Daniel Kahneman- முதலீட்டு மொழிகள்

Daniel Kahneman- முதலீட்டு மொழிகள் 

Daniel Kahneman- Investment Quotes 


1. All of us would be better investors if we just made fewer decisions.


நாம் அனைவரும் குறைவான முடிவுகளையே எடுத்தால், சிறந்த முதலீட்டாளர்களாகத் திகழ்வோம்.


2. We can be blind to the obvious, and we are also blind to our blindness. 


கண்முன்னே இருக்கும் வெளிப்படையான விஷயங்களில் நாம் கவனம் கொள்வதில்லை. மேலும், நமது கவனமின்மையைக் குறித்தும் நாம் கவனம் கொள்வதில்லை.


3. Human beings cannot comprehend very large or very small numbers. 


மனிதர்களால் மிகப்பெரிய அல்லது மிகச்சிறிய எண்களைப் புரிந்துகொள்ள இயலாது.


4. If owning stocks is a long-term project for you, following their changes constantly is a very bad idea.


பங்குகளைச் சொந்தமாக்கிக்கொள்வது உங்களின் ஒரு நீண்டகாலத் திட்டமாக இருந்தால், அவற்றின் மாற்றங்களை இடைவிடாமல் கண்காணிப்பது மிகவும் தவறான யோசனையாகும்.


5. Everything makes sense in hindsight.


பின்னோக்கிப் பார்க்கும்போது, ​​அனைத்தும் அர்த்தமுள்ளதாகத் தோன்றுகின்றன.


6. We are prone to overestimate how much we understand about the world and to underestimate the role of chance in events.


உலகத்தைப் பற்றி நமக்கு எவ்வளவு புரிதல் இருக்கிறது என்பதை மிகைப்படுத்திக் கூறவும், நிகழ்வுகளில் தற்செயலின் பங்கை குறைத்து மதிப்பிடவும் நாம் இயல்பாகவே முனைகிறோம்.


7. Higher income is associated with a reduced ability to enjoy the small pleasures of life.


அதிக வருமானம் என்பது, வாழ்க்கையின் சிறிய இன்பங்களை ரசிக்கும் திறன் குறைவதுடன் தொடர்புடையது.


8. The emotional tail wags the rational dog.


உணர்ச்சியெனும் வால், பகுத்தறிவெனும் நாயை ஆட்டுகிறது.


9. Random processes produce many sequences that convince people that the process is not random after all.


தற்செயல் செயல்முறைகள், அச்செயல்முறைகள் உண்மையில் தற்செயலானவை அல்ல என்று மக்களை நம்பவைக்கும் வகையில் பல செயல்முறைகளை உருவாக்குகின்றன.


10. Do we still remember the question we are trying to answer? Or have we substituted an easier one?


நாம் பதிலளிக்க முயன்று கொண்டிருக்கும் அந்தக் கேள்வி நமக்கு இன்னும் நினைவிருக்கிறதா? அல்லது, அதற்குப் பதிலாக நாம் அதனை ஒரு எளிமையான கேள்வியாக மாற்றிக்கொண்டோமா?

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14