பழக்க வழக்க மொழிகள்

பழக்க வழக்க மொழிகள்

Habits Quotes


1. We are what we repeatedly do. Excellence , then , is not an act , but a habit 

- ARISTOTLE

தொடர்ந்து நாம் எதனைச் செய்கிறோமோ அதுவே நாம் . ஆக , மேன்மை என்பது செயல்பாடு அல்ல அது வெறும் பழக்கம் மட்டுமே .


2. Your net worth to the world is usually determined by what remains after your bad habits are subtracted from your good ones

- BENJAMIN FRANKLIN

நிகர மதிப்பு என்பது உங்கள் நல்ல பழக்கங்களிலிருந்து தீய பழக்கங்களைக் கழித்தால் கிடைக்கப்பெறுவது .


3. Chains of habit are too light to be felt until they are too heavy to be broken 

- WARREN BUFFETT

பழக்கம் என்பது முதலில் நூலாம்படை . முடிவில் இரும்புச் சங்கிலி .


4. The second half of a man's life is made up of nothing but the habits he has acquired during the first half

- FEODAR DOSTOEVSKY

ஒரு மனித வாழ்க்கையின் இரண்டாம் பாதி , முதல் பாதியில் கைக்கொண்ட பழக்க வழக்கங்களால் ஆகப் பெற்றதாகும் .


5. I can predict the long-term outcome of your success if you show me your daily habits 

- JOHN MAXWELL

உங்கள் தினசரி பழக்க வழக்கங்களைக் கூறுங்கள் . உங்கள் எதிர்கால வெற்றி குறித்து நான் கூறுகிறேன் .


6. Success is the sum of small efforts repeated day in day out

 - ROBERT COLLIER

வெற்றி என்பது நீங்கள் அன்றாடம் கடைப்பிடிக்கும் சின்னஞ்சிறிய முயற்சிகளின் கூட்டுத்தொகை மட்டுமே .


7. We first make our habits and then our habits make us 

- JOHN DRYDEN

நாம் முதலில் பழக்கங்களை உருவாக்குகிறோம் . பின்னர் பழக்கங்கள் நம்மை உருவாக்குகின்றன. 


8. I fear not the man who has practiced 10000 kicks , but I do fear the man who has practiced one kick 10000 times 

- BRUCE LEE

10000 முறை உதைக்கும் பயிற்சி எடுத்தவனைக் குறித்து எனக்கு பயம் ஏதுமில்லை . ஆனால் ஒரேயொரு உதைப் பயிற்சியை 10000 முறை பயின்றவனிடம் நான் பயம் கொள்கிறேன் .


9. Life is a habit or rather life is a succession of habits 

- SAMUEL BECKETT

வாழ்க்கை என்பது பழக்கம் . அல்லது தொடர்ந்த வாக்கிலான பழக்க வழக்கம்.


10. Sow a thought , reap an action . Sow an action , reap a habit . Sow a habit , reap a character . Sow a character , reap a destiny

STEPHEN COVEY

எண்ணம் ஒன்றை விதையுங்கள் . செயல்பாடு ஒன்றை அறுவடை செய்யுங்கள் . செயல்பாடு ஒன்றை விதையுங்கள் . பழக்கம் ஒன்றை அறுவடை செய்யுங்கள் . பழக்கம் ஒன்றை விதையுங்கள் . குணம் ஒன்றை அறுவடை செய்யுங்கள் . குணம் ஒன்றை விதையுங்கள் . பாக்கியம் ஒன்றை அறுவடை செய்யுங்கள் .

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14