வாழ்க்கை ஒரு சதுரங்கம்- 1

வாழ்க்கை ஒரு சதுரங்கம்- 1

Chess Quotes 


1. The blunders are all there on the board, waiting to be made- Savielly Tartakower


தவறுகள் அனைத்தும் செய்யப்படுவதற்காகச் சதுரங்கப் பலகையில் காத்திருக்கின்றன.


2. It is not a move, even the best move, that you must seek, but a realizable plan- Eugene Znosko Borovsky


நீங்கள் தேட வேண்டியது ஒரு நகர்வை அல்ல, மிகச்சிறந்த நகர்வு கூட அல்ல அது, நீங்கள் தேட வேண்டியது செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை மட்டுமே. 


3. Stay flexible. Be ready to transform advantages from one type to another- John Nunn


நெகிழ்வாக இருங்கள். ஒரு வகை சாதகத்தை மற்றொரு வகை சாதகமாக மாற்றிக்கொள்ளத் தயாராக இருங்கள்.


4. Which pieces you want exchanged is a great help in finding the right moves- Graham Burgess


எந்தக் காய்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்வது, சரியான நகர்வுகளைக் கண்டறியப் பெரிதும் உதவும்.


5. When you see a good move, look for a better one- Emanuel Lasker


ஒரு நல்ல நகர்வை இனங்காணும் போது, ​​அதைவிடச் சிறந்த நகர்வு ஒன்றைத் தேடுங்கள்.


6. When you play chess the idea is to make good moves, not quick ones- Jeremy Silman


சதுரங்கம் விளையாடும்போது, ​​விரைவான நகர்வுகளை அல்ல, சிறந்த நகர்வுகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொள்ளுங்கள்.


7. A pawn is a queen in waiting. All you need to do is find a way to keep moving forward- 

Matt Haig


ஒரு சிப்பாய் என்பது, வருங்கால ராணி. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கான ஒரு வழியைக் கண்டறிவது தான்.


8. Don't resign unless you are really sure the position is hopeless- John Nunn


அந்த நிலை நம்பிக்கையற்றது என்று உங்களுக்கு உண்மையிலேயே உறுதியாகத் தெரிந்தாலன்றி, ஆட்டத்தை முடித்துக் கொள்ளாதீர்கள்.


9. Those who say they understand chess, understand nothing- Robert Hubner


தங்களுக்குச் சதுரங்கம் தெரியும் என்று சொல்பவர்களுக்கு, எதுவுமே தெரியாது.


10. Life is more than just chess.

Though king dies, life goes on.


வாழ்க்கை என்பது வெறும் சதுரங்கம் மட்டுமல்ல, ராஜா இறந்தாலும், வாழ்க்கை தொடர்கிறது.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

இலவசப் பங்களிப்புகளை இனங்காண்பது எப்படி?