Posts

Showing posts from November, 2023

அதிர்ஷ்ட மொழிகள்

அதிர்ஷ்ட மொழிகள் Luck quotes 1. I am a great believer in luck and I find the harder I work , the more I have of it - Thomas Jefferson நான் அதிர்ஷ்டத்தை மிகவும் நம்புகிறேன். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உழைக்கிறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுகிறது. 2. The secret of a lucky life is making the most of a bad moment அதிர்ஷ்டமான வாழ்க்கையின் இரகசியம் , துரதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டத்தின் வேர்களை இனங்காண்பதில் உள்ளது. 3. No one is luckier than the person who believes in his luck - German proverb அதிர்ஷ்டத்தை நம்புகிறவரே மிகப்பெரிய  அதிர்ஷ்டக்காரர். 4. Better an ounce of luck than a pound of gold - Yiddish proverb கிலோ கணக்கில் தங்கம் கிடைக்கப்பெறுவதை விட கிராம் கணக்கில் அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுவது மேலானது. 5. Every wall is a door - Ralph Waldo Emerson ஒவ்வொரு சுவரும் ஒரு கதவு . 6. Luck sometimes visits a fool , but it never sits down with him - German proverb அதிர்ஷ்டம் சிலசமயம் முட்டாள் ஒருவனைச் சந்திக்கும். ஆனால் அவனுடன் கூடிக் குடும்பம் நடத்திக் கொண்டிராது. 7. Luck has ...

நீள் வட்ட சுற்றுச் சாலை

நீள் வட்ட சுற்றுச் சாலை Obliquity உங்கள் முன்னர் இரண்டு பாதைகள் இருக்கின்றன . ஒரு பாதை மேடு பள்ளங்கள் இன்றி சமதளமாக இருக்கிறது . வாகன நெரிசல் குறைவாகவும் ஒரே சீராகவும் இருக்கும் . அவவப்போது எவ்வளவு பாதையைக் கடந்திருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளக்கற்கள் ஆங்காங்கே பதிக்கப் பட்டிருக்கும் . உங்கள் இலக்கை அடைவதற்கான நேரடியான பாதை இது . இன்னொரு பாதை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது . வாகன நெரிசலும் அதிகம் . பெரும்பாலான சமயங்களில் வண்டி ஊர்ந்து மட்டுமே செல்ல முடியும் . அரிதான சந்தர்ப்பங்களில் தெருவே காலியாக வாகன நெரிசல் இன்றி இருக்கும் . அப்போது வண்டி பின்னால் செல்வது போன்ற ஓர் விசித்திரமான உணர்வு ஏற்படும் . ஆனால் வண்டி உண்மையில் முன்னேறித் தான் செல்கிறது . இவ்வாறு முன்னேறிச் செல்வதை அடுத்த நெரிசலின் போது தான் உங்களால் உணர முடியும் . இது மட்டுமல்ல , நீங்கள் உண்மையிலேயே இலக்கை நோக்கித் தான் பயணிக்கிறீர்களா என்பதை உங்களால் தீர்மானமாகச் சொல்ல இயலாது . அடையாளக் கற்கள் ஆங்காங்கே இருந்தாலும் அவை மாற்றி வைக்கப்பட்டிருப்பதான ஒரு தோற்றப் பிழை அவ்வப்போது ஏற்படும் . மேலும் உங்கள் இலக்கை அடைய இது ஒரு சுற்று...

வாசிப்பு - சுவாசிப்பு

வாசிப்பு - சுவாசிப்பு Reading Quotes 1. Books are the plane , and the train , and the road . They are the destination , and the journey . They are home . - Anna Quindlen  புத்தகங்களே நமது பயண வாகனம் மற்றும் பாதை . அவைகளே நாம் அடைய வேண்டிய இலக்குமாகும் . அவைகளே நம் பயணம் . நம் இல்லம் . 2. Reading makes immigrants of us all . It takes away from home , but more important , it finds home for us everywhere . வாசிப்பு நம்மை அந்நியர் ஆக்கும் . நம்மை நம் வீட்டை விட்டுக் கொண்டு செல்லும் . ஆனால் மிகவும் முக்கியமாக எல்லா இடங்களிலும் நமக்கு வீட்டை அமைத்துக் கொடுக்கும் .  3. Reading is discount ticket to everywhere - Mary Schmich  வாசிப்பு எல்லா இடங்களிலும் செல்லுபடியாகக்கூடிய தள்ளுபடிச் சீட்டு . 4. Reading is to the mind what exercise is to the body - Joseph Addison உடம்புக்கு உடற்பயிற்சி மாதிரி மனதிற்கு வாசிப்பு . 5. The unread story is not a story ; it is little black marks on wood pulp . The reader , reading it , makes it live ; a live thing , a story - Ursula K Le Guin படிக்காத க...

கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா ?

கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா ? பங்குச்சந்தை உட்பட எதனையும் முன்கணிக்க எனக்குத் தெரியாது . வாரன் பஃபெட் சொன்னது மாதிரி , முன் கணிப்புகள் , முன் கணிப்புகளை விட , முன் கணிப்பாளர்களையே அதிகம் கணிக்கின்றன . ஆனால் , எந்த ஆட்டத்திலும் , கிரிக்கெட் உட்பட , வெற்றி பெறுவதற்கான பொதுவான வழிமுறைகள் உள்ளன . அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம் . 1. களத்தில் நில்லுங்கள் . எந்த ஆட்டத்திலும் வெற்றி பெறுவதற்கான அடிப்படையான ஒரு குணம் இது . கிரிக்கெட்டில் சிறந்த மட்டையாளர்கள் முதன்முதலில் களம் இறங்குவர் . இவர்கள் நீண்ட நேரம் களத்தில் தாக்குப் பிடித்து நின்றால் அந்த அணியின் வெற்றி வாய்ப்பிற்கு அது ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் . கிரிக்கெட்டில் இது Partnership என்பதாக அழைக்கப்படும் . முதல் விக்கெட்டிற்கு 50 ஓட்டங்கள் , இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ஓட்டங்கள் ... என்று ஒரு அணியின் ஆட்டம் அமையுமானால் அதன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் . பங்குச்சந்தையிலும் களத்தில் நிற்றல் என்பது அதிமுக்கியமான ஒரு அடிப்படையாக அமைகிறது . நான் சந்தை சாதகமாக இருக்கும் போது (காளைச்சந்தை என்று படிக்கவும்) ஆடுவேன் ...