Jeff Bezos - மணி மொழிகள்
Jeff Bezos - மணி மொழிகள்
1. Big things start small .
பெரிய விஷயங்கள் சிறிதாகவே தொடங்கும் .
2. I know that if I failed I wouldn't regret that but I knew the one thing I might regret is not trying .
நான் முயன்று தோல்வியுற்றால் அதற்காக நான் வருத்தம் கொள்ள மாட்டேன் . ஆனால் முயற்சி செய்யாமல் இருப்பதற்காகக் கண்டிப்பாக நான் வருத்தம் கொள்வேன் .
3. The stock is not the company and the company is not the stock .
நிறுவனப்பங்கு நிறுவனம் அல்ல . நிறுவனம் நிறுவனப்பங்கு அல்ல .
4. I own 16 percent of Amazon . Amazon's worth roughly dollar one trillion . That means that over 20 years we have built dollar 840 billion of wealth for other people , and that's really what we have done from a financial point of view . Those kinds of things are much more meaningful to me , and it's an output measure .
அமேசானின் 16 சதவீதப் பங்குகளை நான் வைத்திருக்கிறேன் . அமேசானின் சந்தை மதிப்பு சற்றேறக்குறைய ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் . இதன் பொருள் என்னவென்றால் கடந்த 20 ஆண்டுகளில் 840 பில்லியன் செல்வத்தை மற்றவர்களுக்காக நாங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம் . நிதிநிலை சார்ந்த என்னுடைய பார்வை என்பது இது தான் . இந்த மாதிரியான எண்ணங்கள் தான் என் வாழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது .
5. We have a lot of failed experiments but the big winners pay for that thousands of failed experiments .
நிறைய தோல்விகரமான பரிசோதனைகளை நாங்கள் நடத்தியிருக்கிறோம் . ஆனால் வெற்றிகரமான ஒரு சில பரிசோதனைகள் ஆயிரக்கணக்கான தோல்விகளைத் தழுவிக் கொள்வதற்கான பண பலத்தையும் மன பலத்தையும் எங்களுக்கு வழங்கியிருக்கிறது .
6. The Internet destroys almost everything but it brings one gift and that is free global distribution .
இணையம் அனைத்தையும் அழித்து விடும் . ஆனால் அதன் கொடை இலவசமான உலகளாவிய வழங்கல் .
7. There are two kinds of persons . The Missionary and the Mercinary . The Mercinaries are trying to flip their stock . The Missionaries love their product , their service and love their customers . Paradoxically the Missionaries are making the most money .
இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் . சேவையாளர்கள் மற்றும் கூலியாளர்கள் . கூலியாளர்கள் அவர்கள் பொருட்களைக் கை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் . சேவையாளர்கள் அதனைக் காலத்திற்கும் கைக் கொண்டிருப்பார்கள் . அவர்கள் உருவாக்கும் பொருட்களின் மேலும் , அவர்கள் தரும் சேவையின் மேலும் , அவர்கள் வாடிக்கையாளரின் மேலும் பேரன்பு கொண்டிருப்பார்கள் . இதன் முரண் மெய் என்னவென்றால் சேவையாளர்கள் தான் அதிகம் பணத்தை ஈட்டுவார்கள் .
8. Success can come through iteration : Invent , Reinvent , Relaunch , Start over , Rinse , Repeat again and again . The path to success is anything but straight .
வெற்றி என்பது மறு செய்கை மூலமாக மலர்வது . கண்டுபிடிப்பு , மறு கண்டுபிடிப்பு , மறு அறிமுகம் , புதிய ஆரம்பம் , அலசி ஆராய்தல் இவைகளை மறுபடி மறுபடி செய்வதில் அது மறைந்துள்ளது . வெற்றியின் பாதை நேர் கோட்டில் இல்லை . அது ஆயிரம் வளைவுகளிலும் திருப்பங்களிலும் நிலை கொண்டுள்ளது .
9. All my best decisions in business and in life have been made with heart , intuition and guts not analysis .
எனது சிறந்த முடிவுகள் , அது வியாபாரமாக இருந்தாலும் சரி அல்லது வாழ்க்கையாக இருந்தாலும் சரி , அவை இதயத்தினாலும் , உள்ளுணர்வினாலும் மற்றும் துணிவுணர்வினாலும் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கின்றன . அலசி ஆராய்வதன் மூலமாக அல்ல .
10. What's going to change over the next ten years ? That's an important question . Much more important question is What's not going to change over the next ten years ?
எதிர் வரும் பத்தாண்டுகளில் எவை மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பது ஒரு சிறந்த கேள்வி . அதை விடச் சிறந்த கேள்வி எதிர் வரும் பத்தாண்டுகளில் எவை மாற்றங்களுக்கு உள்ளாகாமல் இருக்கும் என்பதாகும் .
Excerpts from the book Invent and Wander by Jeff Bezos
Comments
Post a Comment