பண மொழிகள்

பண மொழிகள்


1. அறிவில் முதலீடு செய்வது அளவற்ற செல்வத்தைத் தரும் - Benjamin Franklin


2. வாய்ப்பு என்பது வேலை என்ற முக்காடைப் போட்டுக் கொண்டு வருவதால் நிறையப் பேர் அதனைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர் 

- Thomas Alwa Edison


3. சிக்கனம் என்ற நல்லொழுக்கம் மற்ற எல்லா நல்லொழுக்கங்களையும் உள்ளடக்கியது

- Cicero


4. உங்களிடம் உள்ள அனைத்துப் பணத்தையும் இழந்த பின்னர் உங்கள் மதிப்பு என்னவாக இருக்கிறதோ அது தான் உங்கள் உண்மையான மதிப்பு 


5. முறைசார் கல்வியைக் கற்றுக் கொண்டு நாம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். சுய கல்வியே நற்பேறு, சொத்து மற்றும் அதிர்ஷ்டத்தைத் தரவல்லது 

- Jim Rohn


6. சொத்து என்பது எல்லாப் பொருட்களையும் வைத்திருப்பதில் இல்லை. மாறாக அது குறைவான விருப்பங்களில் உள்ளது 

- Epictetus


7. நாம் சம்பாதிப்பதை வைத்துக் கொண்டு வாழலாம். ஆனால் நாம்  என்ன கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே வாழ்வாங்கு வாழ முடியும் 

- Winston Churchill


8. நிறையப் பணம் வைத்திருக்கக் கூடிய ஒரு ஏழையாக நான் வாழ விரும்புகிறேன் 

- Pablo Picasso


9. ஒரு வியாபாரம் பணத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டிருக்குமானால் அது ஒரு நல்ல வியாபாரம் அல்ல 

- Henry Ford


10. உங்களிடம் உள்ள பணத்தை உங்களால் கணக்கிட முடிந்தால் நீங்கள் பணக்காரர் அல்ல 

- Paul Ketty

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

Daniel Crosby - மணி மொழிகள்

பங்குச்சந்தை பதில்கள் - 14