பங்குச்சந்தை நகை அகராதி- 2
பங்குச்சந்தை நகை அகராதி- 2
Funny stock market dictionary- 2
(நகைச்சுவைக்காக மட்டும். யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை)
52 Week high stocks
52 வார உயர்வு என்று முதலீடு செய்யப்படாத பங்குகள்; தொடர்ந்து 52 வார உயர்வில் வர்த்தகமாகும் பங்குகள்.
52 Week low stocks
52 வார குறைவு என்று முதலீடு செய்யப்படும் பங்குகள்; தொடர்ந்து 52 வார குறைவில் வர்த்தகமாகும் பங்குகள்.
Analyst
பங்குகளை வாங்க (விற்க) உற்சாகப்படுத்துபவர்கள்.
Average down
பணம் இருக்கும் வரை அல்லது பங்கு இருக்கும் வரை மேற்கொள்ளப்படும் முதலீடு.
Banker
காற்றிலிருந்து பணத்தை வரவழைப்பவர்.
Capitalism
பொருளாதாரம் நன்கு செயல்படும் போது பாராட்டப்படுவது.
Conservative
விளிம்புக் கணக்கு (Margin Account) இல்லாதவர்.
Credit Rating companies
நிறுவனங்கள் திவாலான பின்னர் தரவரிசையைத் தடாலடியாகக் குறைக்கும் நிறுவனங்கள்.
Currency Market
24 மணிநேர சூதாட்ட நிலையம்.
Depression
பொருளாதார நிபுணர் வேலை இழந்தால் அதற்காக அவர் சொல்லும் காரணம்.
Index Funds
இயலாமை என்பதன் உண்மையான வெளிப்பாடு.
Inflation
பணக்காரர் ஆவதற்கான சுலபமான வழிமுறை.
IPO
லாட்டரிச் சீட்டு.
Investment
வெற்றிகரமான ஊகம்.
Investment Classics
முதலீட்டாளர்கள் பாராட்டும் ஆனால் ஒருபோதும் படிக்காத புத்தகம்.
Long Term holdings
விலையேற்றம் பெறாத பங்குகள்.
Paper Trading
நூறு சதவீத இலாபம் தரும் வர்த்தகம்.
PE Multiple
புரியாத புதிர்.
Recession
நீங்கள் வேலை இழந்தால் அதற்காக நீங்கள் சொல்லும் காரணம்.
Share Market
பொருட்கள் அதிக விலையில் விற்கும் போது மக்கள் மகிழ்வுடன் வாங்கும், பொருட்கள் குறைந்த விலையில் விற்கும் போது மக்கள் வருத்தமுடன் விற்கும் ஒரேயொரு சந்தை.
Slowdown
உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் வேலை இழந்தால் அதற்காக நீங்கள் சொல்லும் காரணம்.
Socialism
பொருளாதாரம் நன்கு செயல்படாத போது பாராட்டப்படுவது.
Speculation
தோல்விகரமான முதலீடு.
Tax Loophole
அடுத்தவர் வரி சேமித்தால் அதற்கு நீங்கள் சொல்லும் காரணம்.
Tax Reform
நீங்கள் வரி சேமித்தால் அதற்கு நீங்கள் சொல்லும் காரணம்.
Unicorn
பெரும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள்.
Comments
Post a Comment