செயற்பாடு சாய்வு
செயற்பாடு சாய்வு Action Bias செயற்பாடு சாய்வு (Action Bias) என்பது செயலற்ற தன்மையை விட செயல்பாட்டை விரும்பும், அவ்வாறு செய்வது எந்த முன்னேற்றத்திற்கும் இட்டுச் செல்லாது என்பதை உணர்ந்தும் அதனையே தொடர்ந்தும் செய்வதான உளவியல் சார்ந்த ஒரு நிலையாகும். கால்பந்து விளையாட்டு ஒன்றைக் கற்பனை செய்து பார்க்கலாம். அது உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி. இரண்டு அணிகளும் புள்ளி எதுவும் போடவில்லை. ஆட்டத்தின் இறுதியில் ஒரு அணிக்குத் தண்டனை உதை (penalty kick) அடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது எதிரணி இலக்குக் காப்பாளரின் (goal keeper) மனநிலையைக் கணக்கில் கொண்டு பாருங்கள். அந்தப் போட்டியில் வென்று உலகக்கோப்பையைக் கைப்பற்றுவது இப்போது அவர் கையில், காலில், அசைவில் இருக்கிறது. அவர் குறியிலக்குக் கம்பங்கள் (goal post) நடுவில் நிலையாக நிற்காமல் வலது இடதாக அசைந்து கைகளையும் கால்களையும் வீசி தடுப்பு வேலி அமைத்துத் தயார் நிலையில் இருப்பதாகக் காட்டிக் கொள்வார். ஆனால் இலக்குக் காப்பாளர்கள் வெறுமனே நடுவில் நிலையாக நின்றால் பெரும்பான்மையான தடுப்பாட்டத்திற்கு அதுவே போதுமானதாக இருக்கும். இலக்குப் பகுதியை ம...