Peter Lynch - மணி மொழிகள்

Peter Lynch - மணி மொழிகள்

Peter Lynch Quotes 


1. Never invest in any idea you can't illustrate with a crayon.


ஒரு வண்ணக்குச்சியைக் கொண்டு உங்கள் எண்ணக்கருக்களை விளக்க முடியாத எதிலும் முதலீடு செய்யாதீர்கள்.


2. The list of qualities an investor ought to have include patience, self-reliance, common sense, a tolerance for pain, open-mindedness, detachment, persistence, humility, flexibility, a willingness to do independent research, an equal willingness to admit mistakes and the ability to ignore general panic.


ஒரு முதலீட்டாளரின் பண்பு நலன்கள்:  பொறுமை, சுய சார்பு, பொது அறிவு, வலி தாங்கும் திறன், திறந்த மனம், பற்றின்மை, நீடிப்புத்திறன், பணிவு, நெகிழ்வுத்தன்மை, தனிப்பட்டு ஆராயும் தன்மையில் விருப்பம், தவறுகளை ஏற்றுக்கொள்வதிலும் விருப்பம் மற்றும் மிகையச்சம் தவிர்த்தல்.


3. Just because the price goes up doesn't mean you're right. Just because it goes down doesn't mean you're wrong. Stock prices often move on opposite directions from the fundamentals but long term the direction and sustainability of profits will prevail.


பங்கு ஒன்றின் விலை உயர்வதால் மட்டும் உங்கள் முடிவு சரியென்று சொல்ல முடியாது. பங்கு ஒன்றின் விலை குறைவதால் மட்டும் உங்கள் முடிவு தவறென்று கூற முடியாது. பங்கின் விலைகள் அடிக்கடி அவற்றின் அடிப்படைகளை மீறி எதிர்த்திசையில் பயணிப்பதாக இருக்கும். ஆனால் நீண்ட காலத்தில் தத்தமது நிறுவனங்களின் இலாபத்தை அடித்தொடரும்.


4. In the long run, it's not how much money you make that will determine your future prosperity. It's how much of that money you put to work by saving it and investing it.


நீண்ட கால அளவில், நீங்கள் எவ்வளவு பணம் ஈட்டுகிறீர்கள் என்பது உங்கள் எதிர்கால வளமையைத் தீர்மானிக்காது. அதில் எவ்வளவு பணத்தை நீங்கள் சேமிக்கிறீர்கள் மற்றும் முதலீடு செய்கிறீர்கள் என்பதே அதனைத் தீர்மானிக்கிறது.


5. It's a real tragedy when you buy a stock that's overpriced, the company is a big success and still you don't make any money.


ஒரு நிறுவனப்பங்கை அதிக விலை கொடுத்து வாங்குவதன் மூலமாக, நிறுவனம் ஒரு வெற்றிக்கதையான பின்னரும் உங்கள் முதலீடு வெற்றுக்கனவாவது உண்மையிலேயே ஒரு சோகக்கதையாகும்.


6. If you are looking for 10 baggers, the more stocks you own the more likely that one of them will become a 10 bagger.


பத்து மடங்காளர்களைக் கரம் பற்ற நீங்கள் நினைத்தால் வெவ்வேறு நிறுவனப் பங்குகளை  வாங்குங்கள். அதிலொன்று பத்து மடங்காளர் ஆவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.


7. Investing in stocks is an art, not a science and people who've been trained to rigidly quantify everything have a big disadvantage.


பங்கு முதலீடு என்பது அறிவியல் அல்ல, அது ஒரு கலை. இறுக்கமான அளவீடுகளைப் பயின்றவர்களுக்கு அது பிரதிகூலமாக இருக்கும்.


8. The real key to making money in stocks is not to get scared out of them.


பங்குகளிலிருந்து பணம் ஈட்ட நினைப்பவர்கள் பங்குகளைப் பார்த்து அச்சம் கொள்ளக்கூடாது.


9. Far more money has been lost by investors preparing for corrections or trying to anticipate corrections than has been lost in corrections themselves. 


பங்குச்சந்தை திருத்தங்களில் இழந்த பணத்தை விட அதிகப் பணத்தை முதலீட்டாளர்கள் திருத்தத்திற்குத் தங்களைத் தயார்ப்படுத்தல் மற்றும் திருத்தத்தை எதிர் நோக்கிய செயல்களில் இழக்கிறார்கள்.


10. Ultimately it is not the stock market not even the companies themselves that determine an investor's fate. It is the investor.


கடைமுடிவாக, பங்குச்சந்தையோ அதில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களோ முதலீட்டாளர்களின் விதியைத் தீர்மானிப்பதில்லை. முதலீட்டாளரே அதனைத் தீர்மானிக்கிறார்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்