வாழ்க்கை மொழிகள் - 5
வாழ்க்கை மொழிகள் - 5
1. கணவன் மனைவி சண்டை ஓர் இரவோடு சரி .
2. மனிதக் குஞ்சுகள் பறக்க நாளாகும் .
3. ஒரு தாய்க்கு தன் குழந்தை சொல்லாததும் புரியும் .
4. குழந்தையின் ஓட்டம் தாய் வரைக்கும் .
5. இதயம் எங்கு தங்கியுள்ளதோ அதுவே இல்லம் .
6. வீடு , தரையின் மேல் நிற்கவில்லை . ஓர் பெண்ணின் மேல் நிற்கிறது .
7. வாலிபம் பறந்து செல்கிறது .
8. வாழ்க்கையின் முதல் பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகிறது . இரண்டாம் பகுதி முதல் பகுதிக்காக வருந்துவதில் கழிகிறது .
9. பிடித்தலுக்கும் விடுத்தலுக்கும் இடையிலான சமநிலையே ஞானம் .
10. காலம் தான் தலைசிறந்த வைத்தியர் .
Comments
Post a Comment