பணத்தின் நேர மதிப்பு
பணத்தின் நேர மதிப்பு Time value of money Waiting can make you older not richer . காத்திருத்தல் உங்களை வயதானவர் ஆக்குமேயன்றிப் பணக்காரர் ஆக்காது . * * * இன்று கையில் கிடைக்கப்பெறும் பணத்தின் மதிப்பு , அதன் சம்பாதிக்கும் சக்தியால் , எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் பணத்தின் மதிப்பை விட எப்போதும் உயர்ந்தது . இந்த உயர் மதிப்பு பணத்தின் நேர மதிப்பு என்று அழைக்கப்படுகிறது . இன்று உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கிடைப்பதாகக் கொள்ளலாம் . வங்கி சேமிப்புக்கணக்கில் அதனை வைத்திருந்தால் வருடத்திற்கு வட்டியாக 2.75 சதவீதம் (ரூ.2750) கிடைக்கும் . நிரந்தர வைப்பில் வைத்திருந்தால் 6.75 சதவீதம் (ரூ.6750) அதுவே பரஸ்பர நிதி முதலீடாக இருந்து , சந்தை காளைத்தனமாக இருந்தால் 15 சதவீதம் (ரூ.15000) பங்குகளாக வைத்திருந்தால் 20 சதவீதம் (ரூ.20000) இது தான் பணத்தின் நேர மதிப்பு . நீங்கள் முதலீடு செய்யும் முறையைப் பொற...