தங்கமே பணம்

ங்கமே பணம்


1. Gold standard is dead but gold is the standard- Zoltan Pozsar


தங்கத் தரம் வழக்கொழிந்து விட்டது. ஆனால் தங்கமே இன்னும் தரத்திற்கான அளவீடாக உள்ளது.


2. If you don't own gold, you know neither history nor economics- Ray Dalio


தங்கம் உங்களிடம் இல்லையென்றால் வரலாறும் உங்களுக்குத் தெரியாது, பொருளாதாரமும் தெரியாது என்பதாக அர்த்தம் .


3. Gold is money. Everything else is credit- J. P. Morgan


தங்கம் என்பது பணம். மற்றவை எல்லாம் கடன்.


4. Gold is the universal language understood by all nations- George Herbert


தங்கம் என்பது அனைத்து நாடுகளாலும் புரிந்துகொள்ளப்படும் உலகளாவிய ஒரு மொழி.


5. Indian Gold obsession isn’t just cultural, it’s economic strategy- Dipti Dhakul


இந்தியத் தங்க மோகம் என்பது வெறும் கலாச்சார ரீதியானது மட்டுமல்ல, அது ஒரு பொருளாதார உத்தியும் கூட.


6. I like gold because it is a stabilizer; it is an insurance policy- Kevin O'Leary


எனக்குத் தங்கம் பிடிக்கும், ஏனென்றால் அது ஒரு நிலைப்படுத்தி; அது ஒரு காப்பீட்டுத் திட்டம்.


7. We have gold because we cannot trust governments- Herbert Hoover


அரசாங்கங்களை நம்மால் நம்ப முடியாததாலேயே நம்மிடம் தங்கம் இருக்கிறது.


8. If you want an alternative currency, check out gold. It has stood the test of thousands of years as a store of value and medium of exchange– Paul Singer


உங்களுக்கு ஒரு மாற்று நாணயம் வேண்டுமென்றால், தங்கத்தை எண்ணிப் பாருங்கள். அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மதிப்பு சேமிப்பகம் ஆகவும் பரிமாற்ற ஊடகமாகவும் நிலைத்து நிற்கிறது.


9. Gold is valuable everywhere in the world and is not dependent on political systems, any specific government policy, or set of policies- Roy Sebag


தங்கம் உலகில் எல்லா இடங்களிலும் மதிப்புமிக்கது; அது அரசியல் அமைப்புகளையோ, எந்தவொரு குறிப்பிட்ட அரசாங்கக் கொள்கையையோ, அல்லது கொள்கைகளின் தொகுப்பையோ சாராது உள்ளது.


10. My advice to you, my dear friend, is to seek out gold and sit on it- John Gardner


என் அன்பு நண்பரே, உங்களுக்கு நான் கூறும் அறிவுரை என்னவென்றால், தங்கத்தை உங்கள் அங்கமாகக் கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14