்திருப்பவரைச் சுட்டிக் காட்டி அவர் மட்டும் தான் தேர்வில் வெற்றி பெறுவார் என்று சொன்னதை நண்பர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . ஆனால் , அவர்கள் ஆச்சரியப்படும் விதமாக ஆயா குறிப்பிட்டவர் மட்டும் தேர்வில் வெற்றியடைந்தார் . நண்பர்கள் திரும்பி வரும் போது ஆயாவிடம் உனக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பதைக் கூறும் திறன் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டனர் ‌. அடுமனை ஆயா சொன்னது : கேக் பதமாவதற்கு முன்னர் சத்தம் போடும் . பதமாகி விட்டால் சத்தம் போடாது . 2. அப்பன் போனான் ... உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்...

வேதாளம் சொன்ன கதை - 3

வேதாளம் சொன்ன கதை - 3 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கி , 'மன்னா !  விடாமுயற்சி உடனான உன் நீடிப்புத்திறனை நான் பாராட்டுகிறேன் . பங்குச்சந்தையில் வெற்றி பெற இந்த நீடிப்புத்திறன் தலையாயது . ஒரு ஊரில் வடிகட்டிய முட்டாள் ஒருவன் இருந்தான் . கல்விக்கும் அவனுக்கும் காத தூரம் . ஒரு நாள் காட்டு வழியாக அவன் நடந்து சென்று கொண்டிருக்கையில் தேவதை ஒன்று அவன் முன்னால் தோன்றி அவனுக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாகக் கூறியது . அவன் உடனே எனக்கு ஒரு கோப்பை மது வேண்டும் என்று கூறினான் . மதுக் கோப்பையை அளித்த தேவதை இது மிகவும் அபூர்வமான கோப்பையாகும் . நீ நினைக்கும் போதெல்லாம் இந்தக் கோப்பை மதுவைத் தரவல்லது . இன்னொரு வரத்தையும் கேட்டு வாங்கிக்கொள் என்றது . அந்த முட்டாள் கேட்டது : எனக்கு இதே போல இன்னொரு மதுக் கோப்பை வேண்டும். கல்வியறிவற்றவன் தனக்குக் கிடைக்கப்பெறும் வரங்களைக் கூட இவ்வாறு சாபங்களாக மாற்றிக் கொ...

ஆர்வ மோதல்

ஆர்வ மோதல் Conflict of Interest ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது டெல்லியில் இராஜ நாகங்களின் தொல்லை அதிகமாக இருந்தது . பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள் . அதுவும் இராஜ நாகம் என்றால் கேட்கவா வேண்டும் ? ஆங்கிலேய அரசாங்கம் இராஜ நாகத்தைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசளிக்கப்படும் என்பதாக முடிவெடுத்தது . நம்மவர்கள் தெருவில் திரியும் இராஜ நாகங்களைப் பிடித்துக் கொடுத்து பரிசுகளை வாங்கிய வண்ணம் இருந்தனர் . ஒரு கட்டத்தில் நாட்டில் பிடித்துக் கொடுக்கப் பாம்பு எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்ட பின்னர் நம்மவர்கள் காட்டிற்குச் சென்று பாம்புகளைப் பிடித்து வந்து ஆங்கிலேய அரசாங்கத்திடம் கொடுத்துப் பரிசுகளைப் பெறத் தொடங்கினர் . அரசாங்கம் இதனைக் கண்டறிந்து இந்தப் பாம்புப் பரிசுத் திட்டத்தைத் தடை செய்து விட்டது . அரசாங்கத்திற்கும் மக்களுக்குமான இந்த ஆர்வ மோதலின் கதை சுபமாக முடியவில்லை . நம்மவர்கள் எஞ்சிய பாம்புகளை நடுத்தெருவில் விட்டு விட்டுச் சென்று விட்டனர் . இப்போது டெல்லி நகர வீதிகளில் இந்தப் பரிசுத் திட்டத்திற்கு முன்னர் இருந்த பாம்புகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு பாம்புகள் சுற்றி...

