ஜென் மொழிகள்
ஜென் மொழிகள்
Zen Quotes
1. Pain is certain . Suffering is optional .
வாதை நிச்சயமானது . வதைபடுவது விருப்பத்திற்கு உட்பட்டது .
2. Zen is to be present in the present .
ஜென் என்பது நிகழ்காலத்தில் நிலை கொள்வது .
3. Obstacles don't block the path . They are the path .
தடைகள் பாதையைத் தடுப்பதில்லை . தடைகளே பாதைகள் .
4. You only live once ... False . You live everyday . You only die once .
நீங்கள் ஒரேயொரு முறை மட்டுமே வாழ்கிறீர்கள் என்பது தவறு . நீங்கள் தினம் தினம் வாழ்கிறீர்கள் . ஒரேயொரு முறை மட்டுமே இறக்கிறீர்கள் .
5. It is better to travel well than to arrive .
நன்றாகப் பயணிப்பது வந்தடைவதை விட முக்கியமானது .
6. Life is a balance of holding on and letting go .
பிடித்தலுக்கும் விடுத்தலுக்கும் இடையிலான சமநிலையே வாழ்க்கை .
7. If you chase two rabbits you catch none .
இரண்டு முயல்களைத் துரத்தினால் எதனையும் நீங்கள் பிடிக்க மாட்டீர்கள் .
8. The more you know , the less you need .
நிறைய தெரிந்தவருக்குக் குறைவான தேவைகளே இருக்கும் .
9. Preoccupied with a single leaf you won't see the tree .
ஒற்றை இலையையே ஆராய்ந்து கொண்டிருந்தால் மரம் கண்களுக்குப் புலப்படாது .
10. Don't rush anything . When the time is right it'll happen .
எதனையும் விரைவு படுத்தாதீர்கள் . காலம் கனிகையில் அது கைகூடும் .
Comments
Post a Comment