Benjamin Disraeli- மணி மொழிகள்
Benjamin Disraeli- மணி மொழிகள்
Benjamin Disraeli Quotes
1. The greatest good you can do for another is not just share your riches but to reveal to him his own.
நீங்கள் மற்றவருக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய நன்மை, உங்கள் செல்வ வளங்களைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, ஒருவரிடம் மறைந்திருக்கும் செல்வத்தை அவருக்கு உணர்த்துவது தான்.
2. Talk to a man about himself and he will listen for hours.
மாந்தர்களிடம் அவர்களைக் குறித்துப் பேசினால் அவர்கள் மணிக்கணக்கில் கேட்பார்கள்.
3. Never apologize for showing feeling, when you do so, you apologize for the truth.
உணர்வை வெளிப்படுத்தியதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்காதீர்கள், அவ்வாறு செய்யும்போது, நீங்கள் உண்மைக்காக மன்னிப்புக் கேட்கிறீர்கள்.
4. I shall not defeat you, I shall transcend you.
நான் உன்னை தோற்கடிக்க மாட்டேன், நான் உன்னை எல்லை கடந்த மேம்பாட்டிற்குக் கொண்டு செல்வேன்.
5. Count days by sensation not by calendar and each moment a day.
நாட்காட்டியின் மூலமாக அல்லாமல் உணர்வுகளின் மூலமாக நாட்களைக் கணக்கிடுங்கள். பின்னர் ஒவ்வொரு கணமும் ஒரு நாளாகி விடும்.
6. An author who speaks about their own books is almost as bad as a mother who speaks about her own children .
தனது புத்தகங்களைக் குறித்துப் பேசும் நூலாசிரியர் தனது குழந்தைகளைக் குறித்துப் பேசும் தாயைப் போல மோசமானவர்.
7. Read no history- nothing but biography, for that is life without theory.
வரலாற்றைப் படிக்காதீர்கள்- வாழ்க்கை வரலாற்றைத் தவிர வேறொன்றையும் படிக்காதீர்கள், ஏனென்றால் வாழ்க்கை வரலாறு என்பது கொள்கை மற்றும் கோட்பாடுகளால் பாதிக்கப்படாத ஒன்று.
8. Nurture your mind with great thoughts, for you will never go any higher than you think.
உங்கள் மனதை சிறந்த எண்ணங்களால் வளர்த்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் எண்ணங்களை விட உயர்ந்த நிலைக்கு ஒருபோதும் நீங்கள் செல்ல மாட்டீர்கள்.
9. We make our own fortunes and call them fate.
நமக்கான அதிர்ஷ்டத்தை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். அதனை விதி என்பதாக அழைக்கிறோம்.
10. The wisdom of the wise and the experience of ages may be preserved by quotations.
அறிவார்ந்தவர்களின் ஞானமும் மூத்தோர்களின் அனுபவமும் பழமொழிகளின் மூலமாக நிலைபேறு பெற்றுள்ளன.
Comments
Post a Comment