பங்கு கேள்வி பதில் - 1

பங்கு கேள்வி பதில் - 1 கேள்வி : ITC க்கும் VST Industries க்கும் ROCE ல் ஏன் இத்தனை மாறுபாடு ? பதில் : ITC நிறுவனம் புகையிலையிலிருந்து கிடைக்கப்பெறும் இலாபத்தை FMCG , விருந்தோம்பல் , காகிதம் இன்னபிற துறைகளில் முதலீடு செய்கிறது ( ROCE - 30 % ) VST Industries புகையிலையிலிருந்து கிடைக்கப்பெறும் இலாபத்தை புகையிலையில் மட்டும் மறு சுழற்சி செய்கிறது ( ROCE - 40 % ) எனவே இந்த மாறுபாடு . ITC செய்வது சரியா தவறா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . கேள்வி : Wipro நிறுவனம் 2021 ஆம் ஆண்டுக்கான பங்காதாயமாக ஒரு பங்குக்கு ஒரு ரூபாய்  வழங்கியிருக்கிறது . 100 பங்குகள் வைத்திருந்தால் வெறும் 100 ரூபாய் மட்டும் தானே பங்காதாயமாகக் கிடைக்கப்பெறும் ? பதில் : 100 பங்குகள் வைத்திருந்தால் பங்காதாயமாக வெறும் 100 ரூபாய் மட்டும் தான் கிடைக்கும் . 50 பங்குகளை வைத்திருந்தால் 50 ரூபாய் . 10 க்கு 10 . 3 க்கு 3 . ஆனால் அதன் IPO ல் 3 பங்குகளை வாங்கி இன்றளவும் வைத்திருப்பவர்களுக்கு 1148120 ரூபாய் கிடைக்கப் பெறும் . 2022 ஆம் ஆண்டுக்கு Wipro ஒரு பங்குக்கு ஆறு ரூபாய் பங்காதாயம் வழங்கியிருக்கிறது . IPO முதலீட்டி...

மீமிகை பணவீக்கம்

மீமிகை பணவீக்கம் Hyper Inflation பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயர்ந்து செல்வது மீமிகை பணவீக்கம் என்பதாக அழைக்கப்படுகிறது . பொதுவாக நாடு ஒன்றின் விலைவாசி ஒரு மாதத்தில் 50 சதவீதம் கூடினால் அதன் பொருளாதாரம் மீமிகை பணவீக்கத்தை எதிர்கொள்வதாகக் கொள்ளலாம் . ஒரு நாடு போர் முதலிய காரணங்களாலோ அல்லது பொருளாதாரத்தைத் தவறாகக் கையாள்வதாலோ பொருளாதார நெருக்கடிக்கு  உள்ளாகிறது . விளைவாக மீமிகை பணவீக்கத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிறது .  1920 ல் முதலாம் உலகப் போரின் முடிவில் ஜெர்மன் மீமிகை பணவீக்கத்தில் சிக்குண்டு கிடந்தது . அந்நாட்களில் இருபது வருட காப்பீட்டுத் திட்டத்தின் முதிர்வுப் பணத்தின் மூலமாக ஒரேயொரு ரொட்டி அடுக்கை (Loaf of bread) மட்டுமே வாங்க முடிந்தது . சிகரெட் ஒன்றின் விலை ஒரு கடையில் அதிகம் என்று நினைத்து அடுத்த கடைக்குச் சென்றால் அங்கு இன்னும் அதிகம் , சரியென்று முந்தைய கடைக்குச் சென்றால் சிகரெட் விலை முதலில் சொன்ன விலையைப் போல் இரண்டு மடங்கு சமயங்களில் மூன்று மடங்கு என்ற அளவில் விலைவாசி விண்ணை முட்டிச் சென்றது . பண நோட்டுக்களை அச்சடிக்க அரசாங்க அச்சகங்கள் போதுமானதாக இல்லாததால் அரசாங...

வாழ்க்கை மொழிகள் - 2

வாழ்க்கை மொழிகள் - 2 1. உங்கள் வசம் உள்ள திறமையை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பயன்படுத்தத் தயங்காதீர்கள் . இனிமையாகவும் உன்னதமாகவும் பாடக்கூடிய பறவைகள் மட்டும் தான் குரலெழுப்பலாம் என்று ஆகி விட்டால் காடு நிசப்தமாகி விடும் - ஹென்றி வேன் டைக் 2. ஒரு பொருளைப் பெறுவதைக் காட்டிலும் அந்தப் பொருளின் மீதுள்ள ஆவலே அதிக ஆனந்தம் தருவது - காளிதாசன் 3 . சிறந்த பளிங்குச்சிலை பளிங்குக் கல்லிற்குள் தான் இருக்கிறது - டி.எச் லாரன்ஸ் 4. ஒரு ஊசியின் காது இரண்டு நண்பர்களுக்கு அகலமானது . முழு உலகும் இரண்டு விரோதிகளுக்குக் குறுகலானது . 5 . பகிர்ந்த துன்பம் பாதியாகிறது . பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது . 6 . சொர்க்கத்துக்கு அனுப்புவதானால் கூட சாட்டையால் அடித்து விரட்டப்படுவதை நான் விரும்ப மாட்டேன் - லெனின் 7. கண் ஒரு சாதாரண உறுப்பு . ஆனால் பார்வையோ ஒரு மிகப்பெரிய கலை - கலீல் ஜிப்ரான் 8 . வெற்றிகளை விட சில தோல்விகள் வெகு வெற்றிகரமாக இருக்கின்றன . 9 . அடிக்கடி திரும்பத் திரும்ப ஒன்றைச் செய்வதால் அது திகட்டிப் போகும் . தாகமெடுப்பதற்கு ஓய்வு கொடுக்காதவன் தண்ணீர் குடிப்பதில் உள்ள உண்மையான இன்பத்தைக் காண முடியா...