Nick Murray - சொ(பொ)ற்குவை

Nick Murray - சொ(பொ)ற்குவை

1. All successful equity investing is first and foremost an act of faith in the future .

வெற்றிகரமான பங்கு முதலீடுகள் , அடிப்படையில் , எதிர்காலம் குறித்த நம்பிக்கை மட்டுமே .


2. People greatly overestimate the long-term risk of owning stocks and underestimate the long-term risk of not owning stocks .

மக்கள் , பங்கு முதலீடுகளின் நீண்ட கால அபாயம் குறித்து மிகை மதிப்பீடு செய்பவர்களாகவும் பங்கு அல்லாத முதலீடுகளின் நீண்ட கால அபாயம் குறித்து குறை மதிப்பீடு செய்பவர்களாகவும் இருக்கின்றனர் .


3. Volatility isn't risk. Temporary decline isn't loss .

ஏறி இறங்கும் தன்மை அபாயம் அல்ல . தற்காலிக இறக்கம் நஷ்டம் அல்ல .


4. You should never make an investment decision primarily based on taxes .

ஆதாரமான முதலீட்டு முடிவுகளை வரி சேமிப்பின் மேல் கட்டாதீர்கள் .


5. Dollar cost averaging is the best portfolio manager the world has ever known .

பண சராசரியே இந்த உலகின் ஆகப்பெரிய பங்குத் தொகுப்பு மேலாளர் .


6. The single most important variable in the quest for equity investment success is also the only variable you ultimately control : your own behaviour .

பங்கு முதலீட்டு வெற்றிக்கு முழுமுதற்காரணமும் உங்களால் கட்டுப்படுத்தக் கூடிய ஒரேயொரு காரியமும் ஒன்றே ஒன்று தான் . அது சந்தை குறித்த உங்கள் பார்வை மட்டுமே .


7. Absolute certainty is not a condition that exists in the nature and there's no such thing as no risk .

திட்டவட்டம் என்பது இயற்கையில் எங்கும் காணப்படுவதாக இல்லை , அபாயமின்மை என்பதும் அதில் இல்லை .


8. The right time to buy equities is always when you have the money . The only time to sell them is when you need the money . Otherwise ... Just let them grow .

உங்கள் கையில் பணம் இருக்கும் தருணமே பங்குகளை வாங்குவதற்கான தருணம் . உங்களுக்கான பணத் தேவைப்பாடு எழும் நேரமே பங்குகளை விற்பதற்கான நேரம் . மற்றபடி பங்குகளை அதன் போக்கில் வளர விடுங்கள் .


9. Stock market is a never ending emotional battle between fear of the future and faith in the future .

எதிர்காலத்தைக் குறித்த பயம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை என்ற இரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையிலான போராட்டமே பங்குச்சந்தை .


10. Equities don't make people wealthy . People make themselves wealthy .

பங்குகள் மக்களைப் பணக்காரர் ஆக்காது . மக்கள் தங்களைத் தாங்களே தான் பணக்காரர் ஆக்க முடியும் .

Extracts from the book Simple Wealth Inevitable Wealth by Nick Murray

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்