Posts

Showing posts from July, 2025

Keynes- மணி மொழிகள்

Keynes- மணி மொழிகள் Keynes Quotes 1. Successful investing is anticipating the anticipation of others. வெற்றிகரமான முதலீடு என்பது மற்றவர்களின் முன் உணர்வை முன் உணர்வது. 2. Markets can remain irrational longer than you can remain solvent. நீங்கள் திவால் நிலையை அடையும் காலத்தை விட அதிக காலம், சந்தை, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு இருக்கும். 3. The markets are moved by animal spirits and not by reason. சந்தை என்பது விலங்குணர்வால் ஆனது, காரண காரியங்களால் ஆகப் பெற்றதல்ல. 4. It is better to be roughly right than precisely wrong. உத்தேசமான சரி என்பது நிச்சயமான தவறு என்பதை விட மேலானது. 5. It is better for reputation to fail conventionally, than succeed unconventionally. உங்கள் நன்மதிப்பு வழக்கமான முறையில் தோற்றால் பரவாயில்லை, வழக்கத்திற்கு மாறாக அது வெற்றி பெறக்கூடாது. 6. When my information changes, I alter my conclusions. What do you do, sir? தகவல்கள் மாறினால் என் முடிவுகளை நான் மாற்றிக் கொள்வேன். நீங்கள் எப்படி? 7. The difficulty lies not in developing new ideas as in escaping from old ones. கட...

ஆக்கபூர்வமான மடமைகள்

ஆக்கபூர்வமான மடமைகள் Constructive Supernaturalism  அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளில் ஒன்று இந்த ஆக்கபூர்வமான மடமைகள். அதிர்ஷ்டசாலிகள் அனைவரும் இந்த ஆக்கபூர்வமான மடமைகளில் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை அவர்களுக்கு எந்த வகையில் நன்மை செய்கிறது? வாருங்கள், பார்க்கலாம். வாழ்க்கையில், சில சமயங்களில் இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் உள்ளாக்கப்படுவோம். பிரச்னை என்னவென்றால் எந்த முடிவு நமக்கு நன்மையைத் தரப்போகிறது என்பதை நம்மால் தீர்மானமாகக் கணிக்கவியலாது. மேலும் இந்த முடிவினை உடனடியாக நாம் எடுக்க வேண்டியதாக இருக்கும். காற்றில் வைத்த கற்பூரம் மாதிரி இந்த முடிவெடுக்க வேண்டிய கால அளவு குறைந்து கொண்டே வருவதாக இருக்கும்.  சூதாட்ட நிலையத்தில் மூன்று இலக்க எண் ஒன்றில் பணம் கட்டி விளையாடும் ஒரு ஆட்டத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த மூன்று இலக்க எண்ணை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? எந்த எண் அடுத்த போட்டியாளரை விட ஒரு படி மேலாக உங்கள் வெற்றிக்கு உதவுவதாக இருக்கும்? எவ்வளவு யோசித்தாலும் இந்தப் புதிருக்கு விடை காணவே இயலாது....

Benjamin Disraeli- மணி மொழிகள்

Benjamin Disraeli- மணி மொழிகள் Benjamin Disraeli Quotes 1. The greatest good you can do for another is not just share your riches but to reveal to him his own. நீங்கள் மற்றவருக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய நன்மை, உங்கள் செல்வ வளங்களைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, ஒருவரிடம் மறைந்திருக்கும் செல்வத்தை அவருக்கு உணர்த்துவது தான். 2. Talk to a man about himself and he will listen for hours. மாந்தர்களிடம் அவர்களைக் குறித்துப் பேசினால் அவர்கள் மணிக்கணக்கில் கேட்பார்கள். 3. Never apologize for showing feeling, when you do so, you apologize for the truth. உணர்வை வெளிப்படுத்தியதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்காதீர்கள், அவ்வாறு செய்யும்போது, நீங்கள் உண்மைக்காக மன்னிப்புக் கேட்கிறீர்கள். 4. I shall not defeat you, I shall transcend you. நான் உன்னை தோற்கடிக்க மாட்டேன், நான் உன்னை எல்லை கடந்த மேம்பாட்டிற்குக் கொண்டு செல்வேன். 5. Count days by sensation not by calendar and each moment a day. நாட்காட்டியின் மூலமாக அல்லாமல் உணர்வுகளின் மூலமாக நாட்களைக் கணக்கிடுங்கள். பின்னர் ஒவ்வொரு கணமும் ஒரு நாளாகி வி...

பங்குச்சந்தை பதில்கள் - 17

பங்குச்சந்தை பதில்கள் - 17 கேள்வி: கடவுள் உங்கள் முன் தோன்றி பங்குச்சந்தையைப் பொறுத்து ஒரேயொரு வரம் தருவதாகக் கூறினால் என்ன கேட்பீர்கள்? பதில்: அடுத்து பன்மடங்காளர் ஆகக்கூடிய பங்குகளின் பட்டியலை எல்லாம் கேட்க மாட்டேன். தற்போது வாராவாரம் செய்யும் பங்குச்சந்தை முதலீடுகளை ஆயுளுக்கும் செய்ய அருளும் படி கேட்டுக் கொள்வேன். கேள்வி: பங்குச்சந்தை நகைச்சுவை ஏதேனும்? பதில்: இரண்டு ரூபாய்க்கும் குறைவாக வர்த்தகமாகும் பென்னி பங்கு அதன் பங்குகளை 1:2 என்ற விகிதத்தில் பிரிக்க பதிவுத்தேதியை அறிவித்தது.  (நகைச்சுவை தொடர்கிறது) இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதன் பங்குகள் 5 சதவீதம் விலை உயர்வு!  கேள்வி: முதலீடுகளில் Macro பார்வை அல்லது Micro பார்வை - எது சரியானது? பதில்: பேரளவு (macro) என்பது சிற்றளவு (micro) களால் ஆகப்பெற்றது. கேள்வி: Berkshire Hathaway பங்கு 1964 லிருந்து 2024 வரை 5502284% வருமானம் கொடுத்திருக்கிறதே? பதில்: இது absolute return என்று சொல்லப்படும் இந்த இடைப்பட்ட ஆண்டுகளுக்கான மொத்த வருமானம். Annualised return என்று சொல்லப்படும் ஆண்டாண்டு வருமானத்தைக் கணக்கிட்டால் 20 சதவீத கூட்டுப்பெர...