நேர மொழிகள்- 1
நேர மொழிகள்- 1
Time Quotes- 1
1. Time is the most valuable thing a man can spend- Theophrastus
நேரமே ஒரு மனிதன் செலவழிக்கக்கூடிய மிக மதிப்பு வாய்ந்த பொருள்.
2. The key is not spending time, but in investing it- Stephen R Covey
நேரத்தை வெறுமனே செலவழிக்காதீர்கள். அதனை முதலீடு செய்யுங்கள்.
3. The trouble is, you think you have time- Jack Kornfeld
நேரம் நிறைய இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது தான் பிரச்னை.
4. Men talks of killing time, while time quietly kill them- Dion Boucicault
காலத்தைக் கொல்வது பற்றி மாந்தர்கள் பேசுகின்றனர். ஆனால் காலமே அவர்களைக் கொல்கிறது.
5. Your time is limited, so don't waste it living someone else's life- Steve Jobs
உங்களுக்கான காலம் ஒரு வரம்புக்கு உட்பட்டது. இன்னொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து அதனை வீணடிக்காதீர்கள்.
6. If you really looks closely, most overnight successes took a long time- Steve Jobs
ஒரே இரவில் யாரும் வெற்றியடைந்து விடுவதில்லை, நீண்ட நெடுங்காலத்தில் தான் அது கை கூடும்.
7. We all have our time machines. Some take us back, they're called memories. Some take us forward, they're called dreams- Jeremy Irons
நம் எல்லோரிடமும் நமக்கான கால இயந்திரம் ஒன்று உள்ளது. அது சில நேரங்களில் நம்மைப் பின்னுக்குக் கொண்டு செல்லும். அவை நினைவுகள் என்று அழைக்கப்படும். அது சில நேரங்களில் நம்மை முன்னுக்குக் கொண்டு செல்லும். அவை கனவுகள் என்று அழைக்கப்படும்.
8. I would have written a shorter letter but I did not have the time- Mark Twain
நேரமின்மையால் இதனை விட சுருக்கமான கடிதத்தை என்னால் எழுத இயலவில்லை.
9. To save time, stop looking for short cuts- Shane Parrish
நேரத்தைச் சேமிக்க வேண்டுமென்றால் குறுக்கு வழிகளை மறந்து விடுங்கள்.
10. The way we spend our time defines who we are- Jonathan Estrin
நாம் நம் நேரத்தை எவ்விதம் செலவிடுகிறோம் என்பது நாம் யார் என்பதைத் தீர்மானிக்கிறது.
Comments
Post a Comment