வாசிப்பு - சுவாசிப்பு
வாசிப்பு - சுவாசிப்பு
Reading Quotes
1. Books are the plane , and the train , and the road . They are the destination , and the journey . They are home .
- Anna Quindlen
புத்தகங்களே நமது பயண வாகனம் மற்றும் பாதை . அவைகளே நாம் அடைய வேண்டிய இலக்குமாகும் . அவைகளே நம் பயணம் . நம் இல்லம் .
2. Reading makes immigrants of us all . It takes away from home , but more important , it finds home for us everywhere .
வாசிப்பு நம்மை அந்நியர் ஆக்கும் . நம்மை நம் வீட்டை விட்டுக் கொண்டு செல்லும் . ஆனால் மிகவும் முக்கியமாக எல்லா இடங்களிலும் நமக்கு வீட்டை அமைத்துக் கொடுக்கும் .
3. Reading is discount ticket to everywhere - Mary Schmich
வாசிப்பு எல்லா இடங்களிலும் செல்லுபடியாகக்கூடிய தள்ளுபடிச் சீட்டு .
4. Reading is to the mind what exercise is to the body - Joseph Addison
உடம்புக்கு உடற்பயிற்சி மாதிரி மனதிற்கு வாசிப்பு .
5. The unread story is not a story ; it is little black marks on wood pulp . The reader , reading it , makes it live ; a live thing , a story - Ursula K Le Guin
படிக்காத கதை ஒரு கதை அல்ல . அது மரக் கூழில் வைத்த சிறிய கரும்புள்ளிகள் மட்டுமே . படிப்பவர் , படிக்கையில் அந்தக் கதையை உருவாக்குகிறார் .
6. Reading is an act of civilization , it's one of the greatest acts of civilization because it takes the free raw material of the mind and builds castles of possibilities - Ben Ukri
படிப்பது ஒரு பண்பட்ட நடத்தையாகும் . அது மனதின் இலவசமான கச்சாப் பொருட்களைக் கொண்டு சாத்தியக்கூறுகளால் ஆன கோட்டையைக் கட்டுகிறது .
7. Reading should not be presented to children as a chore , a duty . It should be offered as a gift - Kate Dicamillo
வாசிப்பை ஒரு வீட்டுப் பாடம் அல்லது கடமை என்பதாக அல்லாமல் அதனை ஒரு பரிசாக உங்கள் குழந்தைகளுக்கு வழங்குங்கள் .
8. A book is a gift you can open again and again - Garrison Keillor
புத்தகம் என்பது மீண்டும் மீண்டும் திறக்கக்கூடிய ஒரு பரிசு .
9. Reading is dreaming with open eyes .
வாசிப்பு என்பது கண்ணை விழித்துக் கொண்டு காண்பதான ஒரு கனவு .
10. A writer only begins a book . A reader finishes it - Samuel Johnson
எழுத்தாளர் ஒரு புத்தகத்தைத் தொடங்க மட்டுமே செய்கிறார் . வாசகரே அதனை முடிக்கிறார் .
Comments
Post a Comment